தமிழ்நாட்டு திமுக, அதிமுக கட்சிகளின் அரசியல்வாதிகளின் அரசியல்! முதல்வர் விஜய்க்கு புரிந்து விட்டதா? – ஆசிரியர் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக அரசியல் கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகளின் அரசியல்! முதல்வர் விஜய்க்கு புரிந்து உள்ளது என்று நினைக்கிறேன்.

மேலும்,அதிமுகவில் இருந்து ஊழல் அமைச்சர்கள் அதாவது விஜயபாஸ்கர் போன்றவர்கள், தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இவர்கள்

அதிமுக விட்டால்,திமுகவும், திமுக விட்டால் அதிமுக என்று மாறி, மாறி, கட்சிகளை மாற்றி தமிழக வாக்காளர்களை அரசியல் வியாபாரம் செய்வது, தமிழ்நாட்டின் அரசியலாக இருப்பதை வாக்காளர்கள் மாற்ற வேண்டும்.

அதேபோல் ஊழல் அமைச்சர்கள் ,ஊழல் எம்எல்ஏக்கள், மீண்டும் எந்த கட்சியில் இணைந்தாலும் ,அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பது யோசிக்க வேண்டும்.

அதிமுகவில் ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை மீண்டும் தமிழக வெற்றி கழகத்தில் முதலீடு செய்து ,அரசியல் வியாபாரம் செய்யலாம் என்று வந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி பொறுப்புக்களை கொடுக்கவில்லையா? அது மட்டுமல்ல,

இன்று தாராபுரம் ,மதுராந்தகம் இடைத்தேர்தலின், முன்னாள் அதிமுக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவரும் தவெக காவில் இணைந்து மீண்டும் எம்எல்ஏவாக போட்டியிட்டுள்ளனர்.

இன்று இடைத்தேர்தல் முடிவு வெளியாக உள்ள நிலையில், தேர்தல் முடிவு கடுமையான போட்டியாக இருக்கும் என்றுதான், ஏற்கனவே மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்டிருந்தோம். யாருக்கு வெற்றி ,தோல்வி என்பதை மதியம் 12 மணிக்குள் தெரிந்து விடும்.

ஏற்கனவே, இது பற்றி முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் இவரை தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்கக் கூடாது என்று தான் ஊடகத்தின் வாயிலாக தெரிவித்தார். அவர் சொன்ன கருத்து உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று.

ஏனென்றால், அதிமுக, திமுகவில் ஊழல் செய்த மந்திரிகள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவுடன் அவர்கள் ஊழலை மக்கள் மறந்து விடுவார்களா? அப்படிதான் மறந்து மக்கள் 50 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் இவர்கள் ஏமாற்றும் அரசியலை செய்து வந்துள்ளார்கள்.

இப்போது மக்கள் விழித்துக் கொண்டார்கள். இந்த ஏமாற்று அரசியல்வாதிகளிடம் இருந்து பிழைத்துக் கொண்டார்கள்.

அரசியல் கட்சிகளை மாற்றிக் கொண்டு,அங்கு ஊழல் செய்தால், இங்கு வரலாம் .இங்கு ஊழல் செய்தால் அங்கே போகலாம். என்ற அரசியல் வியாபாரம் தமிழ்நாட்டில் அழிக்கப்பட வேண்டும்.இப்படி தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றி ,அரசியல் வியாபாரம் செய்ய மக்கள் ஏமாளிகளா? மேலும்,

எம்ஜிஆர் பாட்டில் சொல்வது போல, விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார். மக்களை தொடர்ந்து அதிமுக ,திமுக அரசியல் கட்சியினர் ஏமாற்ற முடியுமா? பேசுவது என்னவோ, வில்லாக வளைப்பது போல்! மக்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் இந்த பேச்சை நம்பி தான் ,50 ஆண்டுகாலம் ஏமாந்து இருக்கிறார்கள். அதனால், இவர்களுடைய போலி அரசியலின் பேச்சையும், கார்ப்பரேட் ஊடகங்களின் பத்திரிக்கை வியாபாரத்தையும் ,மக்கள் நம்பத் தயாராக இல்லை.

அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்கள்! மக்களாட்சியை விரும்புகின்றனர். ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு, வாக்களிப்பவர்களால் மக்களாட்சியை கொண்டு வர முடியாது .அரசியல் மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. அவர்களால் தமிழ்நாட்டில் அரசியல் வியாபாரத்தையும் தடுக்க முடியாது.

அரசியல் வியாபாரத்தை செய்ய தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தால், அது செய்ய முடியுமா ?என்பதை முதல்வர் விஜய்க்கு இந்த இடைத்தேர்தல் முடிவு கொடுக்கும் அரசியல் பாடமாக இருக்குமா ?

கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு ,பொதுத் தொண்டு செய்ய வைப்பது மாற்றத்தை விரும்பும்,தமிழக மக்கள் கையிலா ….?

மக்களுக்காக…..! மக்களுடன் என்றும் …..! மக்கள் அதிகாரம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *