ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் கனிம வள விதிமுறைகளையும்,கனிம வள கொள்ளையையும் ,தடுக்க ஒரே வழி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுத்தால் தான், மணல் கொள்ளை, சவுடு மண் கொள்ளை, கிரானைட் கொள்ளை ,கிராவல் மண் கொள்ளை, மலை மண் கொள்ளை, மலை கல் கொள்ளை ,இப்படி அனைத்து கனிம வள கொள்ளைகளிலிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், இவர்கள் மீது நஷ்ட ஈடு மற்றும் ஜெயில் தண்டனை கொடுத்தால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

ஏனென்றால், இந்த கனிம வளங்களை பொறுத்த அளவில், இவர்கள்தான் முக்கிய அரசு அதிகாரிகளாக அதில் கையெழுத்து இடுகின்றனர். அதுமட்டுமல்லாமல், கிராமங்களில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இதைப் பற்றி புகார் அளித்தாலோ அல்லது பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டாலோ கண்டு கொள்வதில்லை.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு இந்த கனிம வளத்தை காப்பாற்ற மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகைகளிலும், இணையதளத்திலும் மக்கள் அதிகாரம் செய்தியை வெளியிட்டுள்ளது. அதற்கு தமிழக அரசு இதற்கு ஒரு கடிவாளத்தை போட்டு உள்ளது. அது என்னவென்றால்,

தமிழக முழுதும் உள்ள அரசு நிலங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் திருட்டில் பயனடைந்த அரசு அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அரசின் புதிய விதிமுறை கொண்டு வரும் போதே தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் அவசர கூட்டம் நடத்தி, தமிழக அரசின் புதிய விதிமுறைகளால் கல்குவாரி கிரஷர் தொழிலுக்கு பாதிப்புகள் ஏற்படும் இதைக் கண்டித்து கிரஷர் கல்குவாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
அப்படி என்றால், இதுவரை அரசு நிலங்களில் இந்த கனிமவள கொள்ளைக்கு உடந்தையாய் இருந்தது மாவட்ட ஆட்சியர்களும் ,மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளும் என்பது இதன் மூலம் கிரஷர் கல் குவாரி உரிமையாளர்களின் கால வரையற்ற வேலை நிறுத்தம் இதை ஊர்ஜிதப்படுத்துகிறது.
.jpg)
மேலும், அதேபோல் அனைத்து அரசு குவாரிகளில் இது போன்ற தனியாரும், தனியார் அமைப்புகளும், அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கனிம வள கொள்ளைகளை நடத்தி வருகின்றன. அதற்கு, தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் மீது நஷ்டஈடு, ஜெயில் தண்டனையும், கொடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கை எடுத்தால் தான், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
%20(1)%20(1).jpg)
மூன்றடி ஆழத்திற்கு மேல் மணல் அல்லது சவுடு மண் எடுக்க கூடாது என்றால், ஏரி ஆறுகளில் கிணறு தோண்டும் அளவிற்கு கனிம வளத்தை கொள்ளை அடிக்கிறார்கள். அதையெல்லாம் ஆய்வு செய்யாத மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றால், இவர்களும் அதன் கூட்டுக் கொள்ளை என்பது ஊர்ஜிதமான ஒன்று. எனவே ,இதை எல்லாம் மத்திய அரசு கனிம வள கொள்ளையை தடுக்க நாடு முழுவதும் சட்ட நடவடிக்கை தேவை என்பது சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கை.
இதனால், பல கிராமங்களில் சமூக ஆர்வலர்கள் மீது காவல்துறையினரால் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. தட்டி கேட்டவர்கள் மீது மிரட்டல்களும், ரவுடியிசமும், கட்ட அட்டவிழ்த்துவிடபடுகிறது. மேலும் சில நேர்மையான விஏஓ போன்ற அதிகாரிகள், நேர்மையான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை மற்றும் மிரட்டல்கள் போன்றவற்றை மணல் மாபியாக்கள் நடத்தி இருப்பது கடந்த கால சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்துள்ளன.
எனவே ,இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இது போன்ற கொள்ளைகளை தடுக்க வேண்டும் என்றால்,தமிழக அரசுதான் கடும் சட்டம் கொண்டு வர வேண்டும். ஆனால், இவர்களுக்கு அரசாங்கம் ஆதரவாக இருப்பதால், இது போன்ற கொள்ளை நடவடிக்கை கனிமவளத்துறையில் தொடர்கிறது.
தமிழக அரசு நடவடிக்கை எடுத்தாலும், எடுக்கவில்லை என்றாலும், மத்திய அரசு, இயற்கை வளங்களை, கனிம வளங்களை பாதுகாக்க நாடு முழுவதும் கடும் சட்ட நடவடிக்கை தேவை என்பது சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கை.