
செந்தில் பாலாஜி ஓராண்டு காலமாக சட்டவிரோத வன பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவர் ஜாமினில் வெளியே வந்தவுடன் மீண்டும் அதே துறையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு இவருடைய ஜாமீன் பற்றி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவானது நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி அபே ஓகா, “மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும்,பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும்? நாங்கள் ஜாமீன் கொடுத்த அடுத்த நாளே நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்றது எந்த வகையில் நியாயமானது ? என்னதான் நடக்கிறது” என நீதிபதி அபே ஓகா கேள்வி எழுப்பியுள்ளார். தவிர,அமைச்சருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க பயப்படுவார்கள் என்றும் குறிப்பிட்ட நீதிபதி ஓகா, இதுகுறித்த விளக்கத்தை பிரமாண பத்திரமாக அளிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.