மோடியின் கூட்டணி ஆட்சி 5 ஆண்டு நிறைவு செய்யுமா? எதிர்க்கட்சிகளின் அரசியல் நோக்கம் தோல்வி.

அரசியல் இந்தியா உணவு செய்தி சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 16, 2024 • Makkal Adhikaram

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருந்தாலும் 241 சீட்டுகளை எந்த அரசியல் கட்சியும் எடுக்கவில்லை. அவர்களுக்கு தேவை இன்னும் ஒரு 31 சீட் மேலும் 31 சீட்டு வந்திருந்தால் பிஜேபிக்கு தனி மெஜாரிட்டி கிடைத்திருக்கும் . அதனால் கூட்டணி ஆட்சி ஏற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

 அதற்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார், ஆந்திரா தெலுங்கு தேச கட்சி சந்திரபாபு நாயுடு இந்த கூட்டணியுடன் பிஜேபி மோடி தலைமையில் ஆட்சியை அமைத்துள்ளது. இங்கே எதிர் கட்சிகள் போட்ட கணக்கு வேறு, நடந்தது வேறு, ஏனென்றால், எதிர்க்கட்சிகள் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் மோடியின் காலில் விழுந்து விட்டார்கள். இருவரும் கம்பீரமாக இருந்து ஆட்சிக்கு அவ்வப்பது கவிழ்க்க திட்டம் தீட்டுவார்கள் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்காது என்று பதவியேற்பு நிகழ்ச்சியில் புரிந்து கொண்டிருப்பார்கள் .

இது தவிர, மோடி இரண்டு பேரிடமும் 5 ஆண்டுகள் வரை பிஜேபி ஆட்சிக்கு கொடுக்கின்ற ஆதரவை திரும்ப பெற மாட்டோம் என்ற ஒரு வாக்குறுதியை எழுதி வாங்கி விட்டார்கள். அதனால், இருவரும் வேறு பக்கம் தாவ முடியாது. இது எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி. அடுத்தது இவர்களின் கூட்டணி கட்சி பாலமாக தான் இருக்கிறது. இருந்தும் அதனால் மக்களுக்கு எந்த பயனும் இருக்காது. இந்த கூட்டணியின் பலத்தை வைத்து தமிழ்நாட்டில் மு க ஸ்டாலின் இவர்களுடைய ஊழல் கணக்குகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கவும், போராட்டம் நடத்தவும், அடாவடி பேச்சு பேசவும், ஒரு தவறான கணக்கு போட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது மோடி இடம் நடக்காது .

என்னதான் உங்கள் பக்கம் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் முட்டுக் கொடுத்தாலும், அந்த முட்டு அங்கே நிற்காது. காரணம் மோடியே நிறுத்தினாலும் ,சட்டத்தின் பிடியில் சிக்கி இருப்பதால் அதில் இருந்து வெளிவர முடியாது . அதாவது வெளிநாட்டில் பண முதலீட்டு விவகாரத்தில் ஸ்டாலின் குடும்பம் சிக்கி இருப்பதாக தகவல் . அது மட்டுமல்ல, எத்தனை அமைச்சர்கள் அவர்கள் செய்துள்ள ஊழலில் சிக்கி இருப்பார்களோ என்பது இனிமேல் தான் வெளிவரும். இதை எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி தடுக்க முடியுமா? அல்லது பழிவாங்கும் நடவடிக்கை என்று பேசுவதை தவிர, வேறு வழி இருக்காது. 

நம்ம ஊர் கார்ப்பரேட் கம்பெனி ஊடகங்கள் எப்போதும் போல விவாதம் நடத்துவார்கள் .ஒன்னும் வேலைக்காகாது. மக்கள் வேடிக்கை தான் பார்ப்பார்கள் . அதனால்தான் ஸ்டாலின் அமைச்சர் பதவி கேட்டு ஆதரவு தர தயார் என்று தூதுவிட்டு ,அங்கும் தோல்வியே தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி 30 எம்பி சீட்டுகள் கூட வருவது கடினம் என்ற தேர்தல் கணிப்பு பொய்யாக்கியது எது தெரியுமா? பொய்யான வாக்குறுதிகள். செய்ய முடியாததை எல்லாம் செய்து விடுவோம் என்று சொல்லும், தேர்தல் வாக்குறுதிகள், பணம் இதுதான் மக்களை ஏமாற்றி இருக்கிறது .

அரசியல் தெரியாத மக்களிடம் தொடர்ந்து அரசியல் கட்சிகள் பொய் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு ,ஆட்சியைப் பிடிக்கிறார்கள். இதுவரை திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டுகள் ஓடிக்கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் சொன்ன எதுவும் ஒன்று கூட சரியாக செய்யவில்லை . இந்த நிலைமை தமிழ்நாட்டில் மக்களுக்கான அரசியல் தோல்வி . 

மேலும், மோடியின் அரசியலில் எதிர்க்கட்சிகள் தங்களை பாதுகாத்துக் கொள்வார்களா? அல்லது நாட்டு மக்கள் நலனில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவார்களா? எதிர்க்கட்சிகளின் அரசியல் தங்களுக்கும், தங்கள் கட்சிக்காரர்களுக்கும் என்ற சுயநலத்தில் அரசியல்! ஆனால்,

மோடியின் அரசியல் நாட்டுக்காக, நாட்டு மக்களின் நலனுக்காக, நாட்டின் வளர்ச்சிக்கான அரசியல் . இதில் எதிர்கட்சிகளின் ஊடகங்கள் என்னதான் நியாயப்படுத்தினாலும், நீதிமன்றத்தின் நடவடிக்கையோ, தீர்ப்பையோ, எதிர்த்து செய்தி வெளியிட முடியாது .அதனால், இருவருக்கும் சேர்ந்து தோல்விதான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *