வாக்காளர் பட்டியலில் எதிர்க்கட்சிகள் ஆதாரமற்றவர்களை சேர்க்கலாமா? அவர்களையும் சேர்த்து தேர்தலில் வெற்றி பெறலாமா ? – தேர்தல் களம்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் பல முக்கிய பிரச்சனைகளில் இன்று வாக்காளர் பட்டியலில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை சேர்க்க எதிர்க் கட்சிகள் இவ்வளவு போராட்டங்களும், அவர்களுக்காக வக்காலத்தும் வாங்குவது, இந்திய நாட்டில் பூர்வ குடிகளாக இருக்கின்றவர்களுக்கு அது போராட்டத்தையும் ,சிக்கலையும் சண்டை சச்சரவுகளையும் ,வழக்கு விவகாரங்களையும் ,கொண்டு செல்ல எதிர்க்கட்சிகள் செய்யும் மறைமுக சதி வேலைதான் .

இந்த வாக்காளர் பட்டியலில் வங்கதேசம் ,பாகிஸ்தான் ,ரோகிங்கியா முஸ்லிம்கள் ,போன்றவர்களை சேர்த்து வெற்றி பெறலாம் என்பது இவர்களுடைய ரகசிய திட்டம்.

இந்த திட்டத்தை பாஜக புரிந்து தான் நாட்டில் யாரெல்லாம் எந்தெந்த வருடத்தில் எந்தெந்த ஊரில் இவர்கள் குடி இருந்தார்கள் ?அதற்கான அடையாளங்கள் என்ன? ஒருவன் ஒரு ஊரில் குடியிருக்கிறான் என்றால், அவன் தகப்பன் ,அவன் பாட்டன் ,யார் ?என்பது அந்த ஊர் மக்களுக்கு தெரியும் .அல்லது அந்த நகர மக்களுக்கு தெரியும்.

ஆனால், போலியான ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இப்படி பல ஆவணங்களை வைத்து ராகுல் காந்தி மற்றும் நந்தா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் பாதிக்கப்படுவது பூர்வ குடிகளாக இருக்கக்கூடிய இந்திய மக்கள்தான் .அவர்கள் முஸ்லிம்களாக இருக்கட்டும் ,இந்துக்களாக இருக்கட்டும் பஞ்சாபிகளாக இருக்கட்டும், எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருக்கட்டும்.

அவர்கள் பூர்வ குடிகளாக இல்லாமல் எப்படி அவர்களை இங்கே குடி உரிமை பெற்றவர்களாக ,அங்கீகரித்து அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரை செல்கிறார்கள்?அதற்கு தடையானை வாங்க வேண்டும் என்று இப் பிரச்சனையை உச்ச நீதிமன்றத்தில் கொண்டு சென்றும் அங்கே அவர்களால்,தடையானை கொடுக்கவில்லை.

மம்தா பானர்ஜி வங்கதேசத்தில் பெரும் போராட்டத்தை இதற்காக கையில் எடுப்பேன் என்று கூறிக்கொண்டு பேசி வருகிறார். இதற்கு ஆதரவாக முஸ்லிம்கள் அமைப்பு நிற்கிறது. வேறு யாரும் நிற்கவில்லை. இங்கே திருடனுக்கு துணை போகவும் சில அரசு அதிகாரிகளும் ,இதுபோன்ற அரசியல் கட்சியினரும்,இருப்பதால்தான் இப்படிப்பட்ட குழப்பங்கள் நாட்டில் ஏற்படுகிறது. மேலும்,

மக்கள் எந்த பக்கம் வேண்டுமானாலும் ,எப்படியும் பேசலாம் என்று நினைத்தால் ,இப்படிப்பட்ட அரசியல் கட்சியினரால் இவர்கள் தலையில் இவர்களே மண்ணள்ளி போட்டுக் கொள்வார்கள். வெளிநாடுகளில் என்ன நடக்கிறது? என்பது கூட அரசியல் வரலாறு தெரியாத மக்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தான் ,இப்படிப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் ,கட்சியினர் இந்த அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள். நீங்கள் சுயமாக சிந்தித்து ,நீங்கள் சுயமாக அரசியலை படித்து தெரிந்து கொள்ளவில்லை என்றால், ஒரு பக்கம் இது போன்ற அரசியல் கட்சிகள், இன்னொரு பக்கம் சன் டிவி போன்ற பல டிவிகளும், பல பத்திரிகைகளும் உங்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கும் .

உண்மை எது ?என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நான் சொல்வது உண்மையா? அவர்கள் சொல்வது உண்மையா? என்பதை சிந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இன்றைய அரசியல் களங்கள் இருக்கிறது. மக்கள் எல்லாம் நினைக்கலாம் ,பெரிய பத்திரிக்கை ,பெரிய தொலைக்காட்சி, இவையெல்லாம் சிறிய பத்திரிக்கை என்று அலட்சியமாக கூட நினைக்கலாம்.

ஆனால், எந்த பத்திரிக்கையில் மக்களுக்காக செய்திகள் வருகிறது?என்பதை சிந்தியுங்கள் .எந்த பத்திரிக்கை உண்மை செய்திகளை வெளியிடுகிறது? என்பதை சிந்தியுங்கள் .அதுதான் உங்களை பாதுகாக்கும். அதுவரை உங்களை யாரும் பாதுகாக்க முடியாது..உங்களை நீங்களே பாதுகாத்துக் கொண்டால்தான் உண்டு .

மேலும்,அரசியல் கட்சிகள் பாதுகாக்கும் ,அரசியல்வாதிகள் பாதுகாப்பார்கள் இதுபோன்ற பத்திரிகை ,தொலைக்காட்சிகள் பாதுகாக்கும் என்று நினைத்தீர்கள், ஆனால்! அது உங்களுடைய அறியாமை என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.

நாட்டில் குறுக்கு வழியில் சட்டத்தை ஏமாற்றி, இந்த சமூகத்தை ஏமாற்றி, அரசியல் அதிகாரத்தை பறிக்கலாம் என்று அரசியல் கட்சிகள் துடிக்கும் போது ,அதற்கு ஜால்ராவாக பத்திரிகை, தொலைக்காட்சிகள் இருக்கும்போது ,மக்கள் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை சிந்தியுங்கள்.

மேலும், இந்த நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத எதிர்க்கட்சிகள் ,ஓட்டுக்காக வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்காக கவலைப்படுகிறார்கள் என்றால் ,இவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள்? என்பதை சிந்தியுங்கள்.

ஓட்டுக்காக எந்த நிலைக்குப் போவது இன்றைய அரசியல் கட்சிகளின் வியாபாரம் ஆகிவிட்டது. அதனால் பணத்திற்காக மக்கள் தகுதியானவர்களை புறந்தள்ளினால், அதன் விளைவு விபரீதம். நல்ல கருத்துக்களையும், உண்மைகளையும் சொல்ல கூடிய பத்திரிகைகளின் செய்திகளை புறந்தள்ளினால், அதன் விளைவு உங்களுடைய வாழ்க்கை போராட்டமாக மாறிவிடும்.

அதனால், மக்கள் போலியான அரசியலில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.மேலும், தேர்தல் ஆணையம் இந்தியாவின் பூர்வ குடிகளையும், இந்திய நாட்டையும், எதிர்க்கட்சிகளின் சதி திட்டத்திலிருந்து காப்பாற்றுவது முக்கிய கடமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *