
திருவள்ளூர் மாவட்டத்தில் ,கிராம மக்கள் !அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய கிரிமினல்களிடமும், எம்எல்ஏ, எம்பிகளிடமும், பொது சொத்துக்களை பாதுகாக்க போராட வேண்டி இருக்கிறது. ஏதோ இல்லாதவன் ஒரு செண்டோ, ரெண்டு செண்டோ, ஆக்கிரமித்து வீடு கட்டி இருக்கிறான் என்று சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கட்சிக்கொடிக் காட்டிக்கொண்டு, ஏக்கர் கணக்கிலும்,ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

தற்போது இந்த நிலைமை,தமிழக முழுதும், பதவியில் இருப்பவர்களும், பதவிகள் இல்லாதவர்களும், அரசியல் கட்சி பேதம் இன்றி ,இந்த வேலையை செய்து வருகிறார்கள். இது தவிர, நான் தாழ்த்தப்பட்டவன் அதனால் நான் ஆக்கிரமிப்பு செய்து கொள்கிறேன். இதில் ஏதாவது ஒரு ஜாதி கட்சியோ, அல்லது அரசியல் கட்சியோ வைத்துக் கொண்டு, தமிழக முழுதும் ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

இவர்களிடம் உள்ள ஆக்கிரமிப்புகளை, அகற்றுவதற்கு கிராம மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டி இருக்கிறது. இது எதற்கு? ஏன் கிராம மக்கள் புகார் அளித்தால்! அந்தந்த மாவட்ட ஆட்சியரும், அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலரும், அதை எடுக்க முடியாதா?
கடந்த காலங்களில் மாவட்ட ஆட்சியர்களும், வருவாய் துறை அதிகாரிகளும், கிராம மக்கள் புகார் கொடுத்தாலே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால், இப்போது ஒவ்வொரு பிரச்சனைக்கும் ,கிராம மக்கள் நீதிமன்றம் சென்று கொண்டிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும்,அப்படிதான் அதிமுக எம்பி தம்பிதுரை ,100 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 61 ஏக்கர் நிலத்தை கோனாம்பேடு, கிராமத்தில் , தனது கல்லூரி சார்ந்த இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதை எதிர்த்து கிராம மக்கள் பல ஆண்டுகள் ,நீதிமன்றம் சென்று போராடிக் கொண்டிருந்தார்கள்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு போட்ட பிறகு, நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆக்கிரமிப்பு, அகற்றுவதாக உறுதி அளித்துள்ளார். இது கிராம மக்களுக்கு தேவையானா? இவர் பதவியை வைத்துக்கொண்டு ,100 கோடி மதிப்புள்ள சொத்தை ஆக்கிரமிப்பு செய்து, அனுபவித்துக் கொண்டிருப்பார்.

கிராம மக்கள் அதை எதிர்த்து நீதிமன்றம், அரசு அதிகாரிகள், என அவர்கள் வேலை வெட்டி எல்லாம் விட்டு,விட்டு ,இதற்காக அந்த கிராமத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் நடையாய் நடக்க வேண்டும். என்ன சட்டம் இது? ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தான் அரசாங்கத்தில் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்.
ஆனால், சம்பளம் வாங்குபவர்கள், மெத்தனமாக ,அலட்சியமாக இருப்பதால், கிராம மக்கள் இதற்கு எல்லாம் போராடிக் கொண்டிருப்பார்களா? இனிமேல், நீதிமன்றம் இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளோ அல்லது அளவுக்கு அதிகமாக மண் எடுத்தாலோ ,அல்லது அதை நிறுத்த போராடினாலோ, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்,
பாதிக்கப்பட்டவர்களோ அல்லது சமூக ஆர்வலர்களோ நீதிமன்றம் சென்றால், அவர்களுக்கு பல லட்சங்களை, இழப்பீடாக வழக்கு தொடுத்தவருக்கு, கொடுக்க வேண்டும். ஏனென்றால், அரசு அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலை அது.மேலும்,
இவர்கள் அலட்சியமாக இருப்பதால், நீதிமன்றம் ஒவ்வொரு அரசு அதிகாரிகளுக்கும், லட்சக்கணக்கில் அபராதம் விதித்து , அந்தத் தொகை பாதிக்கப்பட்ட நபர்களுக்கோ அல்லது வழக்கு தொடுத்த சமூக ஆர்வலருக்கோ ,கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால், ஆக்கிரமிப்பு செய்த நபர்களுக்கு மூன்றாண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கடுமையான சட்டங்கள் கொண்டு வராமல் நாட்டில் பொது சொத்துக்களை பாதுகாப்பது கடினமான ஒன்று தவிர, தற்போது ஒவ்வொரு கிராமத்தில் உள்ள சமூக ஆர்வலர்களுக்கு, இப் பிரச்சனைகள் போராட்டமாக உள்ளது.
எனவே, இப்படி பட்ட ஒரு சட்டம் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் தான் ,பொது சொத்துக்களை இப்படிப்பட்ட ஒரு சொத்துக்களை அரசியல் கட்சி கொள்ளையர்கள் இடம் இருந்து பாதுகாக்க முடியும்.
மேலும்,இதற்கு உடந்தையாக இருப்பது அரசு அதிகாரிகள், இவர்கள் அவர்களுக்கு பயந்தும், பணத்தை வாங்கிக் கொண்டும் அலட்சியம் காட்டுகிறார்கள். மேலும், பொது சொத்துக்கள், ஒவ்வொரு பகுதிகளிலும், இருக்கக்கூடிய பொது சொத்துக்கள், அந்த கிராம மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கக்கூடியது.
இதை இப்படிப்பட்ட அரசியல் கட்சி கிரிமினல்கள், அது கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், இது போல் எம்பி, எம்எல்ஏக்களாக இருந்தாலும், இவர்களிடம் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் நாட்டில் அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்காது.

எனவே, இவர்களுக்கு கடும் தண்டனையும் கொடுக்க வேண்டும். தவிர,அரச சொத்துக்களை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும், மூன்றாண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை ,குறைந்தபட்ச தண்டனையாக கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு நிரந்தர தீர்வு.