
தேர்தல் நேரத்தில், கொடுக்கப்பட்ட அளவை விட ,அதிக அளவில் குவாரிகளில் சவுடுமண் எடுப்பது இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்று கூட தெரியாமல் விடையூர் கிராமத்தில் சவுடுமண் குவாரி, ஓட்டி கொண்டு இருக்கிறார்கள். இது பற்றி மாவட்ட ஆட்சியருக்கு தெரியாதா? மேலும்,

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கொடுக்கப்பட்ட அளவு 6000 லோடு சவுடு மண், ஆனால், இந்த ஏரி சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் 100 ஏக்கருக்கு மேல், சுமாரா 10 அடி ஆழத்திற்கு குறுகிய காலத்திலே சுமார் 60,000 லோடுக்கு மேல் சவுடு மண் எடுத்து விட்டார்கள். இந்த சூழ்நிலையில்,
,இன்னும் இந்த குவாரிக்கு 15 நாட்கள் இருந்தாலும், ஒரு வாரத்துக்குள்ளே இவ்வளவு மண் ஓட்டப்பட்டிருப்பது, இது கனிமவளக் கொள்ளை தான் என்று சொல்ல வேண்டும்.
மேலும்,இப்படிப் பட்ட இந்த கனிமவள கொள்ளைக்கு, மாவட்ட ஆட்சியர் இதுவரை எவ்வளவு மண் எடுக்கப்பட்டு இருக்கிறது? என்பதை ஆய்வு செய்தவர் கிடையாது.தவிர, பொதுப்பணித்துறை அதிகாரிகளும், இது பற்றி எந்த ஒரு தகவலும், மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்ததில்லை. மேலும், கனிமவளத்துறை அதிகாரியும் இதுவரை சென்று எவ்வளவு எடுக்கப்பட்டிருக்கிறது? என்பதை பார்த்ததில்லை.
ஏன்? நாட்டில் கனிம வள கொள்ளை நடக்காது? கனிவான கொள்ளை நடத்துபவர்களுக்கு உடந்தைந்தையாக இருப்பவர்கள், அதிகாரிகள் தான். மேலும்,

நீதிமன்றம் கனிமவள கொள்ளைக்கு பொறுப்பு மாவட்ட ஆட்சியர்கள் தான் என்று பலமுறை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் கூட, இவர்கள் அலட்சியமாக தான் இருக்கிறார்கள்.
மேலும், இப்படி முறைகேடாக எவ்வளவு மண் எடுக்கப்பட்டு இருக்கிறதோ, அதற்கு மாவட்ட ஆட்சியரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுமே, பொறுப் பேற்க வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல, எவ்வளவு அளவு அதிகமாக எடுக்கப்பட்டுள்ளதோ,அதை ஆய்வு செய்து அதற்கு அபராதமும் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு அபராதம் விதிக்காத பட்சத்தில், நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர கிராம பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும்,இப் பிரச்சனை தற்போது நீதிமன்றத்திற்கு சென்றால், திமுகவின் ஊழல் ஆட்சிக்கு மேலும், பெரிய அவமானத்தை ஒரு பக்கம் ஏற்படுத்தும். மற்றொரு பக்கம், ஒட்டுமொத்தமாக, இந்த கிராம மக்கள் , இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதைத் தேர்தல் நேரத்தில்,திமுகவுக்கு எதிர்த்து வாக்களிப்பார்கள் என்பது உறுதி. மேலும்,

நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும், வாங்கிக் கொள்வார்கள்.ஆனால், வாக்களிக்க மாட்டார்கள்.