வழக்கம் போல வருகிற 2024 நவம்பர் மாதத்திலும் எக்கச்சக்கமான புதிய விதிகள் (New Rules From November 1) அமலுக்கு வருகிறது.
அப்படியாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் சில முக்கியமான புதிய விதிகள், புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் புதிய மாற்றங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்:
- யுபிஐ சேவையில் 3 முக்கிய மாற்றங்கள்: ஆர்பிஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியானது யுபிஐ-ன் பரிவர்த்தனை வரம்பை (UPI transaction LimitI) உயர்த்தி உள்ளது. இதோடு யுபிஐ லைட் (UPI Lite) மற்றும் யுபிஐ 123 பே (UPI 123 Pay) பரிவர்த்தனை வரம்பையும் அதிகரித்துள்ளது. இந்த மூன்று மாற்றங்களும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.
யுபிஐ 123 பேமென்ட்டின் வரம்பானதுரூ.5000 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல யுபிஐ லைட் வாலட்டின் வரம்பும் ரூ.2000 இல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இதன் மூலம் சாதாரண மக்கள் சிறிய பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ லைட்டை அதிகம் பயன்படுத்த முடியும். கடைசியாக யுபிஐ லைட் வழியிலான ஒரு பரிவர்த்தனை வரம்பானது (per transaction limit) ரூ.500 இல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- ரெப்போ ரேட் (Repo Rate): இந்திய ரிசர்வ் வங்கி ஆனது தனது கடன் கொள்கையில் (Credit policy) தொடர்ந்து பத்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்துள்ளது. ரெப்போ விகிதம் சமமாக இருப்பதால், வீட்டுக்கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களில் உங்கள் இஎம்ஐ-யில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.
- ஒடிபி மெசேஜ்: டிராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது ஒடிபி (OTP) தொடர்பான புதிய விதிகளை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவருகிறது. இதன்கீழ் முதன்மை நிறுவனங்களிலிருந்து (Principal Entitie – PEs) வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களை கண்காணிக்க முடியும் என்பதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (அதாவது ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள்) உறுதி செய்ய வேண்டும்.மெசேஜ் டிரேசிபிலிட்டி (Message traceability) தொடர்பான இந்த புதிய விதிகள் வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து வகைகளுக்கும் பொருந்தும். அதாவது இனிமேல் பொருந்தாத அனுப்புநர் விவரங்கள் (Mismatched sender details) அல்லது தெளிவான அனுப்புநரின் அடையாளம் (Clear sender identity) இல்லாத எந்தவொரு மெசேஜ்களுமே பிளாக் செய்யப்படும்.
டிராய் அறிவித்துள்ள இந்த புதிய விதிகளானது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த கூடும் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கவலை எழுப்பியுள்ளன. ஏனென்றால் ஆன்லைன் வழியாக பணம் செலுத்துவது முதல் பார்சல்களை டெலிவரி செய்வது வரையிலாக..பல்வேறு சேவைகளுடன் ஒடிபி மெசேஜ்கள் (OTP Messages) இணைக்கப்பட்டுள்ளது. அதில் மெசேஜ் டிரேசிபிலிட்டியை கொண்டுவருவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பல வகையான சேவைகளின் போது சிரமத்தை சந்திக்க நேரிடும்.
- இபிஎப்ஓ-வின் டிஜிட்டல் சிக்னேச்சர் சான்றிதழ் / இ-சிக்னேச்சர்: இபிஎப்ஓ எனப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) ஆனது டிஜிட்டல் சிக்னேச்சர் சான்றிதழ் (Digital Signature Certificate – DSC) மற்றும் இ-சைன் கோரிக்கைகளை (E-Sign requests) செயலாக்குவதற்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இது 2204 நவம்பர் 1 முதல் அல்ல, ஏற்கனவே நடைமுறைக்குவந்துவிட்டது போல் தெரிகிறது.
இதன்கீழ் டிஎஸ்சி (DSC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டிஜிட்டல் சிக்னேச்சர் சர்ட்டிஃபிகேட்டின் பயன்பாடு ஆனது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எம்பிளாயரிடம் (Employer) இருந்து குறைந்தபட்சம் ஒரு டிஎஸ்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட கையொப்பம் (Authorized signatory) இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட வேண்டும். இபிஎப்ஓ-வின் கூற்றுப்படி, இதை ஒரு ஆன்லைன் கோரிக்கை கடிதம் வழியாக யுனிஃபைட் போர்ட்டல் (Unified Portal) வழியாக மிகவும் எளிதாக சமர்ப்பிக்க முடியும். இதற்கான செயல்முறை 15 நாட்களில் முடியும்.