
தமிழ்நாட்டில் அரசியல் சுயநலமாகவும் ,வியாபாரமாகவும் மாறி, ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு அரசியல் களத்தை உருவாக்கியுள்ளது.

இதற்கு யார் காரணம்? மக்களின் அரசியல் அறியாமை முக்கிய காரணம். மக்களின் சுயநலம் முக்கிய காரணம். இன்றைய படித்த சமுதாயமும் சுயநலமாக இருப்பது இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒரு லாபமே. இந்த வியாபாரிகள் பணத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்குப் பின்புலம் கார்ப்பரேட் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் என்பதை தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்வார்களா? இந்த கார்ப்பரேட் பத்திரிகை வியாபாரமும், அரசியல் வியாபாரமும் இணைந்தே செயல்படுகிறது. இது பற்றி பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கே இந்த உண்மை புரியாது.

மேலும், மக்கள் நலனுக்காகவும் ,சமூக முன்னேற்றத்திற்காகவும் அரசியல் செய்யக்கூடிய அரசியல் கட்சிகள் நாட்டில் எத்தனை இருக்கிறதா? நேர்மையான அரசியல்வாதிகள் எவ்வளவு பேர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள்? என்பதை மக்கள் எப்போது சிந்திக்கப் போகிறார்கள்? மேலும் ,
இந்த அரசியல் வியாபாரிகள், திமுகவை விட்டு அதிமுக, தவெக, பாஜக என்று பல அரசியல் கட்சிகளுக்கு இந்த வியாபாரிகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுடைய நோக்கம் பதவி, அதிகாரம், கோடிக்கணக்கில் அரசியல் வியாபாரம், இத நோக்கி இவர்களுடைய நகர்வு.

மேலும், இன்றைய அரசியல் என்பது,இன்று அவரவர் ,சுயநலமாக அரசியல் ஆகிவிட்டது. இதில் கூலிக்கு மாரடிக்கும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், இந்த அரசியல் வியாபாரத்திற்கு அவர்களை மக்களிடம் அதாவது அரசியல் தெரியாதவர்களிடம் ,நல்லவர்களாக முன்னிலைப்படுத்துகிறது. இதற்கு காரணம்,

நல்லவர்களாக மக்களுக்காக பாடுபடுபவர்களாக ,உழைப்பவர்களாக சமூக முன்னேற்றத்திற்காக ,அர்ப்பணிப்பு உள்ளவர்களாக பேசி வருவதைப் பார்த்து ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இதுபோன்ற ஏமாற்று அரசியல் வியாபாரிகள் நாட்டில், அரசியல் கட்சிகள் தலைவர்கள், நிர்வாகிகள், என்று பேசிக் கொண்டுதான் இருப்பார்கள்.

இந்த உண்மைகளை மக்களிடம் சொல்லக்கூடிய தகுதி, இந்த பத்திரிகைகளுக்கு இல்லை .மேலும் உண்மை சொன்னாலும், இந்த மக்களுக்கு புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இவர்கள் இல்லை. உண்மை எப்போது, இந்த மக்கள் அலட்சியப்படுத்தி, இந்த வியாபார அரசியலை தெரியாமல், அவர்கள் பின்னால் போனால், அரசியல் என்பது ஒவ்வொருவருக்கும், வலியும், ஏமாற்றமும் தான் மிஞ்சும் என்பதை தமிழக மக்கள் எப்போது உணரப் போகிறார்கள்?

மேலும்,இந்த அரசியல் கட்சியில் எனக்கு பதவி? எனக்கு லாபம்? இப்படி ஒவ்வொருவரின் சுயநலமாக அரசியல் மாறிவிட்டால்! வாக்களிப்பது இவர்களுக்கு ஏன் என்ற கேள்விக்குறி எழுகிறது அல்லவா? இவர்கள் அரசியலில் கொள்ளை அடிக்க வேண்டும் . தான் பதவி, அதிகாரத்திற்கு வந்து மக்களை ஆட்டிப் படைக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு நம்முடைய ஓட்டா? என்று மக்கள் எப்போது சிந்திக்க ஆரம்பிக்கிறார்களோ, அப்போதுதான், இந்த அரசியல் அவர்களுக்கு புரிய வரும்.மேலும்,

உதாரணத்துக்கு எங்களைப் போன்ற பத்திரிகைகளே இதற்கு உதாரணமாக மக்களிடம் இந்த உண்மையான கருத்துக்களை முன் வைக்கிறோம். நீங்களே சிந்தித்து இது உண்மையா? பொய்யா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஆளும் கட்சியான திமுக 5 ஆண்டுகளை முடிவுக்கு கொண்டு வரப் போகிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் சமூக நலன் பத்திரிகைகளுக்கு எந்த விதமான சலுகை, விளம்பரங்களும் கொடுக்கவில்லை.

அதற்காக பலபேர் புகார் அளித்திருக்கிறார்கள். கோரிக்கை வைத்திருக்கிறார்கள். RTI போட்டு இருக்கிறார்கள்.மேலும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, இணையதளத்திலும், பத்திரிகைகளிலும் தொடர்ந்து இது பற்றிய செய்திகளை மக்களிடமும், திமுக அரசிடமும், இயக்குனர் வைத்தியநாதன் இடமும், தொடர்ந்து சொல்லி வந்துள்ளது.

ஆனால், இது பற்றி அவர்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதை ஒரு கணக்கிலேயே கண்டுகொள்ளாமல் ,வந்து விட்டார்கள். இதற்கு காரணம் என்ன? என்று யோசித்த பிறகு தான் தெரிகிறது. இதை எந்த பத்திரிக்கையாளர்களும், பத்திரிகைகளும், தெரிந்திருக்க மாட்டார்கள். அதையும் ஒரு பத்திரிக்கை நடத்தக்கூடியவரிடம் தெரிவித்துள்ளேன். அதாவது ,இந்த பத்திரிகைகளுக்கெல்லாம் செய்தால், நமக்கு என்ன லாபம்? அது மட்டுமல்ல, இவர்களால் 30% கமிஷன் கொடுக்க முடியுமா? நமக்கு ஜால்ராவாக இந்த பத்திரிகைகள் இருக்குமா?இதுதான் திமுகவின் நிலைப்பாடு என்பதை புரிந்து கொண்டேன்.

இதை புரிந்து கொள்வதற்கு எனக்கே இவ்வளவு நாள் ஆனது. காரணம் நானே, பலமுறை எழுதி விட்டேன். பேசுவதற்கும், செய்வதற்கும் திமுகவில் சம்பந்தமே இருக்காது. சமூக நீதி பேசுவார்கள், ஏழைகளின் நாயகன் என்று பேசுவார்கள். எல்லாம் பேசிவிட்டு போவதற்கு தான், தமிழ்நாட்டில் அரசியல் வியாபாரிகளும், ,அரசியல் கட்சிகளும் இருக்கிறார்கள்.

ஆனால், உண்மையிலேயே யாருக்கு செய்ய வேண்டும்? என்பதை புரிந்து செய்யக்கூடிய அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ்நாட்டில் இல்லை. இன்று கூட ஒரு பத்திரிகையாளர் என்னிடம் தெரிவித்தார். அண்ணே நீங்க நாளைக்கு தலைமைச் செயலகம் வாங்க, நாங்க இயக்குனரை சந்தித்து கடிதம் கொடுக்கப் போகிறோம் என்று சொன்னார்.

நான் சொன்னேன், எத்தனையோ முறை இயக்குனரை சந்தித்து, நான் பத்திரிகையும் கொடுத்திருக்கிறேன். கடிதமும் கொடுத்திருக்கிறேன். அவர் செய்யலாம், பார்க்கலாம், போகலாம் என்று தெரிவிக்கிறார். மேலும், இப்போது கூட பத்தாயிரம் காப்பி அடிக்காத தினசரி பத்திரிகைகள், போலித்தனமான ஆடிட் கணக்கு காட்டக்கூடிய பத்திரிகைகள் , பல சென்னையில் டெம்மி அடித்துக் கொண்டு, ஒரு வருட பிரிண்டிங் ஓடிக்கொண்டிருப்பதாக தகவல். இப்படி போலித்தனமான அரசியலும், போலித்தனமான பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும், இருக்கும் வரை ,எப்படி உண்மையை எதிர்பார்க்க முடியும்? எனவே, இன்றைய அரசியல்! அரசியல் வியாபாரிக்கும், அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

அரசியல் வியாபாரிகள் தனக்கு என்ன லாபம்? என்பதை நினைத்து செயல்பட கூடியவர்கள். அரசியல்வாதி நம்மால் பிறருக்கு என்ன லாபம்? இது உண்மையான அரசியல்வாதியின் அடையாளம். இதிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் !தமிழ்நாட்டில் அரசியல் வியாபாரிகள் இருக்கிறார்களா? அல்லது அரசியல்வாதிகள் இருக்கிறார்களா? என்பதை இந்த உண்மை நீங்களும் புரிந்து கொள்ளுங்கள் . இதனால் பாதிப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களே! மேலும்,
எங்களைப் போன்ற நடுத்தர வர்க்கம் நடத்தக்கூடிய பத்திரிக்கை நண்பர்களும் , இந்த உண்மையை புரிந்துக் கொண்டால் சரி.