ஜூலை 23, 2024 • Makkal Adhikaram
காஞ்சிபுரம் மாநகராட்சியில் எந்த வேலையும், மக்களுக்காக நடைபெறவில்லை. எங்கள் வார்டு பகுதிகளில் செய்ய வேண்டிய மக்கள் பணிகள் பற்றி மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மற்றும் ஆணையர் நாங்கள் சொல்வதை கேட்பதில்லை. எங்கள் பகுதியில் செய்ய வேண்டிய வேலைகள் எதுவும் செய்வதில்லை.
இவர்கள் இருவரும் மாநகராட்சியில் வருகின்ற நிதியை எல்லா வார்டுகளுக்கும் பகிர்ந்த அளித்து மக்கள் பணிகளை செய்தால், இப் பிரச்சனை வராது. ஆனால் மாநகராட்சி மேயர் லட்சுமி சொல்வதை தான் ஆணையர் கேட்கிறார். அவருக்கு பெரும்பான்மையான கவுன்சிலர்கள் ஆதரவு இல்லை.இருக்கின்ற குறுகிய காலத்தில் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டிய பணிகள் நாங்கள் செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருக்கிறோம் .
ஆனால், இவர்கள் மாநகராட்சிக்கு வருகின்ற நிதியிலிருந்து எவ்வளவு எடுக்கலாம் ?என்ற ஆதங்கத்தில் அவர்கள் இருக்கிறார்கள். இந்த மோதல்தான் தொடர்ந்து கவுன்சிலர்கள் போராட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் தொடர்கிறது என தெரிவித்துள்ளனர்.
இது பற்றி நகராட்சிகளின் ஆணையரோ அல்லது தமிழக முதல்வரோ அல்லது தலைமைச் செயலாளரோ, இப் பிரச்சனை என்னவென்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாநகராட்சியின் பெரும்பான்மை கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .