அயோத்தி ராமர் கோயில் இந்துக்களின் 500 ஆண்டு அரசியல் போராட்டத்தின் வெற்றி .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அயோத்தியில் தற்போது கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் 500 ஆண்டு இந்துக்களின் அரசியல் போராட்ட வெற்றி. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் எத்தனையோ ,ஆத்மாக்கள் வாழ்க்கை இழந்து, உயர்த்துறந்து போராடி பெற்ற இந்துக்களின் வெற்றி, இந்த வெற்றி சாதாரணமாக அடைந்துவிடவில்லை.

முகலாய சாம்ராஜ்யத்தின் பாபர் இடித்த கோயிலை தான்  500 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அரசியல் வரலாறு பிரதமர் மோடியால் இந்தியாவில் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இவர் ஒரு சரித்திரத்தின் அடையாளம் இப்படி ஒரு தர்மத்தின் அடிப்படையில் ஆட்சி செய்பவர்களால் தான் இப்படிப்பட்ட தெய்வ காரியங்கள் நாட்டில் ஏற்படுத்த முடியும் .இதற்கு உதாரணம் நம்முடைய தமிழ்நாட்டில் ஆண்டு சோழ பேரரசு தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாறு இன்றும் அது மக்களிடையே நிலைத்து நிற்கிறது.

அது போல் தான் அயோத்தியில் ஸ்ரீ ராமனுக்காக கட்டப்பட்ட இந்த ஆலயம் புண்ணிய பூமியாக திகழும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .ஆனால், இந்த நல்ல காரியத்தை மோடி செய்து விட்டார் என்று அதை அரசியலாக்கி பார்க்கிறார்கள். எதிர்கட்சிகள் இதைவிட ஒரு கேவலம் தமிழ்நாட்டு ஊடகங்கள் மக்கள் எவ்வளவு பேசினாலும், இவர்களுக்கு மக்கள் தான் இனிமேல் புத்தி புகட்டுவார்கள் என்று நினைக்கிறேன் யார் எதை சொன்னாலும் எந்த கட்சி சொன்னாலும் எந்த வெத்து வெட்டு சொன்னாலும், அதையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் செய்தி என்கிறார்கள்.

 சில தினங்களுக்கு முன் வந்த ஒரு பெரிய டிவி என்று சொல்லிக் கொள்ளும் தந்தி டிவியில் ஒரு பக்கம் பிஜேபி கட்சிக்காரர், இன்னொரு பக்கம் திருமாவளவன் கட்சிக்காரர் இவர்கள் வரப்பு வாய்க்க தகராறு போல் பேசிக் கொள்கிறார்கள். இதை எல்லாம் பார்ப்பதற்கு சகிக்க முடியவில்லை. இருப்பினும், ஏழை சொல் சபை ஏறாது என்பது போல என்னதான், இந்த சமூக நலன் கருதி நல்ல விஷயங்கள் மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தாலும், அதை இந்த மக்கள் அலட்சியமாகத்தான் பார்க்கிறார்கள்.

அதன் விளைவு இந்த மக்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் கசக்கும் என்பார்கள். ஆனால், அந்த கசப்பு மருந்து உடல் நலத்திற்கு நல்லது என்பது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதை வருங்கால இளைய தலைமுறைகள், ஆவது உண்மையை புரிந்து தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் . தெய்வ நம்பிக்கை அவரவர் வாழ்வியலோடு கலந்தது .அதைக் கொண்டு வந்து அரசியலாக்கி, பத்திரிகைகள் வியாபாரம் ஆக்கி, தொலைக்காட்சிகள் வியாபாரம் ஆக்கி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது பற்றி எப்போது இந்த மக்கள் புரிந்து கொள்வார்கள்? திருடனும், ஏமாற்று பேர்வழியும் உத்தமன் போல தான் பேசிய நடிப்பார்கள். அப்படிதான் இந்த அரசியல் கட்சிகள் .இவர்கள் மக்களிடம் இந்த கார்ப்பரேட் ஊடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை நாளைக்கு இந்த ஊடக நடிப்பு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும்?  என்பதை இனிவரும் காலங்களில் தெரியும். தவிர, தெய்வ நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும்  மக்கள் இதை அரசியலாக பார்க்கவில்லை .ஆன்மீகமாகத்தான் பார்க்கிறார்கள்.

ஆனால், அரசியல்வாதிகள், நாட்டின் எதிர்க்கட்சிகள், இதை அரசியல் ஆக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் . நாளை தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை தடை செய்யப்பட்டுள்ளது. இந்துக்களுக்கு மிகப்பெரிய கேவலம். காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளும் ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை நேரலை செய்யக்கூடாது என்று தடைவிதித்து போலீஸ் குவைக்கப்பட்டுள்ளதாக தகவல் . ஆனால் தமிழக அரசு வட்டாரத்தில் அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று தெரிவிக்கிறார்கள் இது என்ன அரசியல் என்பது புரியவில்லை .மேலும்,

அயோத்தியில் ராமர் கோயிலுக்கும், இங்குள்ள கோயில்களுக்கும் என்ன சம்பந்தம்? கடவுள் இல்லை என்ற கொள்கை உடைய திமுக, இதை எப்படி தடை செய்துள்ளது ?இது அரசியல் .ஆனால் ஆன்மீகம் என்பதில் இந்துக்களுக்கு முக்கியத்துவமான ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டை விழா நடைபெறும் போது, இங்குள்ள தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைக்கு தடை செய்வது , தெய்வ சக்தி ஒரு காலம் இப்படி செய்யாது. தீய சக்திகள் தான் இது போன்ற காரியங்களில் ஈடுபடும் .இது தெய்வத்தை அவமதிக்கும்  செயலா? இல்லை போட்டி அரசியலா?

அப்படியே போட்டி அரசியல் என்றாலும், தெய்வ வழிபாட்டில் எதற்கு? இந்த போட்டி அரசியல் என்பது தமிழக மக்களின் கேள்வி? மேலும், youtube  அறிவாளிகள் மக்களை முட்டாளாக்க ராமர் வடநாட்டில் தான், தென்னாட்டில் இல்லை .அவருக்கு கோயிலும் இல்லை. மக்கள் வணங்கவும் இல்லை. இப்படியெல்லாம் பேசுவதற்கு எவ்வளவு கூலி வாங்குகிறார்கள் ?என்பது தெரியவில்லை .ஒவ்வொரு பெருமாள் கோயில்களிலும், ராமர் இல்லாத கோயிலே இல்லை. இதற்கு கூடவா அரசியல்?இதற்காக பிரதமர் மோடி கடும் விரதம் இருந்து, பல கோயில்களுக்கு சென்று இறைவனுடைய தரிசனத்தை பெற்று நாட்டு மக்களின் நன்மைக்காக தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து வருகிறார்.

 ஆனால், இந்துக்களின் பெரும்பான்மை ஓட்டு பிஜேபிக்கு ராமர் கோயில் கட்டியதால் திரும்பி விடும் என்ற அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள், இந்துக்கள் அல்லாத மக்களிடம் இதை மதவாதம் என்று பேசி வருகிறார்கள். மதவாதம் பேசுபவர்கள் தான், இந்த மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் .இதை எப்படி பிஜேபி வெற்றி பெற்றது?  இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட பகை இன்று வரை அதற்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் தொடரும் அரசியலில் ,லாபம் பார்க்கும் இந்த கட்சிகள் ,இதற்கெல்லாம் தகுதியற்றவர்களாக தான் இருக்கிறார்கள்.இந்த தகுதியற்ற கூட்டம் ,அரசியல் தெரிந்தவர்களிடம் பேச முடியாது. தெரியாத முட்டாள்களிடம் பேசிக் கொண்டிருக்கிறது. மேலும்,

 பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தில் உள்ள கோயில்கள் கோபாலபுரம் குடும்பத்தின் சொத்து இல்லை என்பதை அறநிலையத்துறை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவை தமிழக பாஜகவின் தொண்டர்கள், தமிழக மக்களுடன் சேர்ந்து கொண்டாடுவார்கள். ஸ்ரீ ராமரின் மகிமையை போற்றும் விதமாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் பாஜக சார்பில் ஜனவரி 22ல் பஜனைகள், பூஜைகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் .

மேலும், இந்தியாவில் தெய்வ நம்பிக்கை உள்ள மக்கள் இதை ஆன்மீகமாக பார்க்கிறார்கள் .தெய்வ நம்பிக்கையற்றவர்கள் இதை அரசியலாக பார்க்கிறார்கள். ஆனால் ,எது எப்படியோ 500 ஆண்டு அரசியல் போராட்டத்தின் இந்த பாரத தேசத்தின் அரசியல் வரலாற்று வெற்றி , அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது என்பதை ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள், அரசியல் எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *