கடந்த 2011 மற்றும் 16 ஆகிய காலங்களில் பாமக ,தேமுதிக ஓட்டு வங்கி 12 சதவீத முதல் 7 சதவீதமாக இருந்தது .இப்போது அதனுடைய வாக்கு வங்கி 1 ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்கிறார்கள். அதே போல், தேமுதிக அதனுடைய வாக்கு வாங்கி சதவீதத்திலிருந்து எங்கே? என்று தேட வேண்டி இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரண்டு கட்சிகளும் பாஜகவிடமும், அதிமுக விடமும் ரகசிய கூட்டணி பேரம் நடந்ததாக தகவல்.
அதேபோல் திமுக விடமும் பாமக தேமுதிக கூட்டணி பேரம் நடத்தியதாக தகவல் அங்கே இவர்கள் உள்ளே வந்தால் ஏற்கனவே இருக்கின்ற கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு கொடுப்பதில் நெருக்கடிகள் வரும் என்பதால் அங்கு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் அதன் பிறகு பிஜேபி இடம் பாமக பேரம் பேசியதில் பாமக விற்கு ஏழு எம் பி சீட், ஒரு ராஜ்யசபா சீட் ,மேலும், பணம் 500 கோடி கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டது .
எங்கு போனாலும் பாமக இந்த வன்னியர் சமுதாயத்தை கேவலப்படுத்தும் விதமாக கூட்டணி பேரம் என்று முதலில் பணத்தை தான் பேரம் பேசுவார்கள். அது முடிந்ததும் கொடுக்கும் சீட்டை வாங்கிக் கொள்வார்கள். இப்படி தான் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்தில் இவர்களுடைய கூட்டணி பேரம் .இது இந்த வன்னிய சமுதாய மக்களுக்கு தெரிந்து விட்டது. அதனால்தான் நம்மை வைத்து இப்படி விலை பேசுகிறார்களே, இதனுடைய செய்திகள் அன்றைய கால பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்தது.
சமுதாயம் எத்தனை நாளைக்கு ஏமாறும்? முட்டாள்கள் ஏமாந்து கொண்டிருப்பார்கள் .இதை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம், சமுதாயத்திற்கு சேவை செய்வதுபோல், சமுதாயத்தை சீரழித்துக் கொண்டு சமூகத்திற்கு எதிரான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது . வன்னிய சமுதாயத்திற்கு நம்பிக்கை கூறிய தலைவர்கள் கடந்த காலங்களில் இருந்தார்கள். இந்த ராமதாஸ் வந்து சமுதாயத்திற்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்தி வைத்துவிட்டார்.
இதுவரை இந்த சமுதாயத்திற்கு இவர் செய்த நன்மை என்ன? அதேபோல், இந்த கட்சியில் இருப்பவர்கள் செய்த நன்மை என்ன? சமுதாயத்தின் பெயரை சொல்லி ,ஊர் சொத்துக்களை கொள்ளை அடிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது,மணல் கொள்ளை நடத்துவது, ஏரி மரம் ஏலத்தில் ஊழல் செய்வது, ஏதாவது ஒரே ஒரு செயல் கூட நல்லது இல்லை .இவர்களை (FOLLOW )பாலோ செய்து பல சங்கங்கள், கூட்டமைப்புகள் ,இவர்களுக்கு எதிராக பல வந்துள்ளது .
ஆனால், ஒன்று கூட அதில் சமுதாய நன்மைக்காக பாடுபடுமா? எல்லாம் சமுதாயத்தை விற்று சாப்பிடுபவர்கள் தான் இருக்கிறார்கள். கடைசியாக தற்போது கூட கரூர் மாவட்டத்தில் ஆரம்பித்துள்ள வன்னியர் மக்கள் கட்சி ,அதன் தலைவர் சக்தி படையாச்சி என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடம் கேட்டேன் .
அவர் சொன்னது பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து, இதில் சேர்வதாக பலர் வந்தனர். அப்போது நான் உங்களுக்கு பொறுப்புக்களை கொடுக்க மாட்டேன். நீங்கள் கட்டப்பஞ்சாயத்து ,மணல், ஏரி மண் கொள்ளையடிப்பவர்களிடமிருந்து பணம் வாங்குவது, போன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டு வந்தீர்கள். இங்கே அதற்கெல்லாம் வேலை இல்லை. இது சமுதாய நலன் நோக்கத்திற்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனால் நான் திட்டவட்டமாக யாருக்கும் எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த சமுதாயத்திற்காக இவர் ஒருவர் தான் தேர்வார் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது.எத்தனை பேரை பார்த்தேன். கூட்டமைப்பு ,கட்சி, சங்கம் எனக்கு இந்த சமுதாயத்தின் மீது ஒரு வெறுப்பு வந்தது. நல்லவர்கள் பின்னால் நிற்க மாட்டார்கள். ஏமாற்றுபவர்களின் பின்னால் நின்றால்,சமுதாய நன்மைக்காக எதையும் செய்ய முடியாது.
மேலும், சமுதாயம் ராமதாசை நம்பி ஏமாற இனி தயார் இல்லை என்பது மட்டும் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால், தனக்கு சமுதாய வாக்குகள் இருக்கிறது என்று ராமதாஸும் ,பாட்டாளி மக்கள் கட்சியினரும், கூட்டணி பேரத்தில் பிஜேபியும் ,அதிமுகவையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கும் நிலைமை என்ன? என்று தெரிந்து தான், அண்ணாமலை இடம் பேசுவதை தவிர்த்த அன்புமணி மற்றும் ராமதாஸ் அமித்ஷாவிடம் அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறார்கள் .
அமித்ஷா பாமகவின் கடந்த கால நிலை ,தற்போதைய அரசியல் நிலவரம் எல்லாம் அண்ணாமலை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, இவர்களுக்கு அப்பாயின்மென்ட் நோ என்று வந்துவிட்டது. அதன் பிறகு ஜே பி நட்டாவிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் சென்னை வரும்போது சந்திப்பதாக அவரும் கொடுத்து விட்டார் .இந்த விஷயம் அண்ணாமலைக்கு தெரிந்து. அண்ணாமலை பேரம் இங்கும் நடக்கிறது. அதிமுகவும் பேரம் நடத்துகிறது என்ற தகவல் நட்டாவிற்கு கொடுத்துள்ளார். நட்டாவும் நோ அப்பாயின்மென்ட் என்று சொல்லிவிட்டார்.
அதன் பிறகு இவர்களுடைய கடந்த கால ஊழல் பைல் பைண்டிங் இல் இருந்து வருகிறது. அதையும் தூசி தட்டி எடுத்து விட்டால், நம்முடைய நிலைமை மோசமாகி விடும் என்று பின் வாங்கி இருக்கிறார்கள். இப்போது அண்ணாமலை இடம் கூட, அப்பாயின்மென்ட் கிடைக்காத நிலையில் பாமக வேதனையில் தவிக்கிறதாக தகவல். இவர்களுடைய நிலையே இப்படி என்றால், தேமுதிக பிரேமலதா தன்னுடைய அரசியல் நிலவரம் தெரியாமல் 14 சீட் ,ஒரு ராஜ்ய சபா சீட் ,500 கோடி என்று பேரம் பேசியதாக தகவல்.
விஜயகாந்த் பார்த்தாவது ஏதோ கொஞ்சம் ஓட்டுக்கள் விழும். பிரேமலதாவை பார்த்து யார் ஓட்டு போடுவார்கள்? இது எல்லாம் தெரியாமல், இவர்கள் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களாக இருந்து ,இந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? இவர்களுக்கு வாக்களிப்பது எதற்கு? ஏன் ?என்பதை வாக்காளர்கள் சிந்தித்தால் ,அவர்களுக்கே உண்மை புரியும்.