தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எஸ் சி/ எஸ் டி வன்கொடுமை சட்டம் !அதே போல் பி.சி.ஆர்(PCR act) சட்டம் தீண்டாமையை ஒழிக்க கொண்டு வந்த சட்டம். இந்த இரண்டு சட்டத்தையும் மற்ற சமூகங்களை பழிவாங்க பயன்படுத்தப் படும் சட்டமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஒரு சமூகத்திற்கான பாதுகாப்புச் சட்டம், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த நிரபராதிக்கு அநீதி இழைப்பதற்கான அனுமதியாக மாறக் கூடாது.

சட்டம் என்பது ஒரு நீதியின் தராசு. இதில் எஸ்சி. எஸ்டி. வன்கொடுமை சட்டத்திற்கும்,( The Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989.)

குடியுரிமை பாதுகாப்பு சட்டத்திற்கும் வேறுபாடு உள்ளது. (Protection of civil rights act) இதில் காவல்துறையும், இந்த சட்டத்தை சரியாக படிக்காமல் ஒருவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் கொடுக்கும் புகாரை பதிவு செய்து அவர் மீது எஃப் ஐ ஆர் போட்டு விடுகிறார்கள்.

அதாவது விசாரணை இன்றி ,ஆதாரம் இன்றி, எஃப் ஐ ஆர் போடுவது, அதாவது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, சட்டப்படி தவறானது. ஆனால், இந்த சட்டத்தில் அதாவது எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் தான் ஒருவர் அவமதிக்கப்பட்டார், ஜாதி பெயரை சொல்லி திட்டினார், அல்லது வேறு சில காரணங்களுக்காக இதை பயன்படுத்தினால், உடனே எப்.ஐ.ஆர் போட்டு விடுகிறார்கள்.

இப்படிதான் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களிடையே தற்போது தென் மாவட்டத்தில் இந்த பிரச்சனை ஏற்பட்டு படிக்கக்கூடிய இரு சமூகத்தினர் இடையே, ஒரு பிரிவினையை உருவாக்கி ,ஜாதி மோதலை உருவாக்கி இருக்கும் ,இந்த சட்டம்! படிக்கும் மாணவன் மீது, இந்த சட்டத்தை போட்டு இருக்கிறார்கள்.

இது இப்போது தென் மாவட்டங்களில் மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கிறது. இதை நீக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். உண்மையிலே இந்த இரு சட்டங்களும் இன்றைய காலகட்டத்திற்கு இது தேவையா? என்பது குறித்து உச்ச நீதிமன்றமும், நாடாளுமன்றமும் விவாதிக்க வேண்டிய கட்டத்தில், இந்த சட்டம் உள்ளது.

மேலும்,அம்பேத்கர் கொண்டு வந்த அத்தனை சட்டங்களும், இந்த காலத்திற்கு ஏற்புடையது அல்ல. அது அவருடைய காலத்திற்கு மட்டுமே ஏற்புடையது என்று பலமுறை மக்கள் அதிகாரத்தில் இதை எழுதியிருக்கிறோம்.

தற்போது ஜாதி அரசியல் கட்சிகளை வைத்துக்கொண்டு, அதாவது திருமாவளவன் போன்ற சுயநல மிக்கவர்கள் ,அரசியல் கட்சிகளில் ஜாதி அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு, ஜாதிக்காக குரல் கொடுப்பவர்கள் என்ற தோரணையில், ஜாதி கட்சி எப்படி ?மற்ற ஜாதிக்காக இவர்கள் பேசுவார்கள்? நிச்சயம் பேச முடியாது.

இது ஒரு புறம் இருக்கட்டும். இவர்கள் பேசும் நியாயம் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பார்கள். ஆனால், அதே ஜாதி பெயரை சொல்லி திட்டிவிட்டான் என்று பொய் புகாரை கொடுக்கிறார்கள். அடுத்தது, அரசியல் அதிகாரத்திற்கு வர நினைப்பவர்கள், அப்போது மட்டும் மற்ற சமூகங்களின் ஓட்டு தேவைப்படுகிறதா? என்பது மற்ற சமூகங்களின் கேள்வி?

மேலும் , இப் பிரச்சனை ஊடகங்களில் பெரிய அளவில் செய்திகள் வெளி வரவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் இது அதிக அளவில் மக்களிடம் பேசப்பட்டு வரும், செய்தியாக உருவெடுத்துள்ளது. அது மட்டுமல்ல,

இப்போது இந்த ஜாதி போராட்டத்தில், பல சமூகங்கள் குறிப்பாக தேவர் ,வன்னியர், நாடார், நாயுடு, ரெட்டியார்,முக்குலத்தோர், உடையார் ,விஸ்வகர்மா, முதலியார், செட்டியார்,போன்ற அனைத்து பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களும், ஒன்றாக இணைந்து இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்து,இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

மேலும் ,தமிழக முதல்வர் விஜய்க்கும் இந்த கோரிக்கையை தங்களது போராட்டத்தின் மூலம் வைக்கிறார்கள். இது ஒரு பக்கம் அரசியல்! மற்றொரு பக்கம் ஜாதி பிரச்சனை, இதற்கிடையில் இந்த சட்டம் மாட்டிக் கொண்டு, தவறான நடைமுறையில் ,காவல்துறை இந்த சட்டத்தை வழக்கு பதிவு செய்து, நிரபராதிகள்!

இந்த சட்டத்தின் மூலம் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்களோ ,இல்லையோ, ஆனால், இந்த வழக்கு பதியப்பட்டவுடன் ,அவர்களை உடனே கைது செய்து விடுவது, அதற்கு ஜாமீன் மறுப்பது, பல ஆண்டுகள் இந்த வழக்கை நீதிமன்றத்திலே, நடத்திக் கொண்டு ,அவர்களுடைய குடும்பத்தையும் ,அவர்களுடைய தொழிலையும் வேதனைக்கு உள்ளாக்குவது மட்டுமல்ல, இதன் மூலம் அவர்களுக்கு பொருளாதார இழப்பையும் உருவாக்குகிறது இந்த சட்டம்.

மேலும்,இது தவிர இளைஞர்கள் மீதோ, அல்லது மாணவர்கள் மீதோ ,இந்த சட்டம் பதியப்பட்டால் ,அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கிறது. அவர்கள் எந்த அரசு வேலைக்கும், போக முடியாத அளவுக்கு, இந்த சட்டம் ஒருவரை பாதிக்கிறது. அடுத்தது,

தவிர,ஒருவர் அரசு கடைநிலை ஊழியராக இருப்பார். அவர் அதே அலுவலகத்தில் பணிபுரிய கூடிய ஒரு உயர் அதிகாரி மீது, எஸ்சி .எஸ்டி. வன்கொடுமை சட்டத்தில் புகார் அளித்தால் உடனே அவரை கைது செய்வது அல்லது அவரை பழிவாங்கி பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட அனைத்தும் இன்றைய காலகட்டத்திற்கு இது தவறான சட்டம்.

இந்த சட்டத்தை நாடாளுமன்றமும், உச்சநீதிமன்றமும் இதற்கு என்ன தீர்வு எடுக்க வேண்டுமென்றால்? உடனடியாக கைது?, உடனடியாக எஃப் ஐ ஆர் போடுவது?, விசாரிக்காமல் கைது செய்வது குற்றம், நிரூபிக்கப்படாமலே தண்டிப்பது இதையெல்லாம் நீக்க வேண்டும். தவறான வழக்கு பதிவு செய்யும் காவல்துறை அதிகாரிகளையும்,இந்த சட்டத்தில் அவர்களுக்கும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

இது தவிர ,பொய் புகார் கொடுப்பவர்கள் மீது இந்த சட்டம் அவர்களுக்கு எதிராக தண்டனை கொடுக்க வேண்டும். அதாவது, சட்டம் என்பது முதலில் சொன்னது போல்!

ஒரு நீதியின் தராசு !அந்த தராசு யார் தவறு செய்தாலும், அது தண்டனை வழங்கும். அதனால் தான், அதற்கு நீதி தேவதை தன்னுடைய கண்ணை கட்டிக்கொண்டு ,தராசை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படி பார்க்கும்போது ,பொய்யான புகார்கள் அளிப்பவர்கள் மீது அவர்கள் தான் முதலில் குற்றவாளியாக கருதி ,அவர்களை சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் இந்த சட்டம் மூலம் கொடுக்கப்படும் பொய் புகார்கள் ஒழிக்க முடியும்.

அவர்களை விட்டு,விட்டு நிரபராதிகளுக்கு தண்டனை கொடுப்பது சட்டத்தின் சமநிலை தீர்ப்பு அல்ல. மேலும்,இதைதான் மற்ற சமூகங்கள் வலியுறுத்தி நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பேச வேண்டிய முக்கிய கருத்து சட்டமாக்கப்பட வேண்டும்.

இது தவிர, உச்ச நீதிமன்றமும், நாடாளுமன்றமும், முக்கியமாக இந்த சட்டம் குறித்து ,நாட்டில் விரிவான ஆய்வு அறிக்கை எடுக்க வேண்டும். அது என்ன என்றால்? ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டம் தோறும், எத்தனை பிசிஆர் வழக்குகள்? எத்தனை எஸ்ஏஎஸ்டி வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளது ?அதனுடைய தரவுகள் எத்தனை உண்மையானது ?எத்தனை பொய்யானது ?இது அத்தனையும் எடுத்து பேசப்பட வேண்டிய முக்கிய கருத்து.

இதற்குப் பிறகு, தாழ்த்தப்பட்ட சமுதாயமும், பட்டியலின சமுதாயமும், இந்த சட்டம் குறித்து வாய் திறக்க கூடாது. ஏனென்றால், உண்மையான தரவுகள் வைத்து உச்ச நீதிமன்றமும், நாடாளுமன்றமும் ,இந்த சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

இங்கே ஜாதி அரசியல் கட்சிகள் முதல் ஜாதியை சங்க அமைப்புகள் வரை ,எங்களை பழிவாங்க பிஜேபி கொண்டு வந்த சட்டம் என்று பேசிக்கொண்டு இருப்பார்கள். ஆனால், நீங்கள் மற்ற சமூகங்களை இந்த சட்டத்தின் மூலம் பழிவாங்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

மேலும்,அம்பேத்கர் மற்ற சமூகங்களை பழிவாங்க இந்த சட்டத்தை கொடுத்துவிட்டு போனாரா? என்பதுதான் மற்ற சமூகங்களின் கேள்வி? இதற்கு தீர்வு காண வேண்டியது உச்ச நீதிமன்றமும், நாடாளுமன்றமும் இணைந்து தீர்வை ஏற்படுத்துமா? என்பதுதான் மற்ற சமூகங்களின் முக்கிய கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *