
தேர்தல் நெருங்கும் வேலையில்! அரசியல் கட்சிகள் ,இலவசங்களை மட்டுமே ,தேர்தல் அறிக்கையில் முன்னுரிமையாக கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால், கிராம மக்களின் வாழ்வாதாரம் என்ன? என்பது பற்றி இதுவரை எந்த கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும், முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்கவில்லை.

தவிர, நடுத்தர மக்களின் புலம்பல் மின்சார கட்டண உயர்வு, வரி உயர்வு, பொது சொத்துக்கள் ஆக்கிரமிப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை,இதுதான் அவர்களுடைய முக்கிய புலம்பல். ஆனால், இதைப் பற்றி ,திமுக அரசின் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இப்படிப்பட்ட பிரச்சனைகளை வெளியிடாமல் மூடி மறைக்கின்ற பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்களை கொடுத்து, வருகிறது. மேலும், அவர்களுடைய ஊழல் அரசுக்கு முட்டுக் கொடுத்து செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு மட்டும்தான் இதை கொடுத்து வந்தார்கள். இருப்பினும்,

இந்த ஊழலை எதிர்த்து, குறிப்பிட்ட சில சமூக நலன் பத்திரிகைகள், செய்திகளை தொடர்ந்து வெளியிட்டுள்ளன. அதில், மக்கள் அதிகாரமும் ஒன்று. மேலும்,
காலத்திற்கு ஏற்ப பத்திரிக்கை துறையில் ,மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இது மத்திய, மாநில அரசுக்கு சமூக நலன் பத்திரிகைகள் கூட்டமைப்பு வைக்கின்ற முக்கிய கோரிக்கை. தவிர,50 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சட்டங்கள், இன்று வரை இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளின் அரசியல் சதுரங்கம், இதற்குள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

மேலும் ,சமூக நலனுக்கும், இந்த தேசத்திற்கும், உண்மையாக இருக்கக்கூடிய பத்திரிகைகளுக்கு கூட சலுகை, விளம்பரங்கள் கிடைக்காமல், இவர்களுடைய அரசியல் மத்திய, மாநில அரசின் செய்தி துறையில் தொடர்கிறது.
மேலும்,பத்திரிக்கைத் துறையில் இந்த ஊடகங்கள், ஆதிக்க சக்திகளின் கைக்கூலியாக இருந்து வருகிறது. ஆனால், சமூக மாற்றத்திற்காக குரல் கொடுப்பதால் , அதனால் சந்திக்கக்கூடிய எதிர்ப்புகள், போராட்டங்களை இந்த சமூக நலன் பத்திரிகைகள் சந்திக்க வேண்டி இருக்கிறது . இது தவிர,எவ்வளவோ செய்திகள் திமுகவின் அராஜகங்கள் ,அடாவடித்தனங்கள் ,எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த பத்திரிகைகளில் சில மட்டுமே வெளியிட்டுள்ளன. அது மக்களிடம் சமூக மாற்றத்திற்கான முக்கிய செய்தியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும்,

எத்தனையோ இந்த சிறிய பத்திரிகைகள் , பல அதை நியாயப்படுத்தி கூட செய்திகள் வெளியிட்டு, அவர்களும் பத்திரிகை என்று கைக்கூலியாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த சமூகத்திற்காக உண்மையை வெளிப்படுத்தும் பத்திரிகைகள், மிகச் சில மட்டுமே தமிழகத்தில் இருந்து வருகிறது.
அப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு என். டி .ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சில தினங்களுக்கு முன்பே மக்கள் அதிகாரத்தின் இணையதளத்தில் செய்திகள் வெளியிட்டுள்ளது. இது திமுக கூட்டணிக்கு அதிர்ச்சியாக கூட இருக்கும்.

மேலும்,ஒருவேளை நாம் எதுவுமே செய்யாததால், இந்த பத்திரிகைகள் காழ் புணர்ச்சியின் பேரில், இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுகிறார்கள் என்ற தவறான நோக்கத்தில் கூட ,அவர்கள் பேசுவார்கள்.
அப்படிப்பட்ட நோக்கத்தில் நாங்கள் பத்திரிக்கை நடத்தவில்லை. இதை தொடர்ந்து படிக்கின்ற வாசகர்களுக்கு, இந்த உண்மைகள் புரியும். மேலும்,வாசகர்களை கேட்டு தெரிந்து கொள்ளட்டும். உண்மையை அவர்களே சொல்வார்கள்.

ஆனால், அவருக்கு வேண்டியவர்களை சொல்ல, சொல்லி, ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை போல், பொய்களை பரப்பிக் கொண்டிருந்தால், அதற்கு பதில் சொல்லத் தேவையில்லை. மேலும்,நாங்கள் வைப்பது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கக்கூடிய ஆட்சிக்கு தான், இந்த கோரிக்கையை வைக்கிறோம். அதுமட்டுமல்ல,
நாட்டில் பொது சொத்துக்கள் திமுக ஆட்சியில் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. அந்த பொது சொத்துக்களை பாதுகாக்க, எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளும், நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், போராட வேண்டி இருக்கிறது. மேலும், பலர் இந்த அரசியல் கட்சி என்ற ஒரு பின்புலத்தை வைத்துக்கொண்டு, ஏரி, குளம் ,குட்டை ஆறுகள், போன்ற நீர் நிலைகளை பங்கு போட்டு, கொள்ளையடிப்பது தான் திறமை என்று செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கிராம மக்கள், நகர மக்கள் பேசுவதெல்லாம் காதில் விழவில்லை. விலைமதிப்புள்ள பொது சொத்துக்களை திமுக அரசு பாதுகாக்க தவறிவிட்டது.மேலும்,

அளவுக்கு அதிகமாக ஆறுகளில் மணல் எடுப்பது, ஏரிகளில் மண் எடுப்பது ,இதை தட்டிக் கேட்கும் கிராம மக்களுக்கு பணம் கொடுத்து சரி செய்வது, இல்லை என்றால் மிரட்டுவது ,பொய் வழக்கு போடுவது, இவ்வளவு பிரச்சனைகளையும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், சமூக நலன் பத்திரிகைகளும், சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,இந்த நீர் நிலை புறம்போக்கு நிலங்கள் ,எதற்கு ? என்று கூட தெரியாமல்,அரசியல் அதிகாரத்தால் அல்லது அரசியல் கட்சி பின்புலத்தால், இவர்கள் விற்று கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,
இவர்களுக்கு பொது சொத்துக்களை விற்று சாப்பிட தான் வாக்களித்தார்களா? மேலும் ,50 ஓட்டு, 100 ஓட்டில், ஜெயித்து பஞ்சாயத்து தலைவராக வந்தால், அவன் அந்த ஊரையே விற்று சாப்பிடலாம் என்று நினைக்கிறான். இல்லையென்றால், பத்து அரசியல் கட்சியினருடன் கூட்டு சேர்ந்து, மணல் வியாபாரிகளிடம் அல்லது சவுடு மண் வியாபாரிகளிடம் ரகசிய ஒப்பந்தம் போட்டு ஊரின் பொது சொத்துக்களை விற்று எப்படி பல கோடிகளை சம்பாதிக்கலாம்? இந்த நினைப்பில் இருக்கின்றார்கள்.
இதற்கெல்லாம் NDA கூட்டணி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் . மேலும் ,பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய இக் கூட்டணி குறைந்தபட்சம் ஆக்கிரமிப்பு செய்தாலோ, அல்லது சட்டத்திற்கு புறம்பான வழியில் அல்லது அளவுக்கு அதிகமாக இந்த மண்ணை எடுத்தாலோ ,அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஏரி ,குளம், குட்டை, பொறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் ,குறைந்தபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனையும் சொத்தின் மதிப்புக்கு தகுந்தவாறு அபராதமும், இருக்க வேண்டும் .

மேலும், இப் பிரச்சனை மக்கள் மத்தியில்,தற்போது கிராமங்கள் தோறும் ,நகரங்கள் தோறும் ,பேசப்படுகின்ற முக்கிய பிரச்சனை. இந்தப் பிரச்சனை பற்றி, எந்த ஒரு அரசியல் கட்சியும், இதை தேர்தல் அறிக்கையில் இதுவரை சேர்க்கவில்லை. இந்த இரு பிரச்சனையும், முக்கிய பிரச்சனை என்பதால், இதை ஏன் சேர்க்கக்கூடாது?

மேலும்,வருகின்ற தேர்தல் மக்களுக்கான தேர்தலாக இருந்தால்! இதை அவசியம் பிஜேபியின் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் ,இந்த இரண்டு பிரச்சனைகளும், மிகவும் முக்கியத்துவம் ஆனது என்பதை வலியுறுத்தி, சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ,தேர்தல் அறிக்கையில் சேர்த்திட கோரிக்கை.
மேலும், இப் பிரச்சனைகள் குறித்து,சமூக நலன் பத்திரிக்கைகள் கூட்டமைப்பு வலியுறுத்தி தேர்தல் அறிக்கையில் சேர்த்திட, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் , மற்றும்,பிஜேபியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரனுக்கும், கடிதம் அனுப்ப நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.