செப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram
குழந்தை திருமணம் பற்றி பலமுறை தகவல் தெரிவித்தும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் குழந்தை திருமணம் நடத்தி இவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகம் ( சமூக ஆர்வலர்கள்) சார்பாக முதலமைச்சர் தனி பிரிவிற்கு இன்று கடிதம் அனுப்பினர்.
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை :-
தமிழகம் முழுவதும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகப்படியாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. முந்தைய ஆட்சி காலத்தில் குழந்தை திருமணம் தடுப்பதற்காக குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் திருமணத்தின் போது வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் 18 வயது முடிவடைந்து விட்டது என்பதற்கான சான்றை ஆவணங்கள் சமர்ப்பித்து, மணமகன் மற்றும் மணமகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த சான்றை கோவிலில் திருமணம் செய்பவர்கள் கோவில் நிர்வாகத்திடம் கொடுத்து திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காலப்போக்கில் அதை தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு மட்டும் திருமணம் நடப்பதற்கான உத்தரவு வழங்கவும்,18 வயதிற்கு குறைவாக இருந்தால் அந்த மாவட்ட ஆட்சியாளருக்கு தகவல் தரும்படியும் உத்தரவு பிறப்பிக்கும்படி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, கடிதம் எழுதப்பட்டிருந்தது.
மேலும்,நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டாரத்தில் குழந்தை திருமணங்கள் அதிகப்படியாக நடக்கிறது. இதை தடுப்பதற்காக சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு சமூக அலுவலர் என்ற அடிப்படையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியாளருக்கு மனு கொடுத்தும்,தொலைபேசி வாயிலாக தகவல் கொடுத்தும், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும் தொலைபேசி வாயிலாக குழந்தை திருமணம் நடைபெறுவதை அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது, 15 வயதில் இருந்து 17 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகப்படியாக திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இதையும் மாவட்ட ஆட்சியாளருக்கும் சமூக நலத்துறைக்கும் தகவல் கொடுத்தும், ஆனால் குழந்தை திருமணம் நடத்தியவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோன்று பள்ளிபாளையம் வட்டாரத்தில் ஏராளமான குழந்தை திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியாளருக்கும் சமூக நலத்துறைக்கும்,
அனைவரையும் குறைந்த வயதில் திருமணம் செய்து கொண்டு மருத்துவம் பார்க்கச் சென்றால் வயதை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியாளருக்கும் சம்பந்தப்பட்ட காவல்துறைக்கும் தகவல் தரும்படியும், உத்தரவிடும்படியும். தொடர்ந்து வரும் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த விழிப்புணர்வு கொடுக்கும் முடியும். குழந்தை திருமணம் நடத்தி வைக்கும் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் படியும், அங்கன்வாடி பணியாளர்களையும், துணை பணியாளர்களையும் அவர்கள் பகுதியிலேயே பணி செய்யாமல் மாற்றுப் பகுதியில் பணி அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.