வரும் அக்டோபர் 30ம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. அது ராகு மீனத்திற்கும், கேது கன்னிற்கும் மாற்றம் நிகழ்கிறது. இந்த மாற்றத்தால் ! உலக அளவில் அரசியல் மாற்றங்கள் ,போர் பதற்றங்கள், அரசியலில் ஊழல் பேர்வழிகள், இவர்களுக்கெல்லாம் கடும் சவாலாக தான் இருக்க போகிறது. அதுமட்டுமல்ல,
நாட்டில் மக்களின் மனநிலை ஊழலுக்கு, வன்முறைக்கு எதிராக மாறி இருக்கிறது. இன்னும் சில காலங்களில் அரசியல்வாதிகள் திருந்தவில்லை என்றால், சட்டமும், நீதிமன்றமும் அவர்களை தண்டிக்கவில்லை என்றால் ! கடவுள் ஏதோ ஒரு ரூபத்தில் எப்படி தண்டிப்பார் என்று சொல்ல முடியாத நிகழ்வுகள் உலகில் நடக்க சில காலங்கள் ஆகும் என்று ஆன்மீக சித்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் இந்த அரசியல் ! மகான்களுக்கு துளி கூட அவர்களுக்கு விருப்பம் இல்லையாம். அவர்கள் நிச்சயம் இதற்கான வேலையை பார்ப்பார்கள் என்கிறார்கள். தவிர, மு க ஸ்டாலினுக்கு இது ஒரு வாய்ப்பு தான் என்கிறார்கள். அதே போல் பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டு, பொய்யான செய்திகளை வெளியிட்டு, மக்களை குழப்பி வருவது, மற்றொரு பக்கம் அரசியல் தெரியாதவர்களை ஏமாற்றி வருவது, அதற்கும் முற்றுப்புள்ளி வைப்பார்களாம். ஆக கூடி அதர்மத்தின் அழிவு காலம் நெருங்குகிறது .
அது அரசியலாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும், அதிகாரமாக இருந்தாலும், அந்த அதர்மத்தின் கொடுங்கோல் எப்போது இதை முடிக்கலாம் என்று மகான்கள், சித்தர்கள் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர் ஆன்மீக சித்தர்கள் .
மேலும், ஊழல் அரசியல்வாதிகளுக்கு சட்டமும், நீதிமன்றமும் தண்டிக்கவில்லை என்றால், இந்தியன் படத்தில் வருகின்ற காட்சிகளைப் போல் நடக்கும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் ஊழல் செய்து, சொத்துக்களை குவித்துக் கொண்டிருக்கும் இவர்கள், அந்த சொத்துகளை அனுபவிக்க முடியாமல் போகும் சூழ்நிலை உருவாகும் என்கிறார்கள். காலங்கள் அது எப்போது என்று சொல்ல மறுக்கிறார்கள். இந்த நாட்டையும், மக்களையும் வழிநடத்துவது அவர்கள்தான். ஆகக் கூடி வரும் ராகு – கேது பெயர்ச்சி அதர்மத்திற்கு மிகப்பெரிய அடியாக தான் இருக்கும் என்பதில் அவர்கள் சொல்லும் ரகசிய சூட்சுமம் .