மேகமலை புலிகள் சரணாலயம்! இதில் உச்ச நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியும், தமிழ்நாட்டில் இதை வைத்து அரசியல் கட்சியினர் அரசியல் செய்வது! சட்டத்தை மதிக்கத் தெரியாதவர்களா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சட்டத்தை மதிக்க தெரியாதவர்களாக தான் நூற்றுக்கு 99 சதவீதம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சதவீதம் தான் சட்டத்தை மதித்து, மனசாட்சிக்கு பயந்து, அரசியல் கட்சியினர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும்,புலிகள் சரணாலயம், தேசத்தின் மதிப்புமிக்க சொத்து. இதை குறிப்பிட்ட மக்கள் ஆக்கிரமிப்பு செய்து அவர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் போது, அவர்களுக்கு ரேஷன் கார்டு முதல் குடியிருப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தது அரசு அதிகாரிகளும், அரசும், செய்த தவறு.

மேலும், சட்டத்தில், அரசு நிலத்தில் எத்தனை ஆண்டுகள் ஆக்கிரமிப்பு செய்து வாழ்ந்து இருந்தாலும் அது சட்டப்படி செல்லாது இது நீதிமன்றத்தின் தீர்ப்பாகவே உள்ளது. இப்படிப்பட்ட சட்டம் இருந்தும் அதை மதிக்காமல், சட்டத்தைப் பற்றி கவலைப்படாமல், ஓட்டுக்காக தமிழ்நாடு அரசியல் கட்சிகள் ,திமுக ஒரு பக்கம், அதிமுக ஒரு பக்கம், கம்யூனிஸ்டுகள் ஒரு பக்கம், அரசியல் செய்வது ,ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ,சட்டத்தையும் அவமதிக்கின்ற வேலை.

மேலும்,மக்களுக்கு அரசியல் தெரியாது என்று அவனவன் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், தமிழ்நாட்டு இளைஞர்கள் உங்களுக்கு எது தெரிகிறதோ, இல்லையோ, நீங்கள் அவசியம் இந்த அரசியல் கட்சியினரை பற்றி படிக்க வேண்டும் .அரசியலைப் பற்றி படிக்க வேண்டும் .இல்லையென்றால், உங்கள் எதிர்காலமே! இந்த அரசியல் கட்சியினர் பாழாக்கி விடுவார்கள்.

மேலும், இந்த தேனி மாவட்ட வன நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் 4,601 பேர்! CEC அறிக்கையின் படி 5,072.653 ஹெக்டர் வன நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக 118 பேர் பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் முக்கிய காரணமாக இருந்தவர்கள் என்று நீதிமன்ற பதிவுகளில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு ஒத்து ஊதக்கூடிய ஊடகங்கள் பெயரில் இந்த அரசியல் கட்சியினரோடு சேர்ந்து, மக்களை முட்டாளாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். தொலைக்காட்சி பத்திரிகைகளை இந்த லட்சணம் என்றால் youtube களை சொல்ல வேண்டுமா?

அதனால், ஓட்டுக்கு பிச்சை எடுக்கும் இந்த கட்சி கூட்டங்கள், நேர்மையான அரசியல் தெரியாது. சட்டத்தை மதிக்க தெரியாது. ஊழலற்ற ஆட்சியை கொடுக்க தெரியாது. இவர்கள்தான் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பவர்களுக்கு ,வக்காலத்து வாங்குபவர்கள்.

இவர்கள் நேர்மையாக இருந்தால்தானே, மக்களை நேர்மையாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள் .கிரிமினல்ஸ் , சட்டத்தை ஏமாற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியினர் இவர்களெல்லாம் எப்படியும் பேசுவது அரசியல் அல்ல! அது அவர்களின் சுயநலம்.

தவிர,இப்போது கூட ,இந்த மக்களுக்காக பேசவில்லை .இந்த மக்களின் ஓட்டுக்காக தான் இவர்கள் பேசுகிறார்கள் என்பதை அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை. இதை தெரியாதவர்கள் இந்த உண்மையைப் படித்து பார்த்து, புரிந்து கொள்வார்களா?

இனியாவது இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்து உங்களை திருத்திக் கொள்வீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *