வங்கி என்பது மக்களின் பொது சேவைக்காக இருக்க வேண்டுமே ஒழிய, வியாபார நோக்கத்திற்காக வங்கி சேவை இருக்கக் கூடாது. ஆனால், தற்போது வங்கி சேவை நாட்டில் அப்படி தான் இருந்து வருகிறது ,மேலும் ,நாட்டில் கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்ட கடன்கள் வரா கடன்கள் ஆக்கி, தள்ளுபடி செய்கிறார்கள் ,ஆனால், ஏழை ,எளிய நடுத்தர மக்கள், வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டில் வங்கி அதிகாரிகள் இருந்து வருகிறார்கள் . அதில் எல்லா கடன்களும் தள்ளுபடி செய்ய வேண்டியது கூட கிடையாது.
(மேலும், இது பற்றிய சில கருத்து சமூக வலைதளத்தில், வெளிவந்திருக்கும் உண்மை, அதை வாங்கி உயரதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் ,மத்திய, மாநில அரசுக்கும் வெளிப்படுத்துகின்ற உண்மைகள். )
தொழிலுக்காக வாங்கிய கடன்கள் ,அந்த தொழில் நலிவடைந்து ,கட்ட முடியாமல் சிக்கித் தவிக்கும் பல லட்சம் தொழில்கள் ,இந்த கொரோனா காலத்தில் இருந்து முடக்கப்பட்டுள்ளது .அதை கட்டிய வரைக்கும் அசல் வந்தால் போதும் என்று கூட இவர்கள் நினைப்பதில்லை.
மேலும், வங்கி என்பது அதிகாரிகளுக்கு அதை ஒரு வியாபார நிறுவனமாக தான் பார்க்கிறார்கள். ஆனால், மக்கள் அது சேவையாக நினைக்கிறார்கள். இது இரண்டுக்கும் இடையில் தான் மத்திய, மாநில அரசுகள் என்னென்ன பிரச்சனைகள் மக்கள் சந்திக்கிறார்கள்? என்பதை எங்களைப் போன்ற சமூக நல ஊடகங்கள் தெரிவிக்கின்ற கருத்தை ஆய்வு செய்து, வங்கிகளின் அராஜக அடாவடித்தனங்களை தடுக்க வேண்டும் என்பது வங்கி வாடிக்கையாளர்களின் கோரிக்கை.
மேலும், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடித்தட்டு மக்களுக்கும் வங்கியின் சேவை போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர் ஒரு பைசா கூட வங்கி கணக்கில் இல்லாமல், ஜந்தன் வங்கி கணக்கை உருவாக்கினார் .இங்கே வங்கியில் பேலன்ஸ் இல்லையென்றால் ,அதற்கு 500 ரூபாய் பிடித்து விடுகிறார்கள். அதேபோல் ஏடிஎம்மில் அவசரத்துக்கு 500 ,1000 எடுக்கும் போது கூட 23 ரூபாயிலிருந்து தற்போது 24 கமிஷன் எடுத்துக் கொள்கிறார்கள். எத்தனை முறை பணம் எடுத்தாலும், அத்தனை முறைக்கும் இந்த கமிஷன் போய்விடுகிறது.
மேலும், ஒருவர் வங்கி சேவை என்பது பாதுகாப்பிற்காகவும், அவசரத்திற்காகவும், வங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இருக்க வேண்டும். ஆனால், பொது மக்களின் பணத்தை எந்தெந்த வழிகளில் எடுக்கலாம்? என்று திட்டம் போட்டு செயல்படக் கூடாது .மேலும், அந்த காலத்தில் ஈட்டிக்காரன் என்று சொல்வார்கள். அதாவது தற்போது, அவர்களுக்கு கந்துவட்டிக்காரர்கள் என்று பெயர் இருக்கிறது. அவர்களிடம் மாட்டிவிட்டால் அசல் தொகையை விட ,இரண்டு, மூன்று மடங்கு வட்டியை கட்டி ஏழை, எளிய நடுத்தர மக்கள், இன்றும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுபோல் வங்கி சேவை இருக்கக் கூடாது .
வங்கி என்பது மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும், உறுதுணையாக இருக்க வேண்டும் .மேலும், எத்தனையோ கம்பெனி நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கலாம். அதையெல்லாம் எந்தெந்த வழிகளில் அதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்? என்று வங்கி நிர்வாக உயர் அதிகாரிகள், தீர்வு காண வேண்டும் என்று வங்கி வாடிக்கையாளர்கள் சார்பில் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் முக்கிய கோரிக்கை.