நாட்டில் பருவநிலை மாற்றத்தால்! வெப்பம் ஒரு பக்கம்,மழை ஒரு பக்கம், இந்த மழை நீரை ஏரிகளில் சேமிக்காமல்! கர்நாடகாவை தண்ணீருக்கு தமிழகம் கையேந்தி அரசியல் செய்வது வீண்?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் மக்கள் ஒரு பக்கம் வெப்பத்தால் வெளியில் சென்று வருவதற்கும் வேலை செய்வதற்கும் இது ஒரு மிகப்பெரிய வேதனையான போராட்டமாகவே உள்ளது.

இதற்கு பசுமை நிறைந்த காடுகளை பாதுகாப்பது அவசியமானது. மேலும், அதேபோல் மரக்கன்றுகளை நட்டு பசுமையான இயற்கை வளத்தை உருவாக்குவது அவசியம் ஆனது.

இதற்கு அவசியமானது,நாட்டில் பெய்யும் மழையை ஏரிகளில் குளங்களில் தேக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் செடி கொடிகள் இயற்கை வளங்கள் உருவாக்க முடியும். மேலும் இந்த மழை நீர்! வீணாக கடலில் சென்று கலப்பதால் ,மக்கள் குடி தண்ணீருக்கும் ,போராடுகிறார்கள். விவசாயத்திற்கும் விவசாயிகள் போராடுகிறார்கள்.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால்! தமிழக அரசு உடனடியாக தமிழகத்தில் உள்ள ஏரி ,குளம் குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் சேமிப்புக்கான நீர் வளத்தை அவசியம் பெருக்க வேண்டும். மேலும்,

இதைதான் மதுரை உயர்நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்து ,கட்டிடங்கள் கட்டியிருந்தால், அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகளின் சம்பளத்தில், அதற்கான செலவு தொகையை பிடித்தம் செய்து அரசாங்கத்திற்கு சேர்க்க வேண்டும். ‌மேலும்,இதனால் அரசாங்கத்திற்கு ஏற்படும் நஷ்டம் இவர்களை சார்ந்தது என்று தீர்ப்பளித்துள்ளது.

இப்படிப்பட்ட மோசமான பருவநிலை மாற்றத்தின் சூழ்நிலையால், மக்கள் வெயிலின் கொடுமையும், தண்ணீருக்கு கையேந்தும் கொடுமையும், இதனால், விவசாயம் பாதித்து ,உணவுப் பொருட்களின் விலை உயர்வு, மக்களுக்கு மேலும் ,வாழ்க்கை போராட்டத்தை, வாழ்க்கை சுமையை ,அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும், இது ஏற்படுத்தும் என்பது உறுதி .

இதை தடுக்க அரசு தவறினால், நாட்டில் மக்கள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் .உணவுக்காக போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது தவிர ,இந்த பருவ நிலை மாற்றத்தால், நாட்டில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *