தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால் சமூகநலன் இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதற்கு தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை ‌.

அரசியல் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

நாட்டில் பத்திரிக்கை துறை முக்கியமான துறையாக இருந்தாலும் இன்று வரை மத்திய, மாநில அரசு அதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

பத்திரிக்கை துறை! காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். அப்படி மாற்றங்களை கொண்டு வரவேண்டிய மத்திய மாநில ,அரசின் செய்தி துறை சமூக நலன் இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள், கொடுக்க வேண்டும்.

அதாவது சர்குலேஷன் சட்டம் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு சாதகமான ஒரு சட்டம். சர்குலேஷனில் எவ்வளவு விற்பனை என்பது மூடி மறைக்கின்ற ஒரு மோசடி வேலையாக இன்று வரை இருந்து வருகிறது. ஆனால் ,இணையதளத்தில் யாருமே ஏமாற்ற முடியாது.இதில் ,எத்தனை பேர் பார்க்கிறார்கள்? என்பதை தெளிவாக கணக்கெடுக்க முடியும்.

அதில் யாரும் ஏமாற்ற முடியாது. ஒவ்வொரு இணையதள பத்திரிகையின் பார்வையாளர்களை எவ்வளவு பேர் பார்த்தார்கள்? என்று ஒவ்வொரு மணி நேரத்திலும், அந்த எண்ணிக்கை இருந்து கொண்டே இருக்கும். இங்கே, கார்ப்பரேட் பத்திரிகைகளும் இணையதளத்தில் மார்க்கெட்டிங் செய்து ,அந்த செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள்.

ஆனால் எங்களைப் போன்ற சாமானியர்களின் பத்திரிக்கைகள் அதுபோல் மார்க்கெட்டிங் செய்து இணையதளத்தில் அதை ஒரு வியாபாரமாக செய்வதில்லை. இருப்பினும் அவர்களுக்கு இணையாக எங்களது தகுதியானவர்கள் பத்திரிக்கை இணையதளம் பார்வையாளர்கள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

அதனால், அவர்களுக்கு கொடுக்கின்ற அதே சலுகை விளம்பரங்கள் எங்களுக்கு கொடுத்தால் நிச்சயம் நாங்களும் பத்திரிக்கை துறையில் வளர்ச்சி அடைவோம் என்பது உறுதி. ஆனால், இதை வளரவிடாமல் செய்வது செய்தி துறை அதிகாரிகளின் உள்நோக்கம் கமிஷன். இந்த கமிஷனுக்காக தான், தகுதியான பத்திரிகைகள் கூட இவர்கள் பரிந்துரை செய்வதில்லை. இது உண்மை.

இது தவிர, கடந்த திமுக ஆட்சியில் பத்திரிக்கை துறையின் அவலம் என்பது நக்கீரன் கோபாலை போன்ற திமுக கட்சியினரை கொண்டு வந்து பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் முக்கிய பொறுப்பில் போட்டால் பத்திரிக்கை துறை உருப்படுமா?

மேலும்,செய்திக்கும் பிரபகண்டாவுக்கும், வித்தியாசம் தெரியாத செய்தித் துறை அதிகாரிகள் செய்தித் துறையில் இருந்து வருகிறார்கள். அதே நிலைமை தான், பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளின் செய்திகள் 90 சதவீதம் பிரபகண்டா, ஒன்றைப் பற்றி அவர்கள் பூஸ்ட் செய்து கொண்டே இருப்பார்கள்.

அதாவது ஒருவரை பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றியோ உண்மை இதுதான் என்று சொல்லாமல் அதை பிரபகண்டா செய்து கொண்டிருப்பார்கள். இதை சட்டம் படித்து விஷயம் தெரிந்த ஒரு வழக்கறிஞர் ஒருவரே என்னிடம் இதை தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து மக்களுக்கான செய்திகளை கொடுக்கக்கூடிய பத்திரிகைகள் எது ?என்பதை செய்தித் துறையின் இயக்குனர் அருண் தம்புராஜ் ,தரம் பிரிக்க வேண்டும். இதை எப்படி செய்வது என்பது கூட இன்று வரை செய்தித் துறை அதிகாரிகளுக்கு தெரியாது.

மேலும்,இந்த மறைக்கப்பட்ட உண்மைகள், காலத்திற்கு ஏற்ற பத்திரிக்கை துறையின் சமூக மாற்றத்திற்கான பத்திரிகைகள் எது ?என்பது ஆட்சியாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும், இது பற்றி ஆய்வு செய்ய தெரியாது. இருப்பினும்,

மக்கள் அதிகாரத்தின் இணையதள பத்திரிக்கை மற்றும் பத்திரிகைகளிலும், மாற்றத்திற்கான செய்திகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதைப் பற்றி செய்தித்துறை இயக்குனர் அருண் தம்புராஜ் மற்றும் கூடுதல் செயலாளர் விஜயகுமார் இது பற்றி ஆய்வு செய்து, வரைமுறை படுத்துவது தான், பத்திரிக்கை துறையில் இருக்கும் ஓட்டை சர்குலேஷன் சட்டத்திற்கு தற்போது மிக முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆர்.டி.ஐ.யில் இந்த சர்குலேஷன் சட்டத்தைப் பற்றி ஒருவர் கேட்டால் அவர்கள் அச்சடிக்கும் பிரதிகள் கணக்கு உண்மையானதா? விற்பனை கணக்கு உண்மையானதா? இதில் எல்லாம் தலையிட ஒரு தனிப்பட்ட நிறுவனத்தில் எங்களுக்கு உரிமை இல்லை என்று செய்தித் துறை அதிகாரிகள் பதில் அளிக்கிறார்கள்.

அப்படி என்றால் ,இதில் போலியான கணக்குகள் காட்டப் படுகிறதா? இந்தப் போலி கணக்குகள் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது சாதகமானதாக இருக்கிறதா? நீதிமன்றமும் இதை சரி என்று ஏற்றுக் கொள்ளுமா? இத்தனை கேள்விக்குள் இந்த சர்குலேஷன் ஓட்டைகள் இருப்பதால், இதற்கு கமிஷன் முக்கிய பங்களிப்பாக இருக்கிறது. இதனால்தான் சமூகநலன் பத்திரிகைகள் மேலே வர முடியவில்லை.

இதில் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பிரபகண்டா செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற செய்தி துறை இவர்களின் கமிஷனுக்கு ஒத்து ஊதுகிறதா? இவ்வளவு ஓட்டைகளுக்கு நடுவில் சர்குலேஷன் சட்டம் மத்திய மாநில அரசின் அதிகாரிகளுக்கு ஏன் புரியவில்லை?

மேலும்,பிஜேபி மந்திரிகள் எல்லாம் தெரிந்தார் போல், பேசுவார்கள். இந்த மாற்றம் காலத்தின் கட்டாயம் என்பதை ஏன் ?தற்போதைய மத்திய செய்தி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு இது தெரியாதா? மேலும்,இது தமிழ்நாட்டு மத்திய செய்தித்துறை இணை அமைச்சராக இருக்கும் எல். முருகனுக்கும் தெரியாதா?

மேலும் , இந்தத் துறையில் இருக்கக்கூடிய ஓட்டை சட்டங்களாவது இவர்களுக்கு தெரியுமா? தவிர,இந்த செய்திகளாவது அவர்களின் பார்வைக்கு! இங்குள்ள மத்திய அரசின் செய்தித் துறை அமைச்சகம் கொண்டு செல்கிறதா? மேலும்,

இது பற்றி பல ஆண்டுகளாக கடந்த கால திமுக ஆட்சியில் உண்மையை வெளிப்படுத்தியும்,எதுவும் நடக்காது என்பது தெரிந்த உண்மை. தற்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில்! உண்மையான ,தகுதியான பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த கோரிக்கை.

எனவே, காலத்திற்கு ஏற்ப பத்திரிக்கை துறையின் மாற்றங்கள், சட்ட திருத்தங்கள் ,அவசியமானது என்பதை மத்திய மாநில அரசின் செய்தித்துறை எப்போது புரிந்து கொள்ளப் போகிறது? மக்கள் அதிகாரம்! மக்களுக்காக, மக்களுடன் என்றும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *