சங்கி என்றால் என்ன? சங்கி என்று சொல்பவர்களுக்கு அர்த்தம் தெரியுமா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சங்கி என்றால் என்ன?

பாஜகவினர் மற்றும்
ஆர்எஸ்எஸ் கொள்கையை கடைப்பிடிப்பவர்களை தமிழ்நாட்டில் இன்றைய எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், சங்கி என்று விமர்சிக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக திமுக ஐ டி விங்,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
இவர்களை விமர்சிக்கும் போது சங்கி என்கிறார்கள். இது என்னடா புது பேராக இருக்கிறதே என்று நானும் ஆச்சரியத்துடன் தான் அதை பார்த்தேன். இதற்கு என்ன அர்த்தம் இவர்கள் அர்த்தத்துடன் சொல்கிறார்களா? இல்லை,அவர்களுக்கு பெயரை வைத்து சொல்கிறார்களா? எதுவும் புரியவில்லை.

சங்கி என்றால் ஒருவேளை விஷயம் தெரிந்தவர்களாக இருப்பார்களோ, இவர்களுடைய கண்ணோட்டத்தில் அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் பாஜகவை சேர்ந்தவர்களும்,ஆர்எஸ்எஸ் காரர்களும், பேசும்போது அரசியலில் பல விஷயங்கள் தெரிந்தவர்களாக தான் பேசுவார்கள். அதையெல்லாம் சிலர் தெரிந்து வைத்து தான் பேசுகிறார்கள். அது தவறு என்றும் சொல்ல முடியாது.அது அவர்களுடைய திறமை.

ஆனால், இவர்களுடைய பொய்யும்,புரட்டுக்கும் அரசியல் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு இது தான் அரசியல் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்களிடம் உண்மையை உடைத்து பேசும்போது, இவர்களுக்கு ஏதாவது ஒரு பெயரை சொல்ல வேண்டும். ஏனென்றால் பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே பேசி,பேசி ஆட்சி பிடித்த திமுகவின் அரசியல் வரலாறுக்கு, பிஜேபியின் அரசியல்!எந்த காலத்திலும் ஒத்து போகாது. தமிழ்நாட்டில் அவர்களுடைய ஃபீல்டு ஒர்க் இங்கு இல்லை என்றாலும், இவர்களைப் போல் பேசுவது அங்கே இருக்காது. தமிழ்நாட்டில் பிஜேபி பீல்ட் ஒர்க் செய்தால் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்க முடியும்.

மேலும், ரவுடிசத்தை கொண்டு வந்து அரசியல் கட்சியில் சேர்த்து, வீர வசனம் பேசி விட்டு, போவது தமிழ்நாட்டு மக்கள் அரசியல் என்றால் என்ன? என்று புரிந்து கொள்ளாத வரை, இந்த ஏமாற்றங்கள் தொடரும். அதை உடைத்து பேசும் ஆர்எஸ்எஸ் கொள்கை உடையவர்கள் சங்கி ஆக தெரிகிறார்களா? உண்மையிலேயே இந்த ஆர்எஸ்எஸ் காரர்கள் யார்? இவர்கள் அனைவரும் இந்த தேசத்தின் பற்றாளர்கள், உணர்வாளர்கள். இவர்களை தேசவிரோதி போல் பேசிக் கொண்டிருக்கும் திருமாவளவன் யார்?என்பது அந்த சமுதாயத்திற்கு புரியவில்லை.

பணத்தை மட்டும் பார்த்தால், ஒரு பொருளின் தரம் தெரியாது. தரத்தை மட்டும் பார்த்தால் அந்த பொருளின் (பணம் )மதிப்பு அங்கே தெரியாது. இதுதான் வித்தியாசம். மக்கள் பார்க்கின்ற பார்வை பணத்தை மட்டுமே பார்க்கிறார்களே ஒழிய,

ஒழுக்கம், நேர்மை, நல்ல சிந்தனை,இதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு, எப்படி சம்பாதித்தாலும்,அரசியலில் சம்பாதித்து விட்டான். அவன் ஊரை ஏமாற்றினால் என்ன? உலகத்தை ஏமாற்றினால் என்ன? அதுவும் பணம் தானே! அதனால் நம் மக்களுக்கு நேர்மை, ஒழுக்கம்,உள்ள அரசியல்வாதிகளை பிடிக்காது. அவர்களெல்லாம் சங்கிகளாகத்தான் அவர்களுக்கு ஒருவேளை தெரிவார்களோ,

அப்படிப்பட்ட மக்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சியினரும் அரசியல் வரலாறு மற்றும் அரசியலின் உண்மை,நேர்மை,1965 க்கு முன், இருந்த அரசியல்வாதிகள் எப்படி இருந்தார்கள்?என்பது புரிந்து கொண்டால், இப்போது இவர்களின் பொய்களை ஒருவன் கூட நம்ப மாட்டான்.

அப்படி என்றால், அந்தப் படிக்காத பாமர மக்கள் எவ்வளவு ஒழுக்கத்துடன்,நேர்மையுடன் வாழ்ந்தார்கள்? என்பதை இன்றைய படித்த சமுதாயம் சிந்தித்துப் பார்ப்பார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *