ஐஏஎஸ் அதிகாரி திவ்யா மிட்டல் தனது வேலையை ராஜினாமா செய்து, புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் – வரலாறு படைக்குமா ஜன்நீதி பாராத் ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜன்நீதி பாரத் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள ஐ.ஏ .எஸ் அதிகாரி திவ்யா மிட்டல் 13 ஆண்டு காலம் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். தற்போது வேலையை ராஜினாமா செய்து விட்டு, ஜன்நீதி பாரத் (janithi Bharat )அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

இந்த அரசியல் கட்சி மக்களை மையப்படுத்தி, முன்னெடுக்கும் அரசியல், குறிப்பாக மக்களுக்கான ஆட்சியாக தெரிவித்துள்ளார்.

மேலும், இவருடைய பின்னணி
2013: ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். இவருடைய
கல்வி டெல்லி ஐஐடி (IIT Delhi), பெங்களூரு ஐஐஎம் (IIM Bangalore) ஆகிய நிறுவனங்களில் பயின்றவர்.


தவிர,பணியனுபவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மிர்சாபூர், தியோரியா, சந்த் கபீர் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.
ஆகஸ்ட் 30, 2026, ஐஏஎஸ் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.பிறகு,


செப்டம்பர் 15, 2026: அவரது ராஜினாமாவை உத்தரப் பிரதேச அரசு ஏற்றுக்கொண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும்,
அக்டோபர் 15, 2026, புதிய அரசியல் கட்சியை அறிவித்து, 2027 உத்திரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இவருடைய துணிச்சல் பாராட்ட வேண்டிய ஒன்று. ஒரு ஐஏஎஸ் படித்த பெண்மணி, அரசியல் கட்சியை தொடங்கி, ஒரே ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பது, இவருக்குள்ள செல்வாக்கா? இல்லை பணமா? இல்லை மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையா? எது என்பது ?தேர்தலில் போட்டியிட்ட பிறகு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *