நிதித்துறை செயலாளர் சித்திக் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து ,ஆண்டுக்கு ,ஆண்டு கடன்கள் அதிகரிக்கும் .50 ஆண்டு காலத்திற்கு இது நீடிக்கும். மத்திய அரசின் அனுமதியோடு தான் கடன் வாங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகம் நிர்வாகத்தில் மாநிலத்தின் கடன் சுமை , ஆண்டுக்கு, ஆண்டு,அதிகரிக்க திட்டமிட்டு, நிர்வாகத்தை நடத்த நிதித்துறை செயலாளர் சித்திக் தெரிவித்திருப்பது , தமிழகத்தின் நிதிநிலை வருங்காலத்தில் அது சவாலாக இருக்குமா? அல்லது இருக்கப் போகிறதா? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
தமிழகத்தின் வருவாய்யை பொறுத்து, கடன்கள் வாங்கலாம்.மேலும், ஒரு குடும்பம் போல தான் ,ஒரு நாடும், நாட்டின் மாநிலமும், அதன் நிர்வாகத்தை பார்க்க வேண்டும்.

ஒரு குடும்பத்தின் வருமானம் உதாரணத்திற்கு 50,000 என்று வைத்துக் கொண்டால், ஆடம்பர செலவு, தேவைக்கான குடும்ப செலவு , மருத்துவ செலவு, கல்வி செலவு, மற்றும் இதர செலவுகள் எல்லாவற்றையும் நம்முடைய ஐம்பதாயிரத்திற்குள் தான் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதில் வாங்கிய கடன் 2 லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொண்டால், அந்த கடனுக்கும் நாம் ஒரு பத்தாயிரம் சேமித்து ,அந்த கடனை அடைக்க வேண்டும். இது ஒரு குடும்பத்தின் பட்ஜெட்.

அதே போல தான், இந்த மாநிலத்தின் பட்ஜெட்டும் அப்படித்தான் இருக்க வேண்டும். இதில் சற்று வித்தியாசமாக இருக்கலாம். தொழில் முதலீடு ,சாலை பாதுகாப்பு திட்டங்கள், கல்வி, மருத்துவம் ,போன்ற அதே போல், பல திட்டங்களுக்கு செலவு செய்தாலும், மாநிலத்தின் வருவாயில் எந்த அளவுக்கு அதை சரி செய்ய முடியும்? என்பதை பார்த்து தான் செய்ய வேண்டும்.
இதில் இலவசங்கள் என்பது தேவையானது அல்ல. இலவசங்கள் மிகவும் குறைவாக செய்ய வேண்டிய விஷயங்கள். யாருக்கு இலவசத்தை கொடுக்க வேண்டும்? என்பதை மிக, மிக குறைவாகத்தான் அதை கொடுக்க வேண்டும். தேவையற்ற முறையில் இலவசத்தை கொடுத்து மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க கூடாது.

மேலும்,தேவையான திட்டங்களுக்கு நிச்சயம் செலவிடாமல், இருப்பது மக்கள் நலனுக்கு எதிரானது. தவிர, முக்கியமான வளர்ச்சி திட்டங்களில் மாநிலத்தின் கல்வி , சுகாதாரம், இதற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதேபோல் வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகுதான், இலவசத்தை கொடுக்கலாமா? கொடுக்க கூடாதா? என்பதை பரிசிலிக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டின் அரசியல்! கடந்த கால திமுக ,அதிமுக கொடுத்த இலவசங்கள் மக்களிடம் பழகிப் போனது. இந்த இலவசங்களை வைத்து அரசியல் செய்து கொண்டு, ஊழல் செய்து கொண்டு ,அரசியல் நடத்திக் கொண்டு இருந்தார்கள்.
இவர்கள் நடத்திய அரசியல் ,ஊழல் அரசியல்! ஓட்டுக்கானது. நாட்டின் வளர்ச்சிக்காகவோ, மக்களின் வளர்ச்சிக்காகவோ, பெரிதும் இல்லை. இதனால், அவர்கள் தான் வளர்ச்சி அடைந்தார்கள் .அவர்கள் கட்சியினர், எம்எல்ஏ, எம்பி ,மந்திரிகள் தான் வளர்ச்சி அடைந்தார்கள். அதற்கு அவர்களுடைய சொத்து கணக்கு வளர்ச்சியே மக்களுக்கு சான்று . அந்த அளவுக்கு, நாட்டு மக்கள் யாரும் வளர்ச்சி அடையவில்லை.

மேலும்,இதையெல்லாம் புதிதாக பொறுப்பேற்றுள்ள, தமிழக முதல்வர் விஜய் அவசியம் பார்க்க வேண்டியது நிதி நிலையை எந்த அளவுக்கு கடன்கள் வாங்காமல் ,குறைக்க முடியும்? என்பதை யோசித்து, மாநிலத்தின் நிதிநிலை கொண்டு செல்வது மிக, மிக முக்கியமானது.

திமுகவில் பேசுகின்ற வெத்து வெட்டு அரசியல்! பேச்சுக்கும், செயல்பாட்டுக்கும், சம்பந்தம் இருக்காது.மேலும், விவசாயிகளுக்கு ஐந்து சவரன் கடன் தள்ளுபடி என்று சொன்னார்கள் .பேருக்கு 100 பேர் தள்ளுபடி செய்துவிட்டு, பல ஆயிரக்கணக்கில்,கணக்கு காட்டிவிட்டு போய் விட்டார்கள்.
ஆனால், இப்போது விவசாயிகளுக்கு தூக்கிப் பிடிப்பது போல, பேசுகிறார்கள் இதைவிட கேவலமான வெத்து, வெட்டு அரசியல்! தமிழ்நாட்டில் பார்த்ததில்லை.

எனவே, தமிழக முதல்வர் விஜய் நீண்டகால அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றால் !நிதி நிலையை முக்கியமாக பார்த்து கையாள வேண்டும். கடன் வாங்கி இலவசத்தை கொடுப்பது, கடன் சுமையை மாநிலத்தில் வருவாய் காட்டிலும், அதிகரிப்பது, அதையெல்லாம் தமிழ்நாட்டின் வருங்கால நிதிநிலை! சவாலாக இருக்கப் போகிறதா? அல்லது சமாளிக்கும் அளவில் இருக்கப் போகிறதா? என்பதை பொறுத்து தான் மாநிலத்தின் வளர்ச்சியை தீர்மானிக்க முடியும். இது பொது மக்களுக்கும் இந்த உண்மை புரிகிறதா?
