ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டு அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது. இதற்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாட்டில் ஒழிக்க முடியாத ஒரு பிரச்சனையாக இன்று அரசியலில் ஊழல் இருந்து வருகிறது. இது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பத்திரிக்கையாளராக பணியாற்றிய போது, என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அந்த பொய் வழக்கு சுமார் 7 ஆண்டு காலத்திற்கு மேலாக நீதிமன்றம் செல்ல வேண்டி இருந்தது .அப்போது நாங்கள் எங்கள் குடும்பத்தை பார்ப்போமா? அல்லது இந்த சமூக அவலங்களுக்கு எதிராக போராடுவோமா? என்ற நிலைமையில் வாழ்ந்து கொண்டிருந்தோம்.
அதை எல்லாம் எதிர்த்து எத்தனையோ பிரச்சனைகளை சமாளித்து சுமார் 15 ஆண்டு காலத்திற்கு மேலாக வழக்குகளை பொது பிரச்சனைகளுக்காக சந்தித்துள்ளோம். அது மட்டுமல்ல ,எத்தனை வசை சொற்கள், குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகள்? இதையெல்லாம் தாண்டி நாங்கள் இந்த பத்திரிகை துறைக்கு வந்து போராட வேண்டி இருக்கிறது. இந்த சமூக நலன் கருதி போராடி நடத்தி வரும் இந்த பத்திரிகைகள் கூட செய்தி துறை அதிகாரிகள் இதற்கு சரியான ஒரு அங்கீகாரத்தை வழங்கி இந்த பத்திரிகைகளுக்கு எல்லாம் ஒரு தகுதியின் அடிப்படையில் கூட இதுவரை சலுகை விளம்பரங்கள் கொடுப்பதில்லை .இது மிகுந்த வேதனைக்குரியது.
நாட்டில் உண்மையாக உழைப்பவர்கள் அவர்களுக்குரிய பங்களிப்பு சமூகத்திலும் ,அரசும் இதுவரை அதைப் பற்றி திரும்பிக் கூட பார்க்கவில்லை என்றால், இதற்கு என்ன அர்த்தம் ? இனி இதற்கு நீதிமன்றம் தான் தீர்வு .இதை மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. ஒருவேளை இந்த செய்தி துறை அதிகாரிகளுக்கு இது பற்றிய உண்மைகளை மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எமது பத்திரிக்கையில் தெரிவித்து வருகிறேன்.
ஆனால், அதற்கான எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை. பத்திரிகை என்பது அரசின் சுயநலக் கொள்கை முடிவா? அல்லது பொது நலக் கொள்கை முடிவா? பொதுநலக் கொள்கை முடிவு என்றால், எல்லா பத்திரிகைகளுக்கும் தகுதியின் அடிப்படையில் சமமாக சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்.
இதில் தினசரி, வார இதழ், மாத இதழ் இவற்றில் உள்ள பத்திரிகைகள் தரமும், தகுதியும் இல்லாமலே பலவற்றிற்கு சலுகை, விளம்பரங்கள் தங்களுக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு 50 ஆண்டு காலமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு தவறான விதிமுறை.
அடுத்தது சர்குலேஷன் என்ற அடிப்படையிலும், தினசரி பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் இலவச பஸ் பாஸ் மற்றும் அக்ரடேஷன் கார்டு பற்றி எதன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது? அதனால், மக்களுக்கு என்ன பயன்? எத்தனை செய்திகள் ஒரு நாளைக்கு இந்த பத்திரிகைகள் மக்களுக்காக பயனுள்ள செய்திகளை வெளியிடுகிறது? முக்கிய செய்திகள், கருத்துக்கள் மட்டுமே மக்களுக்கு தேவையானது.இதையெல்லாம் ஆய்வு செய்யாமல் சர்குலேஷன் என்ற விதி முறை தவறானது.
இன்று எல்லாமே சமூக வலைதளம், ஆன்லைன், இணையதளம் இவையெல்லாம் மக்களின் வாழ்க்கையில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் போது, பத்திரிகைகளை வாங்கி படிப்பவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள். அப்படி இருக்கும் போது சர்குலேஷன் என்ற ஒரு விதிமுறை ஏமாற்று விதிமுறை தானே, மேலும்,
பொய்யான செய்திகளையும், கட்சி செய்திகளையும், வியாபார நோக்கம் உள்ள செய்திகளையும், கொடுத்து மக்களின் வரிப்பணத்தை எதற்கு வீணடிக்கிறார்கள்? தினமும் இந்த பத்திரிகைகளில் அப்படிப்பட்ட செய்திகள் என்னென்ன என்பதை செய்தித் துறை அதிகாரிகள் விளக்க முடியுமா? மேலும், இது கமிஷனுக்காக இந்த சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்படுகிறதா? அல்லது தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு, ஆட்சியாளர்களின் பரிந்துரையில் கொடுக்கப்படுகிறதா? எதன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது ?
மக்கள் பிரச்சினைகளுக்கு, ஊழலுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு, போராடத பத்திரிகைகள் அரசு செய்திகளையும், கட்சி சார்ந்த நிகழ்வுகளையும் ஆட்சியாளர்களின் வந்தது, போனது போன்ற செய்திகளை நோகாமல் போட்டுவிட்டு, சலுகை, விளம்பரங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பது பத்திரிகை துறைக்கு ஏற்பட்டுள்ள சமூக நீதியின் அவலம். இதற்கு நீதிமன்றம் தான் ஒரே தீர்வு.
அங்கும் அரசியல் இதில் உள்ளே வராமல், சமூக நன்மைக்கான போராடுகின்ற பத்திரிகைகளுக்கு உரிமைகள் பெற தகுதியின் அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்பதுதான் சமூக நலன் கருதி போராடும், பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகளின் முக்கிய கோரிக்கை.
விரைவில் அதற்கான வழக்கு மக்கள் அதிகாரம் சார்பில் தொடர உள்ளேன் . அது சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு! அது நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பாக இருக்கும் என்பது பத்திரிகையாளர்களின் நம்பிக்கை.