நாட்டில் கட்டாய மதமாற்ற சட்டம் நடைமுறையில் இருந்தும், இன்று விடையூர் கிராமத்தில் வசிக்கக்கூடிய 20 க்கும் மேற்பட்ட குடும்பங்களில், ஒரு சில பேருக்கு படிக்க வைக்கிறேன் என்றும், ஆதார் கார்டு வாங்கி தருகிறேன் என்றும், பிஸ்கட் டீ கொடுத்து ,அவர்களை கட்டாய மதமாற்றத்திற்கு ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது பற்றி மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர் கேட்டபோது, உங்களுக்கு அதனால் என்ன கவலை? மேலும், நாங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வருகிறோம். உதவி செய்ய வருபவர்கள் ஏன் பைபிளை கொண்டு வந்து உட்கார்ந்து பாடம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்? இங்கே பைபிள் வரவில்லை என்றால், இவர்களை யாரும் கேட்க போவதில்லை.
மேலும், அந்த மக்களுக்கு இந்து மதத்தை பற்றியோ ,கிறிஸ்தவ மதத்தை பற்றியோ ,எந்த புரிதலும் இல்லாதவர்கள் .அப்படிப்பட்டவர்களை மதமாற்றம் செய்வது மிகப் பெரிய தவறு. மேலும் ,இந்த கிராமத்தில் அவர்களுக்கு புறம்போக்கு இடத்தில் அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளது. அப்படி இவர்கள் வீடு கட்டி கொடுத்துள்ளதை இவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இதை காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாக இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி இந்துக்களுக்காக கொடுக்கப்பட்ட சலுகைகள் ,கிறிஸ்துவ மத மாறியவர்களுக்கு எப்படி அது போய் சேரும்? அதனால் கொடுக்கப்பட்ட சலுகைகள் அதை திரும்ப பெற வேண்டும்.
இது பற்றி சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு முறையாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இச்செய்தியின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது.