மக்கள் அதிகாரம் பத்திரிக்கை முறையாக பதிவு செய்யப்பட்ட பத்திரிக்கை! பதிவு செய்யப்படாமலே அதே பெயரில் செய்தியை வெளியிடுவது குற்றமாகும். இதுகுறித்து தமிழக டிஜிபி மகேஷ் குமார் ஐபிஎஸ் க்கு ! புகார் மனு – மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பத்திரிக்கை துறையில் எவ்வளவோ சமூகப் போராட்டங்கள் பிரச்சனைகள் அவலங்களை மக்களிடம் தெரிவிக்கிறோம்.

ஆனால், தற்போது சில மாதங்களாக மக்கள் அதிகாரம் பெயரில் இணையதளத்தில் செய்திகள் வெளி வருவது, மக்கள் மத்தியில் எது? உண்மையான மக்கள் அதிகார பத்திரிக்கை என்ற கேள்வி எழுப்புகிறது?

அது குறித்து தற்போது என் கவனத்திற்கு தெரிய வந்தவுடன் ,அதை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

மேலும்,நான் 2015 முதல் மத்திய அரசின் RNI அலுவலகத்தில், பதிவு செய்யப்பட்டு , முறையாக அதற்கான அனுமதி பெற்று, வியாபார நோக்கமின்றி,அது முதல் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் பத்திரிகை நடத்தி வருகிறேன்.

மேலும்,இது சமூக நலனுக்கானது , தேச நலனுக்கானது என்பது வாசகர்களுக்கு தெரியும். அதுமட்டுமல்ல , தவிர, ஆன்மீகம், சமூகம் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாக வெளிவருகிறது.

இந்த பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில், முதல்வர் விஜய் குறித்த செய்திகள் ,உண்மை எதுவோ, அதை தான் மக்களிடம் வெளிப்படுத்துகிறோம்.

ஆனால், உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் அதிகாரத்தில் எப்போதும் வெளியிடுவதில்லை. அது கடந்த கால ஆட்சியிலும் சரி ,இப்போதும் சரி, எது உண்மையோ அதை வெளிப்படுத்துவது தான் பத்திரிக்கை.

இதில், மக்கள் அதிகார இயக்கம் மற்றும் கழகம் என்ற பெயரில் வெளிவரும் செய்திகள் இணையத்தில்,மக்கள் மத்தியில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமாக இதில் முறையான பத்திரிக்கை யார்?போலி எது? உண்மை எது?

அது இணையதளமாக இருந்தாலும், பத்திரிக்கையாக இருந்தாலும், பத்திரிக்கையில் செய்திகள் வெளியிட, நடத்த, யாருக்கு அதிகாரம் உள்ளது? என்ற பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழக காவல்துறை தலைவர் மகேஷ் குமாருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

அவர் இது குறித்து, உரிய விசாரணை செய்து, நீதி வழங்கிட மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் எமது பணிவான கோரிக்கை – ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *