தமிழ்நாட்டில் கருவேல மரங்கள் அகற்ற உயர் நீதிமன்ற உத்தரவால் நீர்வளத்துறை அதிகாரிகளின் மிகப்பெரிய மோசடிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா? – தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா .

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

ஜூலை 20, 2024 • Makkal Adhikaram

கருவேல மரத்தால் நீர் ஆதாரம் குறைந்து விடுகிறது என்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டை வைத்து, தமிழகத்தில் உள்ள கருவேல மரங்கள்அகற்ற வேண்டும் என்று கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை காரணம் காட்டி பல கோடி மதிப்புள்ள கருவேல மரங்கள் நீர்வளத்துறை அதிகாரிகளால் குறைந்த ஏலம் விட்டு, கிராம பஞ்சாயத்து தலைவர்களும், ஏலம் எடுப்பவர்களும்,கிராம ஏரிகளில் உள்ள மரங்கள் ஏலம் விடுவதாக கணக்கு காட்டி ,பல கோடி மதிப்புள்ள மரங்கள் மோசடி நடந்து வருகிறது.மேலும்,

இந்த கருவேல மரத்தின் கட்டைகளை கரியாக்கி, அது கருப்பு தங்கமாக கோல் எக்ஸ்போர்ட் (COAL EXPOERT) செய்யப்படுகிறது. இதற்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் உள்ளது. அதனால், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் தலைமையிலும்,இந்த ஏலம் சீல் வைக்கப்பட்ட. ஓபன் டெண்டர் ஆக நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து நிர்வாகிகளும், நீர்வளத்துறை அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும், கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க முடியாது .

இப்படி கூட்டுக் கொள்ளை ஏற்படுத்தி ,அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்படுத்தும் இப் பிரச்சனை மீது சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்க சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது .மேலும், இதற்கு உதாரணமாக திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் விடையூர் கிராமத்தில் முள்ளு செடி என்று வெறும் 50 ஆயிரத்திற்கு நீர் வளத் துறை அதிகாரிகள் ,இரண்டு ஆண்டுகளுக்கு முன் விடப்பட்ட ஏலம், தற்போது வரை அந்த மரங்கள் வெட்டப்பட்டு கட்டைகள் கரியாக்கப்பட்டு, பல கோடி ரூபாய் இதில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது எப்படி என்றால், வனத்துறையின் மதிப்பீடு தவறான மதிப்பீடு செய்து, அதை காரணம் காட்டி ,நீர்வளத் துறை அதிகாரிகள் இந்த சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். அதாவது வனத்துறை அதிகாரிகளுக்கு 10,000 ,20,000 கொடுத்து, சம்பந்தப்பட்ட கூட்டுக் களவாணிகள் கடிதம் வாங்கிக் கொள்கிறார்கள். அதுதான் பெரிய ஆயுதமாக நீதிமன்றத்தில் சொல்லி விடுகிறார்கள் .

மேலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு விடப்பட்ட ஏலம், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மரத்தை எப்படி வெட்டிக் கொண்டு இருப்பார்கள்? மேலும், முள்ளுச்செடியை வெட்டுவதற்கு, நீர்வளத் துறை அதிகாரிகள் தான் அதற்கு கூலி கொடுக்க வேண்டும். அதை யாரும் ஏலத்தில் எடுக்க மாட்டார்கள். இதைக் கூட தெரியாமல் தமிழக அரசு ஒரு நிர்வாகத்தை செய்து கொண்டிருப்பது வேட்கக்கேடான ஒன்று.

 இது பற்றி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் குழு அமைத்து கிராமத்தில் நேரடி விசாரணை செய்தால், தவறு செய்தவர்கள் நிச்சயம் மாட்டுவார்கள் என்கிறார்கள் விடையூர் கிராமத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *