THANKS FOR DMK IT WING .
இந்தியாவில் பல்வேறு மதங்கள், மொழிகள் ,கலாச்சாரங்கள் பின்பற்றி வாழுகின்ற மக்கள், தங்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை தேடும்போது பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்கள் இந்த பிரிவினைக்குள் மதங்கள் அரசியலை ஏற்படுத்திக் கொள்கிறது.
இதில் பிஜேபி மதம் சார்ந்த கொள்கைக்காக இருந்தாலும், நாட்டின் அனைத்து மதங்களும், அனைத்து ஜாதிகளும் ஒரே சட்டத்தை கடைபிடித்து வாழ்கின்ற முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அதுதான் இந்தியாவில் தற்போது கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டம் .ஆனால், மதச்சார்பின்மை கொள்கை என்று பேசிக் கொண்டிருக்கும் அதிமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, குறிப்பாக சொல்லப்போனால் இந்தியா கூட்டணி கட்சிகள், இத்தகைய கொள்கைகளை பேசிக்கொண்டு அரசியல்தெரியாதவர்களை முட்டாள் ஆக்கி வருகிறார்கள்.அவர்கள் தெரிந்தார்போல் கட்சிகளில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். தெரிந்ததெல்லாம் எப்படி மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கலாம். தவிர,
THANKS FOR ARRASIAL ATHMA
இந்த மதச்சார்பின்மை கொள்கையை பேசுகின்ற அத்தனை கட்சிகளும், ஒவ்வொரு கிறிஸ்துவ, சீக்கிய ,முஸ்லிம் மத வாதிகள் பேசுகின்ற தங்களின் மதங்களுக்கான தனிக் கொள்கை, தனி சட்டம், வரைமுறை என்பதை அவர்கள் பேசுகின்ற அத்தனை சட்டங்களும் ,ஏற்றுக் கொள்வோம் என்கிறார்கள். இந்த மதச்சார்பின்மை அரசியல் கொள்கை கட்சிகள்.இதுதான் மதச்சார்பின்மை கொள்கையின் அரசியல் மேலும், கொள்கை என்பது பேசுவதற்கு கடைப்பிடிப்பதற்கு அல்ல, அது மக்களுக்கு தான், எங்களுக்கு அல்ல .இதுதான் மதச்சார்பின்மை கட்சிகளின் கொள்கை வரலாறு
இந்த ஒரே கான்செப்ட் மட்டும்தான் இத்தனை 50ஆண்டுகளாக தமிழ்நாட்டு அதிமுக ,திமுக அரசியல் மதச்சார்பின்மை கொள்கை. மேலும், மக்களின் தேவை பணம். பணத்தை கொடுத்து எல்லோரையும் விலைக்கு வாங்குவது, மக்களை விலைக்கு வாங்குவது ,மீடியாக்களை விலைக்கு வாங்குவது, சட்டத்தை, நீதிமன்றத்தை விலைக்கு வாங்குவது, அதிகாரிகளை விலைக்கு வாங்குவது, காவல்துறையை விலைக்கு வாங்குவது, எல்லாமே பணத்தை கொடுத்தால் கதையை முடித்து விடலாம். பணம் கொடுத்தால் ரவுடிகளை விலைக்கு வாங்கலாம். ஆகக் கூடிய தமிழ்நாட்டின் அரசியல் ஒரே சித்தாந்தம் பணம். என்ற கொள்கை.
இதில் என்ன மதச்சார்பு கொள்கை? மதச்சார்பின்மை கொள்கை ? கொள்கை என்பது அரசியல் மேடைகளில் பேசுவதற்கு, அது கடைப்பிடிப்பதற்கு அல்ல. அதை மேடைகளில் பேசிக்கொண்டு இருக்கும்போது , ஆரவாரத்துடன் கட்சி முட்டாள்கள் கைதட்டுவார்கள் .அவர்களை முட்டாள்கள் என்று கூட சொல்ல முடியாது. அவ்வளவு சுயநலவாதிகள்.தன்னை வளப்படுத்திக் கொள்வதற்காக இன்று கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .இது கட்சியில் இருப்பவர்கள். கொள்கைக்காக இருப்பவர்கள் மிகச் சிலரே .
ஆனால், கூட்டணி கட்சிகள் எப்படி இருக்கிறது? என்றால் , எந்த கட்சி அதிக பணம் கொடுக்கிறது? அந்த கட்சிக்கு காவடி தூக்குவார்கள். யார் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு இந்த சிறுபான்மை மக்கள் வாக்களிக்கிறார்கள் .அதேபோல் பெரும்பான்மை மக்கள் அரசியல் அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் பணம் கொடுத்தால் விலை போகக் கூடியவர்கள். இங்கே மதச்சார்பின்மை கொள்கை என்ன? மதம் சார்ந்த கொள்கை என்ன? இரண்டுக்கும் பணம் தான் மக்களின் கொள்கை. இந்த கொள்கைக்கு பேசிக்கொண்டு முட்டாளாக்கும் அரசியல் தான், தமிழ்நாட்டு அரசியல்.
அதனால் தான், இந்த மக்கள் உண்மை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .அரசியல் தெரியாமல் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய பத்திரிக்கை, சிறிய பத்திரிக்கை என்று அலட்சியம் செய்யும் இந்த மக்கள், உண்மை எந்த பத்திரிக்கையில் இருக்கிறது? என்பது கூட தெரியாத முட்டாள்களாக இருக்கிறார்கள். பத்திரிக்கை பெரிதாக இருந்து, தொலைக்காட்சி பெரிதாக இருந்து, பயனில்லை .உண்மை எதில் இருக்கிறது? என்பதுதான் மக்களுக்கான பயன் என்பதை புரிந்து கொண்டால் சரி .