அமைச்சர் நேருவின் நகராட்சி ஊழல்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கையில் பொறியாளர்கள், கமிஷனர்கள் சிக்குவார்களா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நேருவின் நகராட்சி ஊழல்கள் அனைத்து ஊழல்களை விட மிஞ்சிவிட்டது. ஏனென்றால் ,நகராட்சியில் தொட்டதெல்லாம் பணம், சுகாதார துறையா? கொள்ளையடித்துவிட்டு கணக்கெழுது, பொறியியல் துறையா?

வேலை எப்படி நடந்தாலும், ஓ.கே. பில்லு போட்டு எடுத்துக்க வேண்டியது தான். பெரிய காண்ட்ராக்ட் ,கார்ப்பரேட் கம்பெனி எடுப்பார்கள். அந்த கமிஷன் எல்லாம் நேருவுக்கு போன பிறகுதான், அங்கே அவரிடம் கான்ட்ராக்ட் கொடுக்கப்படும்.

அது சாலையாக இருக்கட்டும், கட்டிடங்களாக இருக்கட்டும் ,கழிப்பறைகளாக இருக்கட்டும், எந்த வேலையாக இருந்தாலும், கோடியில் ஒரு வேலை என்றால், அமைச்சருக்கு தெரியாமல், அந்த வேலை செய்ய முடியாது.

இதில் அந்தந்த நகராட்சி சேர்மங்கள், கவுன்சிலர்கள், கமிஷனர்கள் ,பொறியாளர்கள் ,எல்லோருக்கும் பர்சன்டேஜ் உண்டு.அது கீழ் மட்டத்தில் மிகக் குறைவாக இருக்கும். அது ஒரு பெரிய கணக்கு என்று கூட சொல்ல முடியாது.

அந்த டெண்டர் தொகையை கணக்கிடும்போது, அதிகாரிகளுக்கு அது ஒரு பிச்சைக்காசு தான். அதனால், நேரு வேலை வாய்ப்புக்காக ,அதாவது பொறியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் போட்ட விவகாரத்தில் வந்த பணம் 800 கோடி என்றால், இது பல ஆயிரம் கோடி இந்த ஐந்தாண்டுகளில் நேரு மூலம் எடுக்கப்பட்டது.

இதில் அமலாக்கத்துறை இப்போது எடுத்துள்ளது அது ஒரு கால்பங்கு இருக்குமா? என்பது சந்தேகம். இந்த துறையை அமலாக்கத் துறை பல வேலைகளை ஆய்வு மேற்கொண்டால் எவ்வளவு ஊழல்கள்? என்பதை பொதுமக்களே அதிர்ச்சி அடைந்து போவார்கள்.

அந்த அளவுக்கு நகராட்சி துறையில் நேருவின் ஊழல்கள் அனைத்து துறைகளையும் விட மிஞ்சி விட்டது. இந்த ஊழல்கள் மீது அமலாகத் துறை 250 பக்கத்திற்கு மேல் அனுப்பிய கடிதத்தில் தமிழக டிஜிபி, எஃப் ஐ ஆர் போடவில்லை என்றால், இந்த ஊழலில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்று உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வார்கள். அதனால், நேரு இந்த ஊழலில் இருந்து வெளி வருவது மிக மிக கடினம்.

மேலும்,அரசியல் நகர்வு எப்படி ?என்பது பொறுத்தே,இதனுடைய வேகம் இருக்கும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *