நாட்டில் மத்திய அரசு கொண்டுவரும் ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் தேவையா ?

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல்கள் கடந்த காலங்களில் இருந்த ஒன்றுதான். இது இப்போது சாத்தியமா? இதை ஏன் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன? இது தவிர, தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறதோ அத்தனை அரசியல் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

காரணம், தேசிய கட்சிகள் தான் ஒரே நாடு ஒரே தேர்தலில் முக்கியத்துவம் பெறும். மாநிலங்களில் இருக்கக்கூடிய துண்டு கட்சிகள் எல்லாம் ஆங்காங்கே மக்களிடம் ஆதிக்கம் செலுத்த முடியாது. இவர்கள் பிரிவினை சக்திகளாக மதத்தை வைத்தும், ஜாதியை வைத்தும், மக்களிடம் அரசியல் செய்ய முடியாது.இந்தியா பல்வேறு மதங்கள், பல்வேறு ஜாதிகள் கொண்ட நாடு .அதனால், இங்கே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களிடம் ஜாதி, மதம் எல்லாமே அடிபடுகிறது.மக்களிடம் குறுகிய வட்டத்திற்குள் அரசியல் செய்ய முடியாது.

அடுத்தது, ஒரே நாடு ,ஒரே தேர்தல்! தேர்தல் செலவு மிகவும் குறைந்து விடுகிறது. இதனால், மக்களின் வரிபணம் மிச்சமாகும். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சட்ட வல்லுநர்கள் ,அதற்கான உயர் மட்டும் குழுக்கள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டால் சுமார் 10 மாநிலங்கள் ஆட்சி கலைக்கப்படும் சூழ்நிலை இருப்பதாக தகவல் . இதனால், மாநிலத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் கலக்கத்தில் இருப்பதாக தகவல்.

இங்கே ஒரு முக்கியமான விஷயம், நாட்டு மக்களுக்கு இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல்! நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு, தேசத்தின் ஒற்றுமை, இதன் அடிப்படையில் தான் இருக்கிறது. இதனால், மத்திய அரசு மக்களுக்கு எந்த சட்டங்கள் கொண்டு வந்தாலும், அதை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவதில் மிகப்பெரிய சிக்கல்கள் இருந்து வருகிறது. சிலர் எதிர்க்கிறார்கள், இந்த பிரச்சனை எல்லாம் இருக்காது. இதுவரையில் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுகளுக்கும் இடையே இருக்கின்ற போட்டி அரசியல் முடிவுக்கு வரலாம் .

தவிர, மாநில அரசியல் கட்சிகளின் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலை. மேலும், நாட்டில் அரசியல் கட்சிகள் மக்களை பிரித்தாலும் சூழ்ச்சிக்கு முடிவு கட்டும் வேலை தான். ஒரே நாடு, ஒரே தேர்தல் இது உண்மையிலே நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு, பொருளாதார வளர்ச்சிக்கு, அந்நிய சக்திகளின் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி .இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் ஆனது. அதனால், ஒரே நாடு, ஒரே தேர்தல் வருவதால், இதை மக்கள் வரவேற்பது மிகவும் அவசியமானது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *