தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில்! தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா வெற்றியை நெருங்கி விட்டனர் – மகிழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க தேர்தல் ஆக இருந்தது. மேலும், தமிழக வெற்றி கழகம் தோல்வியுற்று இருந்தால், எதிர் கட்சிகள் தற்போது கொடுக்கும் நெருக்கடிகளை விட அதிகமானதாக இருக்கும்.

மேலும் ,இதை வைத்து எதிர் கட்சிகள், விஜயின் செல்வாக்கு மகளிடம் குறைந்து விட்டது என்று அதிமுகவும், திமுகவும் மற்ற அரசியல் கட்சிகளும் அரசியல் செய்திருப்பார்கள். அதற்கு இந்த இரண்டு தொகுதி மக்களும் , அது இல்லாமல்,முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.

மேலும்,இது உண்மையிலே இந்த இடைத்தேர்தல் வெற்றி! தமிழக மக்கள் நலனுக்கான வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், பெரும்பான்மை இல்லாத அரசாக தமிழக வெற்றி கழகத்தின் அரசு இருப்பதால், இதற்கு இன்னும் 10 எம்எல்ஏக்கள் ஜெயித்திருந்தால், தனி பெரும்பான்மை வந்து இருக்கும்.

இருப்பினும் ,எதிர்க்கட்சிகள் வலுவாக ஜெயிக்காததால், இது வெற்றியை தமிழக வெற்றி கழகம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதனால்,தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! சவால்கள் நிறைந்த ஆட்சியாக இருந்து வருகிறது.

மேலும் ,எதிர்கட்சிகள் ஒவ்வொரு நாளும் ,குறைகளும், எதிர்ப்புகளும் தெரிவிக்கின்றனர். அவர்கள் ஆட்சியில் பல ஆயிரம் குறைகளும், சொல்ல முடியாத தவறுகளும் இருந்தால் கூட, அதை எல்லாம் ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சென்றதில்லை. ஆனால்,

எதிர்க்கட்சிகளின் ஊடகங்கள், விஜய் அரசுக்கு எதிராக சிறிய விஷயங்களை கூட ,பெரிய விஷயமாக பெரிதுபடுத்தி, செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் சமாளித்து, இந்த நிர்வாகத்தை நடத்த வேண்டி உள்ளது.

மேலும், மக்கள் திமுக , அதிமுக விற்கு இரண்டாவது இடமும் ,மூன்றாவது இடத்தை கொடுத்திருக்கிறார்கள். திமுக இதில் இரண்டாவது இடம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை .அது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் என்றுதான் நாம் நினைத்தோம்.

இருப்பினும்,அந்த அளவுக்கு மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார்கள் என்பது இந்த அதிமுக, திமுகவுக்கு போடுகின்ற வாக்குகள் மனசாட்சியுடன் வாக்களிப்பவர்களா ?என்பது சந்தேகமாக உள்ளது.

மேலும், அப்படி வாக்களித்தவர்கள் அரசியல் தெரிந்தவர்களாக இருக்க மாட்டார்கள். நாட்டில் ஊழல் வரலாற்றுப் பிழையாக செய்த திமுக ,அதிமுக, ஊழல் வரலாறுகள் பற்றி இந்த மக்கள் படித்திருக்க மாட்டார்கள், என்று தான் நினைக்கிறேன்.

மேலும்,ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல் வாக்களித்து இருக்கிறார்கள். இந்த ஏழை ,எளிய நடுத்தர மக்களின் அறியாமை அரசியல்! நாட்டின் முன்னேற்றமும், எதிர்கால உழைப்பவர்களின் முன்னேற்றமும், படித்த இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றமும், ஊழல்வாதிகளால் அழிக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், எப்போது இந்த வாக்காளர்கள் புரிந்து கொள்வார்கள்? – ஊழலுக்கு எதிரான மக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *