தவெக விற்கு ஓடும் திமுக, அதிமுக, பாமக, பிஜேபி, என பல கட்சிகளில் இருந்து சேர ஆர்வம் காட்டுவது ஏன் ? மக்கள் சேவை செய்யவா? இல்லை மேலும், பதவி, பணத்தை தேடியா ? எதற்கு இந்த ஆர்வம்? – மக்கள் அதிகாரம்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழ்நாட்டின் அரசியல்! பதவி ,பணத்தை தேடி, ஓடுகின்ற கூட்டம் கொள்கைக்காகவோ , அல்லது மக்களுக்காகவோ ,கட்சிகளை மாற்றிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும், தகுதியானவர்களாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

மேலும்,பணம் இருக்கலாம், முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் மந்திரி, முன்னாள் மாவட்ட செயலாளர், முன்னாள் சேர்மன், முன்னாள் கவுன்சிலர் ,என்று பல அரசியல் புள்ளியாக கூட இருக்கலாம். இவர்கள் கட்சிகளை தற்போது மாறிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அதிமுகவில் தலைமை சரியில்லை, அது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்.

அடுத்தது, பாமக சமுதாயத்திற்கு சேவை செய்யக் கூடிய கட்சி அல்ல ,சமுதாயத்தை சுரண்டி சாப்பிடும் கட்சி . அடுத்தது, திமுக ரவுடிகளுக்கான பிரத்தியோக கட்சி. இங்கே, தனுஷ் படமான புதுப்பேட்டை போன்று தான் இந்தக் கட்சி . நேத்து தான் அந்தப் படத்தை கொஞ்ச நேரம் பார்த்தேன். அதில் வரும் காட்சிகள் எல்லாம் திமுகவை போன்றே தான் இருக்கிறது.

மேலும் ,தமிழ்நாட்டுக்கு அரசியல் மாற்றம் தேவை என்று மக்கள் கருதினார்கள் . அந்த நேரத்திற்கு தகுந்தார் போல் விஜய் கட்சியை ஆரம்பித்தார். மக்கள் விஜய் அந்த மாற்றத்தை உருவாக்குவார் என்று யாரும் வாக்களிக்கவில்லை.

அதிமுகவிலும், திமுகவிலும், உள்ள ஊழல்வாதிகளும், ரவுடிகளும் பெருகி விட்டார்கள். அதனால் தான் அரசியல் மாற்றம் தேவை என்று ஏதோ ஒரு புதிய கட்சி, தமிழக வெற்றி கழகத்திற்கு ,இந்த முறை வாக்களித்து பார்ப்போம் என்று தான் வாக்களித்து இருக்கிறார்கள்.

இதில், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் தேர்தல் வியூகத்தால் வந்ததல்ல, மக்கள் அதிகாரம் தொடர்ந்து இரண்டு கட்சிகளின் மீதுள்ள வெறுப்பு அரசியல் தான் தமிழக வெற்றி கழகத்திற்கு இந்த வெற்றியை தேடி தந்துள்ளது.மேலும்,

இங்கே, கடந்த காலங்களில் படிப்பறிவு இல்லாத மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவ்வளவு செல்போன் வசதி அப்போது கிடையாது. அதிமுக ,திமுகவில் உடம்பை பார்த்தும், பேச்சைப் பார்த்தும், ஜாதியை பார்த்தும் தான் எம்எல்ஏ சீட் ,எம் பி சீட் ,அதிகம் கொடுத்திருக்கிறார்கள் . படிப்பைப் பார்த்து, மக்கள் சேவையை பார்த்து, தகுதியை பார்த்து, கொடுக்கவில்லை.

அதை எப்போது கொடுத்தார்கள் என்றால்? 1965 க்கு முன் தமிழ்நாட்டின் அரசியலில் அப்படி கொடுக்கப்பட்டது. கருணாநிதி எப்போது அரசியலுக்கு வந்தாரோ, அப்போதே பல கிரிமினல்களும், ரவுடிகளும், பழ .கருப்பையா சொல்வது போல, அரசியலில் உள்ளே வந்து விட்டார்கள்.

தற்போது,அவர்கள், இரண்டு மூன்று தலைமுறையாக அதிமுகவிலும் ,திமுகவிலும் மாறி ,மாறி கொள்ளை அடித்துக் கொண்டு, தங்களை விட யோக்கியன் யாருமில்லை. நாங்கள்தான் மக்கள் பணிக்கு சிறப்பானவர்கள். என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு ஆதாரம் எங்கே என்றால்? இவர்களுடைய அப்பா, தாத்தா, சொத்துக்களை தேடி பார்த்தால்! இவர்களுடைய யோக்கியதை தெரியும். அதுதான் இவர்களுடைய ஆதாரம்.

இப்படிப்பட்டவர்களை, இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் புகழ்ந்து பாராட்டிக கொண்டு,இவர்களை போலி பத்திரிக்கை பிம்பத்தில், மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தது. இன்றும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

இன்னும் கேட்டால், தமிழ்நாட்டில் பழைய சுதந்திரம் வாங்கிய காங்கிரஸ் கட்சிக்கும், இப்போது இருக்கிற கொள்ளை அடிக்கும் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கும், அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் தங்களை அதே நினைப்பில்,அரசியல் கட்சி என்று சொல்லிக் கொண்டு, இன்றும் இவர்கள், இந்த (காங்கிரஸ் கட்சியினர்) தங்களை தியாகி என்று பேசிக் கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். மேலும்,

இதையெல்லாம் மாற்ற வேண்டும். இந்த மாற்றம் எப்போது ஏற்படுமோ அப்போதுதான் தூய்மையான அரசியல்! தமிழ்நாட்டில் கொடுக்க முடியும். தவிர,இந்த ஊழல்வாதிகள் இந்த கட்சியில் இருந்து, அந்த கட்சிக்கு போனாலும் ,அங்கேயும் ஊழல் தான் செய்து கொண்டிருப்பார்கள். இந்த அரசியல் வியாபாரிகள் ,அதிமுகவில் இருந்து திமுகவுக்கோ அல்லது தவெகவிற்கோ போனாலும், ரஜினி சொன்னது போல, மீன் குழம்பு வைத்த சட்டையை சுத்தம் செய்து , அதில் சர்க்கரை பொங்கல் வைத்தாலும், அந்த வாசனை ,அதில் இருந்து கொண்டு தான் இருக்கும் .

மேலும்,பிஜேபிக்கு தமிழ்நாட்டில் ஒரு வாய்ப்பு மக்கள் கொடுத்து இருப்பார்கள், அதை தவற விட்டது மோடி, அமித்ஷாவின் தவறான அரசியல். எந்தக் கொள்கைக்காக இவர்கள் அரசியல் என்று ஏற்படுத்தினார்களோ ,அந்தக் கொள்கையில் தமிழ்நாட்டு அரசியலில் இவர்கள் இல்லை.

மேலும்,எப்போது அதிமுக, திமுகவில் ஊழல்வாதிகளுக்கு ,இவர்களிடம் சரண்டர் ஆனால், சமரசம் ஆனார்களோ ,அப்போதே, பிஜேபியின் வளர்ச்சி ,தமிழ்நாட்டில் சாய்ந்து விட்டது. தவிர,பேருக்கு இ டி ரைட் (E D ride) இன்கம் டேக்ஸ் ரைட் (Income tax ride) , (C B I ride) சிபிஐ ரைட் என்று கேவலமாக பேசும் ,அளவிற்கு மத்திய அரசின் நடவடிக்கை சென்று விட்டது.

மேலும்,தமிழ்நாட்டு மக்கள் அதிமுக, திமுக, இரண்டு கட்சிகளிடமும், பதவி அதிகாரத்தில் ,அவர்களுடைய ஊழலும், ரவுடிசமும், சகித்துக் கொள்ள முடியாமல் வேதனையில் புழங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்களுடைய கூட்டணி கட்சிகள் ,அது ஒரு பக்கம், இதே போல் ரவுடியிசமும், ஊழலும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.

மேலும்,நேரம் பார்த்து விஜய் பக்கம் தங்கள் வாக்கை திருப்பி விட்டார்கள். அதனால், சினிமாவில் நடிப்பது போல்! இனி மேல் அரசியலில் பதவி ஆசைக்கும், பணத்தின் ஆசைக்கும், கட்சிகளை மாறிக் கொண்டிருந்தார்களானால், மக்கள் அவர்களுக்கு மாற்றி, மாற்றி , வாக்களித்து, சரியான பாடம் புகட்டி, ஏமாற்றத்தை தான் கொடுப்பார்கள்.

எனவே,இனிமேல் கட்சியின் லேபிள் எல்லாம் வேலைக்காகாது . மக்களுக்காக வேலை செய்பவர்களுக்கு தான் அரசியல் என்ற நிலைமைக்கு தமிழக மக்கள் மாறி விடுவார்கள். இல்லையென்றால் பெரும்பான்மை இல்லாத, இதே போல் ஆட்சிதான் தமிழ்நாட்டில் எதிர்காலத்திலும் வர வாய்ப்பு உள்ளது.

அதனால், கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளில் கொள்ளை அடித்து ,சொத்து சேர்த்து இருப்பவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும். இதை மோடிக்கு எத்தனையோ முறை ,மக்கள் அதிகாரம் பத்திரிகையில் தெரிவித்து விட்டோம். எத்தனையோ சட்டங்கள் மாற்றுகிறார்கள்,

ஆனால், இதற்கென்று ஏன் ?சட்டத்தை மாற்றவில்லை? ஊழலை ஒழிப்போம் என்று பிஜேபியில் வெளி வேஷம் போடுகிறார்களா? அல்லது கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சியில் சொன்னால் தான், இந்த உண்மை என்று இவர்களுக்கு அர்த்தம் புரியுமா? – மாற்றத்தை தேடி மக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *