செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு பொதுமக்களால் விமர்சிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதுவே தவறானது என்று பொதுமக்கள் விமர்சித்தனர்.
அதாவது அவர் அரசு மருத்துவமனையில் தானே அனுமதிக்கப்பட வேண்டும். அவருக்கு மட்டும் எப்படி தனியார் மருத்துவமனை என்ற கேள்வியும் எழுந்தது. இது ஒரு புறம் இருக்க, செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதையும் நீதிபதி அல்லி ஏற்றுக்கொண்டார். அது மிகவும் பொதுமக்களால் விமர்சிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, எப்படி அவருக்கு ஆட்கொணர்வு மனு ஏற்றுக் கொள்ளலாம்? அடுத்தது, அவர் காணாமல் போய்விட்டார? ஆளே இல்லை என்ற சூழ்நிலையில் தான், ஆட்கொணர்வு மனுவை ஏற்றுக்கொள்ள முடியும். இது சாதாரண பொதுமக்கள் பேசுகின்ற அளவிற்கு இருந்தது. அந்த அளவிற்கு நீதிமன்றத்தின் தரம் தாழ்ந்து விட்டதா? என்றெல்லாம் பொதுமக்கள் செந்தில் பாலாஜி கைது விஷயத்தில் நீதிமன்றத்தின் விசாரணை விமர்சனம் செய்யப்பட்டது. அதற்கெல்லாம் பதில் அளித்து நீதியரசர் சி.வி கார்த்திகேயன் சரியான தீர்ப்பு வழங்கியதால், நீதிமன்றத்தின் மாண்பு காப்பாற்றப்பட்டது.
மேலும் ,செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது ,அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு கட்டுப்பட்டவர். அவருடைய ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர், விசாரணையில் அவருடைய குற்றத்தை நிரூபிக்கட்டும்.
மேலும், செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அமலுக்கு துறையினருக்கு அதிகாரம் உள்ளது. அவருடைய கைது சட்டப்படியானது. குற்றம் நிரூபிக்கப்படாமலே, அவருடைய கைது தவறானது. அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் இல்லை.
இதுபோன்ற பல விஷயங்கள் நீதிமன்றத்திற்கு அவ பெயர் ஏற்படுத்தும் வகையில், இந்த விசாரணை சென்றது .அதையெல்லாம் உடைத்து ,நீதிமன்றத்தின் மாண்பை நீதி அரசர் சி.வி. கார்த்திகேயன் காப்பாற்றியுள்ளார். இது நீதி தேவதைக்கு கிடைத்த வெற்றி.