அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏ, வைத்தியலிங்கம் அவரது வீட்டில் அமுலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது .இது தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அவரது வீட்டிலும், சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ குடியிருப்பில் உள்ள அவரது அறையிலும், சோதனைகள் நடத்தி வருகின்றனர் .

அமைச்சராக இருந்தபோது கட்டுமான நிறுவனத்திடம் 28 கோடி கைமாறிய வழக்கில் இந்த சோதனை நடைபெற்ற வருவதாக தகவல் . மேலும் ,அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து ,ஊழல் வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் .
இது மக்கள் மத்தியில் அதிமுக என்ற கட்சியின் பெயரை முற்றிலுமாக டேமேஜ் செய்துவிட்டது . இதில் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவில் ஊழல் வழக்குகளை சந்திப்பது அதிமுகவை நம்பி இருக்கும் கட்சியினருக்கு எதிர்காலம் கேள்விக்குறிதான் .இவர் ஓபிஎஸ் குரூப் என்றாலும், நெடுநாளைய அதிமுகவின் கட்சியில் பயணித்தவர் .