ஜூன் 28, 2024 • Makkal Adhikaram
மக்கள் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, திமுகவின் ஊழல்கள் வெளி கொண்டுவர பிஜேபி தொடர் நடவடிக்கையாக இருந்து வரும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதன் எதிரொலி தான் தமிழகத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள திமுகவின் மணல் கொள்ளை அறிக்கை . இந்த மணல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் ,அரசியல்வாதிகள் எல்லோருக்கும் மிகப்பெரிய விசாரணை வலையத்துக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
மேலும்,கொடுக்கப்பட்ட மணல் அளவு அனுமதி 4.9 ஹெக்டர் தான். ஆனால் 150 ஹெக்டர் பரப்பளவுள்ள மணல் ஐந்து மாவட்டங்களில் சட்டவிரோதமாக இந்த மணல் 957ஹெக்டர் பரப்பளவு உள்ள மணல் எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப ஜீபிஎஸ் கருவிகள் கொண்டு ,ஆய்வு மேற்கொண்டதில் தெரிவிக்கும் தகவல் .
மேலும், இது பற்றி அமலாக்கத்துறை பல்வேறு துறைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது? அவர்களின் வங்கிக் கணக்குகள் சுமார் 2.5 கோடி முடக்கப்பட்டுள்ளது. 128 கோடி மதிப்புள்ள 209 ராட்சத இயந்திரங்கள் முடக்கப்பட்டுள்ளது.தவிர, தமிழக அரசின் கணக்குப்படி 36.5 கோடி தான் மணல் எடுத்ததாக கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், அமலாக்கத் துறையின் கணக்கு 4730 கோடி ரூபாய் அளவு மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதில் முதல்வர் குடும்பத்திற்கு சம்பந்தம் உள்ளதாக தகவல்.
இது தவிர, ஒப்பந்ததாரர்களான கரிகாலன், ரத்தினம், ராமச்சந்திரன் இவர்கள் அனைவரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது . இதற்கான ஆதாரங்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தோண்டி எடுத்துவிட்டது. அதனால், திமுகவின் அரசியல் இனி இரண்டு காலம் இது ஒரு புறம். கள்ளக்குறிச்சியில் கலாச்சாராயம் சாவு இது ஒரு பக்கம், விசாரணை ஓடும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் இதனுடைய வரவு செலவு கணக்கு இது எல்லாம் தோண்டி எடுத்தால், மக்களுக்கு உண்மை அப்போதுதான் புரியும். எனவே,தற்போது சில மாதங்களுக்கு முன்பு மக்கள் அதிகாரத்தில் சொல்லப்பட்ட செய்தி மக்களுக்கு புரிந்து இருக்கும் .