மனித வாழ்வு இயற்கைக்கும், செயற்க்கைக்கும்,போட்டியா?-யாருக்கு வெற்றி?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

இன்று உலக நாடுகளுக்குள் நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்ற போட்டி மனிதருக்கு ,மனிதர் போட்டி போடுவது போல், போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

இதனால், பாதிக்கப்படுவது அந்த நாட்டு மக்கள்தான். இன்று இஸ்ரேல், காசா போரால் எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? மேலும் ,மக்கள் அமைதி இல்லாமல் பீதியுடன் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள்?

அதிநவீன விஞ்ஞானம் போரை ஊக்கி இருக்கிறதா? இல்லை உலக நாடுகளுக்கும் போட்டியை ஏற்படுத்துகிறதா? எதனால்? இன்று!

உலக வல்லரசு நாடுகள்,அதி நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து, அதை வியாபாரம் செய்வது ,நாடுகளுக்குள் ,அமைதியை ஏற்படுத்துமா? ஏன் இந்த போட்டி? இது தவிர,

மனிதர்களுக்குள் போட்டி ,இருப்பது போல், உலக நாடுகளுக்குள் போட்டி வந்து விட்டது. இங்கே ஜாதி, மதம் ,உறவுகள், மொழி ,இனமென்று போட்டி, பொறாமை, வஞ்சகம் வந்து விட்டால், மனித வாழ்க்கை அமைதியும் ,சந்தோஷத்தையும், நிம்மதியும், இழந்து வாழ்க்கையோடு போராடுகிறார்கள்.

அதுபோல் தான், உலக நாடுகளுக்கும் போட்டி, என்பது பொருளாதாரத்தில் தான் உயர்ந்த நாடாக முன்னேறி, வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும் என்ற கனவு எல்லா நாடுகளுக்கும் வந்துவிட்டது. அதனால், விஞ்ஞான வளர்ச்சியில் நாம் முன்னேறினால் ,அது நம்முடைய பொருளாதார முன்னேற்றம் என்று நினைக்கிறார்கள். ஆனால்,

ஒரு பக்கம் உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா ,சைனா ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதாரத்திலும், அது நவீன ராணுவ ஆயுதங்கள் உற்பத்தியிலும், தங்களை முன்னிலைப்படுத்துகின்றன.

மற்றொரு பக்கம் சேட்டிலைட் மூலம் ராக்கெட்டுகள் விண்வெளிக்கு அனுப்பி, இயற்கை வளங்கள் ,எந்தெந்த நாட்டில் ?எந்தெந்த இடத்தில் ?எந்தெந்த பகுதியில் உள்ளது? என்பதை ஆய்வு செய்கிறார்கள்.

இந்த இயற்கை வளங்கள் ஆன கடலுக்கு அடியில் கண்டெடுக்கப்படும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணை வளங்கள், தாதுக்கள், யுரேணியம் போன்ற கனிமங்கள், அணு ஆயுத உற்பத்திக்கு மிகவும் முக்கியத்துவம் ஆனது.

இப்படி அதிக அணு ஆயுத உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கக்கூடிய நாடுகள் ,மற்ற நாடுகளை மிரட்டி பார்க்கிறது.தவிர, ‌ கண்டம் விட்டு, கண்டம் தாண்டும் ஏவுகணைகள் வைத்திருக்கும் நாடுகள், உலக நாடுகளை மிரட்டி பார்க்கிறது. எப்படி ஒரு பலசாலி, பலவீனமானவனே மிரட்டுகிறானோ, குறிப்பாக சொல்லப்போனால், ஒரு ரவுடி எளியவனை மிரட்டுவது போல, உலக நாடுகளும், அதே பாணியில் வந்து விட்டது. அதனால், ஒவ்வொரு நாடும், தன்னுடைய பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியமாகிறது.

அதனால், இந்த ராணுவத்தின் நடவடிக்கை எதற்கு? ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போர்த்தொடுத்து, அங்குள்ள இயற்கை வளங்களை அபகரிக்கும் நோக்கத்தில் தான் ,இந்த அதி நவீன ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது . இல்லையென்றால்,

இந்தியா போன்ற வளரும் நாடுகளை வளர விடாமல் தடுக்க ,உலக நாடுகள் பக்கத்தில் இருக்கின்ற பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குள் சண்டையை ஏற்படுத்துகிறார்கள். இப்படி மறைமுகமாக அவர்கள் செய்யும் வேலைகளால், இரண்டு நாடுகளிலும், அழிவது சாமானிய மக்கள் தான் இருக்கிறார்கள்.

இதற்கு ஒரு புறம், தீவிரவாதம், மதவாதம், நக்சலைட்டுகள் என்ற பிரிவினைவாதம், இந்த அழிவிற்கு மறைமுகமாக துணை போகிறார்கள்.ஆக கூடி வளர்ச்சி அடைந்த விஞ்ஞானம், மனித அழிவின் முடிவு.மேலும்,

இதைப் புரிந்து கொள்ளாமல், விஞ்ஞானத்தின் வளர்ச்சி, உலக நாடுகள் போரின் விஞ்ஞான வளர்ச்சி ,அது நாட்டுக்கு அழிவு என்பதை ஏன்? இன்னும் புரிந்து கொள்ளவில்லை.மேலும்,

இதைவிட இயற்கை என்ற பெரிய சக்தி! ஒவ்வொரு நாட்டையும் அழித்துக் கொண்டிருக்கிறது. சேர்க்கை என்ற விஞ்ஞானம் அதிநவீன ஆயுதங்கள் மூலம் அழிப்பதில் யார்? இதில்,பெரிய ஆள்? என்பதில் இயற்கைக்கும், செயற்கைக்கும் இடையே ஏற்பட்டுள்ள போட்டியா? யார் ? இதில் ஜெயிக்க முடியும்? இயற்கை தான் ஜெயிக்கும். ஏனென்றால்!

இயற்கை நினைத்தால், சேர்க்கையை ஒரு நொடியில் அழித்துவிடும். இயற்கையே இறைவன். அதாவது புயல் ,மழை, பூகம்பம் ,வெள்ளம் ,எரிமலை மற்றும் கடல் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள், உலக அழிவில் முதலிடம். மேலும்,

உலக நாடுகளின் பேராசை, இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதில், அதாவது அந்த இடத்தை சண்டை செய்து ஆக்கிரமித்துக் கொள்ள நினைத்தால், இயற்கை ஒரு நொடியில், அந்த நாட்டையே அழிக்க முடியும்.மேலும்,

இந்தியாவை காப்பது இயற்கை என்ற இறைவன், இங்கே ஆட்சி செய்கிறான். இது ஒரு ஆன்மீக பூமி. இது தெரியாமல், திமுக பெரியார் பூமி, பெரியார் மண் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பகுத்தறிவு கூட்டம் பேசிக் பகுத்தறிவுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் பகுத்தறிவு பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் எங்கே என்று கேட்பார்கள்? கடவுளை பகுத்தறிவால் நீ தேடிப் பார்க்க வேண்டும்? பகுத்தறிவு இல்லாதவன் கேட்பது போல் கேட்பார்கள்.

உன்னுடைய அறிவுக்கும் ,மனதிற்கும், பகுத்தறிவால் பார்க்கக் கூடிய கடவுளை, பார்ப்பதற்கு காட்டு என்றால், பகல் வேஷம் போடும் பகுத்தறிவு கூட்டம் ,இதை பேசுவதற்கு தகுதி இல்லாதது.மேலும்,

இங்கே பல சித்தர்கள் ,மகான்கள் வாழ்ந்து மறைந்த பூமி ! அதனால் தான் எத்தனையோ, இயற்கையின் பேரழிவுகளில் இருந்தும் ,கொரோனா போன்ற கொடிய நோய்களிலிருந்தும், இந்தியா காக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் இல்லை என்றால், இன்னும் எத்தனையோ கோடி பேர் மடிந்திருப்பார்கள். அவர்களால் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். அதனால், அவர்கள் அழிவில்லா ஜோதி ரூபமானவர்கள், மறைந்த சித்தர்களும், வாழ்ந்து கொண்டிருக்கின்ற சித்தர்களும், மகான்களும், இந்தியாவை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள்

மேலும், இந்தியாவை பாதுகாக்கும் இந்த தெய்வங்கள், எவ்வளவு அணு ஆயுதங்களையும் பார்ப்பார்கள். இந்தியாவுக்கு எதிராக எத்தனை உலக நாடுகள் வந்தாலும், அதை எதிர்த்து ,இவர்கள் இருக்கும் இடமில்லாமல் செய்து விடுவார்கள்.

இருப்பினும், கலிகாலம் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதை எவ்வளவு நாளைக்கு அவர்களும் தாங்குவார்கள்? அப்படி இந்த யுக மாற்றங்கள் வரும்போது, மனித பிறப்பு ,அழிந்து மீண்டும் ,அதே மனித பிறப்பு, உலகில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.

அப்போது இந்த ஆத்மாக்கள் யார் ?யார்? என்னென்ன கர்மாக்களின் கணக்குப்படி ,எங்கெங்கு பிறப்பு எடுக்க வேண்டும்? எந்தெந்த நாட்டில்? இவர்கள் வாழ வேண்டும்? என்பதை இயற்கை தான் தீர்மானிக்கிறது. அந்த கணக்கு தான் ஜோதிட கணக்கு.

மேலும்,உலகம் என்பது அழிவிலும், பிறப்பிலும், வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு எத்தனையோ லட்சம் உயிர்கள் பிறக்கிறது. எத்தனையோ லட்சம் உயிர்கள் இறக்கிறது.

இதற்கிடையில் வாழ்ந்து ,வாழ்க்கையை முடித்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது தான் கணக்கு? எப்படியும் வாழ்வது கணக்கு அல்ல! நீ மந்திரியாகி எத்தனை லட்சம்? எத்தனை ஆயிரம் கோடி ?சட்டத்தை ஏமாற்றி, கொள்ளை அடித்தது திறமையா?

இல்லை,நீ மந்திரியாகி !மக்களுக்கு என்ன செய்தாய் ?எப்படி வாழ்ந்தாய்? அதில் உன் நேர்மை என்ன?அதுதான் இயற்கையின் கணக்கு , அந்தக் கணக்கில்,சாமானிய மனிதனாக இருக்கலாம் ,யாராக இருந்தாலும், இறைவனின் கணக்கிற்கு எல்லோரும் ஒன்றே ……!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *