
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை ஜவஹர்லால் நேருவும், சுதந்திர போராட்ட தியாகிகளும் ,சேர்ந்து 1938ம் ஆண்டு தொடங்கினர்.மேலும்,
மேற்படி அந்த பத்திரிகை கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நிதி நெருக்கடியால் வெளி வருவது நின்றுவிட்டது.அந் நேரம் அக் கம்பெனிக்கு 90 கோடி ரூபாய் கடன் இருந்தது. அதனை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. அப்பணம் திரும்பக் கொடுக்கப்படாத காரணத்தால் ,அந்த நிதி பங்குகளாக மாற்றப்பட்டுவிட்டது.
இதன் சொத்து மதிப்பு சுமார் 5000 கோடி இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். மேற்படி இந்த சொத்து சட்டவிரோதமாக வாங்கியது தொடர்பாக பா.ஜ.க சுப்ரமணிய சுவாமி கடந்த 2012ம் ஆண்டு ,டெல்லி கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். மேலும்,

பத்தாண்டுகளுக்கு மேலாக வழக்கு விசாரணைக்குப் ,பிறகு தற்போது இவ் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது டெல்லி போலீஸார் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.மேலும்,
இம் மனுவை விசாரித்த வந்த நீதிமன்றம் தற்போது ,இது குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், விசாரணையில் ,இவ் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, இந்த வழக்கில் இவர்கள் மீது கடந்த ஏப்ரல் மாதம் பணமோசடி சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தது.மேலும்,
மேற்படி நேஷனல் ஹெரால்டு வழக்கில் முடிவை நெருங்கி வருவதால் ,சோனியா, ராகுலுக்கு தண்டனை உறுதியாகுமா?

மேலும்,
இவ் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பைக் காலவரையின்றி ஒத்தி வைத்திருக்கிறது. இதையடுத்து அமலாக்கப்பிரிவு கேட்டுக் கொண்டதற்கிணங்க டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இவ் விவகாரத்தில் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர். அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் நான்கு பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் ,நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் தாய் நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) நிறுவனத்தை மோசடியாக வாங்குவதற்கு மேற்கண்ட 6 பேரும் குற்றவியல் சதியில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல,பணமோசடி சட்டத்தின் 66(2)வது பிரிவின் கீழ் எந்த ஒரு விசாரணை அமைப்பிடமும் அமலாக்கப்பிரிவு யார் மீதும் வழக்குப் பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்ள முடியும்.மேலும்,
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில்
இப்போது இதில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்குத் தலா 38 சதவீத பங்குகள் இருக்கின்றன. யங் இந்தியன் என்ற கம்பெனிக்குதான் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பெரும்பான்மை பங்கு இருக்கிறது. யங் இந்தியன் கம்பெனியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இயக்குனர்களாக இருக்கின்றனர்.