டிசம்பர் 04, 2023 • Makkal Adhikaram
மனித வாழ்க்கை மாற்றங்களின் அடிப்படை தன்மை கொண்டது. அதனால் மாற்றத்திற்கு ஏற்றவாறு சட்டங்கள், விதிமுறைகள், அரசு கொண்டு வருவது அவசியம் .சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எத்தனை பத்திரிகைகள் வெளிவந்தன? தொலைக்காட்சிகள் இருந்தன ?தற்போது எத்தனை பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் இருக்கிறது? என்பதுதான் இதற்கு முக்கிய சான்று .அது மட்டுமல்ல, அக்காலத்தில் பத்திரிக்கை படிப்பது, வாங்குவது மிகவும் முக்கியமானது என்று கருதப்பட்டது. தற்போது பத்திரிக்கை வாங்குவது, அலட்சியமாகிவிட்டது.
காரணம் எல்லாமே இணையதளம், செல்போன், கம்ப்யூட்டர் ,லேப்டாப் இதிலே போய் செய்திகளை பார்க்கிறார்கள். சர்குலேஷன் என்பது மக்கள் வாங்கி படித்தால் தான், அது சர்குலேஷன். எந்த பத்திரிக்கையாக இருந்தாலும், அதனுடைய வியாபாரம் சார்ந்தது சர்குலேஷன். ஆனால், அது எந்த அளவிற்கு அந்த பத்திரிகையின் செய்திகள் சமூக நோக்கம் கொண்டது? என்பது மத்திய மாநில அரசின் செய்தித்துறை ஆய்வு செய்வது, அதற்கான சான்று அளிப்பது, இக்காலத்திற்கு மிகவும் அவசியமானது. ஏனென்றால் கட்சி சார்ந்த பத்திரிகைகள், கட்சி சார்ந்த தொலைக்காட்சிகள், சுமார் ஒவ்வொரு மாநிலத்திலும் பத்துக்கு மேல் இருக்கிறது.
இது தவிர, வியாபார நோக்கம் கொண்ட பத்திரிகைகள் பத்துக்கு மேல் உள்ளது. இதில் சமூக நோக்கம் கொண்ட பத்திரிகைகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளது. அதிலும் அதில் எத்தனை தகுதியானது? என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகக் குறைந்த அளவே உள்ளது. இப்படி உள்ள பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், youtube சேனல்கள் எல்லாம் தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது .இதில் சில பத்திரிகைகள் அதன் இணையதளத்துடன் செய்திகளை வெளியிட்டு வருகிறது. அந்த இணையதளத்தில் அதனுடைய பார்வையாளர்கள் பற்றிய விவரமும் சர்குலேஷன் விதிமுறையில் கொண்டு வர வேண்டும் .
மேலும், எந்தெந்த பத்திரிகைகளுக்கு அரசின் சலுகை விளம்பரங்கள் பொருந்தும்? என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும். இவையெல்லாம் மக்களின் வரிப்பணம் என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .தவிர, பத்திரிக்கை துறையில் அரசியல் உள்ளே வந்தால் மக்களுக்கான செய்திகள் பொது நலத்துடன் அந்த பத்திரிகை இருக்காது. அது சுயநலத்துடன் தான் இருக்கும். ஏனென்றால், தற்போது அரசியல் என்பது சுயநலமாகிவிட்டது.
அந்த காலத்தில் அரசியல் கட்சியினரை பற்றி விமர்சனங்கள் தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதினாலும், அது பற்றி அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள மீண்டும் அது ஒரு அட்வைஸ் ஆக தான் பார்த்தார்கள். ஆனால் தற்போது அது தன்னை இழிவு படுத்துவதாகவும், கேவலப்படுத்துவதாகவும், நினைத்துக் கொண்டு தவறான கருத்துக்கள் அவர்களிடமிருந்து வெளிவருகிறது. அப்படிப்பட்டவர்கள் அரசியல் கட்சிக்கும், சமூக நலன் சார்ந்த கருத்துக்கும், செயல்பாட்டுக்கும் ,தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்கள்யெல்லாம் அரசியல் கட்சிக்கு தகுதியற்றவர்கள் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எப்படி இன்றைய செய்தியாளர்கள், ஒரு பத்திரிகையின் அடையாள அட்டை இருந்தால், நானும் செய்தியாளர் என்கிறார்களோ, அதே போல் தான் இவர்களும் தன்னை ஒரு அரசியல் கட்சியின் பொதுநலவாதியாக நினைத்துக் கொண்டு, பேசிக்கொண்டு, சுயநலமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இதை விட ஒரு கொடுமை அரசியல் கட்சிகளில் ரவுடிகள், கிரிமினல்கள், இவர்களெல்லாம் பதவிகளை, பொறுப்புகளை பெற்று வலம் வருகிறார்கள் .அடியாட்களுக்கு தகுதியானவர்கள் எல்லாம் அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் என்கிறார்கள்.
இவை எல்லாம் சமூகத்தின் சாபக்கேடா? அல்லது இந்த தமிழ்நாட்டிற்கு வந்த சோதனையா? என்பது மக்கள்தான் அரசியலை படித்தால் புரிந்து கொள்ள முடியும் .மேலும், வருங்கால இளைய தலைமுறை இதை அவசியம் படித்தே ஆக வேண்டும் .இல்லையென்றால் அரசியல் என்பது வியாபார நோக்கமாகவும், ஏமாற்றும் வேலையாகவும் ஆகிவிட்டால், பல கொடுமைகளுக்கு இளைய சமுதாயம் ஆளாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
தற்போதே அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து அரசியல் பொதுநலமாக இருக்க வேண்டும் என்றால், இன்றைய இளைஞர்கள், பொதுமக்கள், அவசியம் அரசியலை படித்து புரிந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். பேச்சும், நடிப்பும் அரசியலுக்கு தேவையற்றது.எதை செய்ய முடியுமோ அதை தான் பேச வேண்டும். அரசியல் தெரியாதவர்களிடம் எதை பேசினாலும், அதன் உண்மை தன்மை புரியாது. அதனால் ,அரசியல் மேடைப்பேச்சு என்பது வெத்து பெட்டிகளின் பேச்சு ஆகிவிட்டது.அரசியலில் நேர்மையும், செயல்படும் தான் அரசியலுக்கு தேவை என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.
மேலும், நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமில்லை. வெத்து வெட்டும் அரசியல் கட்சி என்கிறது. கட்சியினுடைய தலைவன் என்று சொல்லிக் கொள்பவன் எதைப் பேசினாலும் கைதட்டி விசில் அடிக்க ஆட்களை கொண்டு வந்திருப்பார்கள் போல தெரிகிறது. சமீபத்தில் சீமான் போன்ற அரசியல் கட்சியை நிர்வாகி பேசிக் கொண்டிருக்கும் போது, பிரபாகரனை பற்றி அடிக்கடி பேசினார். பிரபாகரனை தமிழ்நாட்டில் பார்த்தவர்கள் எத்தனை பேர்? ஒரு முறையாவது பிரபாகரன் மேடையிலே தமிழ்நாட்டில் பேசினாரா?
இல்லை இந்த மக்கள் தான் பார்த்தார்களா? என்ன தெரியும்? பிரபாகரனை பற்றி இப்படி எதுவுமே தெரியாத ஒரு கூட்டமாக, எதை சொன்னாலும் கைதட்டி விசில் அடிக்க உணர்ச்சி வசப்படுபவர்கள், அரசியல் கட்சிக்கு அர்த்தமற்றவர்கள் .அரசியல் என்பது என்ன? அரசியல் கட்சி என்பது என்ன? எல்லாம் பதவிக்கும், பொருளுக்கும் பேராசையின் பெருங்கூட்டமாகத்தான் இன்றைய அரசியல் கட்சிகள் இருந்து வருகிறது.
அதனால், வருங்கால இளைய தலைமுறைகள் நிச்சயம் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். மேலும், இந்த பத்திரிக்கை துறை எதை சொன்னாலும் ,யார் எதை பேசினாலும், அதை எல்லாம் இன்றைய பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், சோசியல் மீடியாக்களும், குரூப்பில் போட்டுக் கொண்டு ,இவையெல்லாம் ஒரு சமூகத்தின் அர்த்தமற்ற செயலாக உள்ளது.
அதனால் தான், மத்திய மாநில அரசின் செய்தித் துறை இதை ஒரு வரைமுறைப்படுத்தாமல் சரி செய்ய முடியாது. இதை வரைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம். தரம் பிரிப்பது காலத்தின் கட்டாயம். அதேபோல், அதற்கான சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது காலத்தின் கட்டாயம். இது பற்றி மதிய மாநில அரசின் செய்தித் துறை உயர் அதிகாரிகள், தமிழக முதல்வருக்கும், பிரதமருக்கும் கொண்டு சென்று பத்திரிகை துறையின் விதிமுறைகள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் அவசியம் தேவையானது என்பதை கொண்டு செல்ல வேண்டும் – சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகளின் முக்கிய கோரிக்கை .