
தமிழ்நாட்டில் இந்து விரோத சக்திகளுக்கு எதிராக கொடுக்கப்பட்ட ஒரு தீர்ப்பு இன்று நாடாளுமன்றத்தில் 107எம்பிக்கள் நீதிபதி ஜி .ஆர். சாமிநாதனுக்கு எதிராக தகுதி நீக்கம் செய்ய கொடுக்கப்பட்ட கடிதம் ஜனநாயகத்திற்கே விரோதமானது.
மேலும் ,இந்த நாட்டு மக்கள் இவர்களை எம்பி ஆக்கியது, இந்துக்களுக்கு எதிராக செயல்படவா? இல்லை இந்துக்களை அழிப்பதற்கா? தவிர,இந்து கோயில்களின் பாரம்பரித்தை அழிக்கவா?இப்படி இந்து விரோத சக்திகள் அனைவரும் ஒன்று கூடி இருக்கிறார்கள் ?என்பது இப் பிரச்சனையில் தெளிவாக தெரிகிற ஒரு உண்மை.
தவிர,இவர்களுடைய அரசியல், மக்களுக்கு இதுவரை புரியாமல் இருந்தது. இப்போது அது வெளியில் வந்துவிட்டது. அதை மறைப்பதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பேச்சில் வித்தையை காட்டுகிறார்கள் . இந்த வேலையெல்லாம் திமுகவுக்கு கைவந்த கலை . மேலும்,
அந்த கலை எல்லாம் அரசியல் தெரிந்தவர்களிடம் வேகாது சிவா. நீங்கள் நாடாளுமன்றத்தில் பேசலாம். ஆனால், மக்கள் மனதில் என்ன இருக்கிறது? என்பது உங்களுக்கு தெரியுமா? எங்களுடைய கோயிலில் தீபம் ஏற்றக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார் ?இது தான் மக்களின் கேள்வி? ஒரு நீதிபதியின் தீர்ப்பை ஏன் நிராகரிக்கிறீர்கள்?
அதுமட்டுமல்ல, இங்க என்ன தவறு நடந்தது ?என்பதை ஆதாரப்பூர்வமாக உங்களால் மக்களிடம் விளக்க முடியாது. ஆனால், அரசியல் பேசிக் கொண்டிருப்பீர்கள். உங்கள் அரசியலை ,அரசியல் படித்தவன் கூப்பையிலே தூக்கி போடுவான்.
மேலும், சாமானிய மக்கள் ,ஏழை மக்கள், தமிழ் கடவுள் முருகன் மீது எவ்வளவு பக்தி வைத்திருப்பார்கள் ? என்பது இந்த திருச்சி சிவாவுக்கு தெரியுமா?
மேலும் திருச்சி சிவா நீதிபதி சாமிநாதனை தகுதி நீக்கம் செய்து விடுவது போல், இவர்களுடைய தொலைக்காட்சி சன் டிவியில் பேசி விட்டார்கள். மக்களும் ஒருவேளை நீக்கிவிடுவார்களோ என்ற சந்தேகம் இருக்கும். இது திமுகவுக்கு கைவந்த கலை. அதுமட்டுமல்ல, இவர்களுக்கு
பொய்யை உண்மையாகத் திரிப்பது திமுகவின் பிறவி குணம் . மேலும்,கடந்த செய்தியிலே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல், ஒரு நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய முடியாது. அதனால், இதுபோன்ற பேட்டியெல்லாம் பாமர மக்களை ஏமாற்றுகின்ற வேலை.மேலும்,
இதில் என்ன நீதிபதி தவறு செய்து விட்டார்? அதை உங்களால் ஆதாரம் அளிக்க முடியுமா? இப் பிரச்சனையில் ,அவர் கொடுத்த தீர்ப்பு !சட்டத்தின்படி கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது, கோயிலுக்கு சொந்தமான இடத்தில் எங்கே தீபம் ஏற்றினால்! உங்களுக்கு அதனால், என்ன நஷ்டம்? இது நீதிபதியின் தீர்ப்பு , அது தான் மக்களின் எதிர்பார்ப்பு. மேலும்,
நீதிமன்றத்தில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால், நீதிபதிகளை தகுதி நீக்கம் செய்து விடுவீர்களா?
அப்படி என்றால்! நீதிபதிகள் அரசியல்வாதிகளாக கட்சி கரை வேஷ்டி கட்டிக் கொண்டு தான் நீதிமன்றத்திற்கு வர வேண்டும். மேலும்,எவ்வளவு ஊழல் செய்தாலும், இந்து விரோத சக்தியாக செயல்பட்டாலும், தேச விரோத சக்தியாக செயல்பட்டாலும், இவர்களுக்கு எதிராக எந்த நீதிபதியும் தீர்ப்பு சொல்லக் கூடாது .

அப்படி சொன்னால், இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நடாளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்ய கடிதத்தை நீதிபதியின் மீது கொடுப்பார்கள். மேலும்,மக்களிடம் அதை நியாயப்படுத்தி, ,அரசியல் பொய் கதைகளை சொல்லிக் பேசிக் கொண்டிருப்பார்கள். இப்போது என்ன பிரச்சனை? இவர்கள் அனைவரும்
இந்துக்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் வெளிப்பட்டு விட்டது. இனி மக்களை எப்படி ஏமாற்றி அரசியல் செய்ய முடியும்? இதுதான் இவர்களுடைய இந்து விரோத சக்திகளின் அரசியல் உள்நோக்கம்.மேலும்,
நாட்டில் இவர்கள் எவ்வளவு பெரிய அநியாயம்? அக்கிரமங்கள்? ஊழல்கள்? கொலை குற்றங்கள் ?கற்பழிப்புகள்? இதையெல்லாம் விட நீதிபதி செய்தது பெரிய குற்றமா? உங்கள் குற்றத்தை நிரூபித்தால்! நீங்கள் எல்லாம் உடனே தகுதி நீக்கம் செய்து நீங்கள் பதவி விலக தயாரா? அப்படி ஒவ்வொருவரையும் மனசாட்சிப்படி அல்லது சட்டத்தின்படி இவர்களை ஆய்வு மேற்கொண்டால்!எத்தனை எம்பிக்கள் தேருவார்கள்? எத்தனை எம் எல் ஏ க்கள் தேருவார்கள்?

மேலும்,ஆரம்பத்தில் அவரவர் பூர்வீ சொத்து மதிப்பு என்ன? இப்போது உங்களுடைய சொத்து மதிப்பு என்ன? இதனால், ஏழை நடுத்தர மக்களுக்கு எவ்வளவு முன்னேற்றம் பாதிக்கிறது? என்பது இந்த மக்களுக்கு தெரியாது.மேலும்
நாட்டின் ஊழல்வாதிகளால் தான் இன்று ஏழை, நடுத்தர மக்கள் முன்னேற்றம் பாதிக்கிறது. அவர்களுடைய வாழ்க்கை போராட்டமாக கொண்டிருக்கிறது. இன்றைய விலை வாசி உயர்வு, வரி உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு அத்தனையும் மக்கள் தலையில் சுமத்தி வாழ்க்கையை போராட்டம் ஆக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல இன்றைய பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் என்ன சம்பளம் கொடுக்கிறார்கள்? அதுவாவது இந்த எம்பிக்களுக்கு தெரியுமா? டிகிரி படித்த மாணவர்கள் தனியார் கம்பெனிகளில் பத்தாயிரம் பதினைந்தாயிரம் கொடுத்து வேலை வாங்குவது தெரியுமா? இப்படிப்பட்ட சுயநல அரசியல்வாதிகளுக்கு நீதிபதியின் தீர்ப்பு தாங்க முடியாமல் தகுதி நீக்கம் செய்ய கடிதம் கொடுக்கிறார்கள்.

உங்களுக்கெல்லாம் என்ன தகுதியோடு இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த சேவை கடமையை பட்டியல் போட்டு காட்டுங்கள். தகுதியை பற்றி உங்களுக்கு பேச ஒருத்தருக்கு கூட தகுதி இருக்காது. தகுதி என்றால் என்ன? ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவது இதுவரை தமிழ்நாட்டு மக்களை சந்தித்திருக்கிறார்களா? அவர்களின் உரையை கேட்டிருக்கிறார்களா? ஏதாவது செய்து இருக்கிறார்களா?
இதுவரையில் இப்படி ஒரு சம்பவம் நாட்டிலே நடக்கவில்லை. ஆனால், இவருக்கு மட்டும் ஏன்? இந்து விரோத சக்திகள் ஒன்று கூடி இருக்கிறார்கள்? எத்தனையோ நீதிபதிகள் எவ்வளவோ தவறு செய்திருக்கும்போது ,ஊழலை செய்திருக்கும் போது, பணமே வாங்கி இருக்கும்போது, அப்போதெல்லாம் பேசவில்லை தீர்ப்பே தவறானதாக கொடுக்கப்பட்ட பேசவில்லை. ஆனால், நீதிபதி சாமிநாதனுக்கு மட்டும் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பேச வேண்டிய காரணம் என்ன? அத்தனையும் அரசியல் உள்நோக்கம்! இந்த உண்மையை மக்கள் புரிந்து கொண்டால் சரி.