அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை இந்துக்கள் ஆவலோடு டிவி நிகழ்ச்சியில் எதிர்பார்த்தார்கள். அதை பொதுவெளியில், கோயில்களில் பொது மக்களுக்கு, விளம்பரப்படுத்தக் கூடாது என்பதில் திமுக அரசு அண்டர் கிரவுண்ட் வேலை அரசியல் செய்தது. மேலும், அதற்காக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது .
ஆனால், இது பற்றி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்கும் போது அல்லது அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு அன்னதானம், சிறப்பு அபிஷேகம் ,செய்ய பொதுமக்களும் ,பிஜேபியின் சமூக ஆர்வலர்களும் ,முன்வந்து கோயில் நிர்வாகத்தை அணுகும் போது, அப்படி எதுவும் இன்று சிறப்பு அபிஷேகம் பூஜை எதுவும் கிடையாது என்றும் ,அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அது என்னவென்றால், நம்மளுடைய கடவுளை கும்பிடுவதற்கு இவர்கள் யார் நம்மளை தடுப்பதற்கு? இது தான் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய எழுச்சி. நான் சில விவரம் தெரிந்தவர்களை கேட்கும் போது ,அவர்கள் சொன்ன பதில் இவர்களை எல்லாம் சும்மா விடக்கூடாது. இந்த செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை எதனால் தள்ளி வைக்கப்பட்டது?
கூட வேதனையாக உள்ளது .மேலும், மோடி செய்வதை மக்கள் உன்னிப்பாக பார்க்கிறார்கள் .அதேபோல் திமுக என்ன ஆட்சி, நிர்வாகம் செய்கிறது? என்பதையும் மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அது மட்டுமல்ல, இன்று செய்த கேவலமான அரசியல், வேறு யாரும் செய்ய மாட்டார்கள் .அதாவது மக்களுக்கு இந்த ராமர் மீது பக்தி வந்து, பிஜேபி பக்கம் சாய்ந்து விடக்கூடாது. என்பதில் திமுக அரசு தெளிவாக ஒரு அரசியல் செய்தது .அந்த அரசியல் எப்படி? என்றால், நாங்கள் ஆன்மிகத்தை விரும்புகின்ற ஒரு கட்சியாக இன்று சேகர்பாபு பேட்டியில் தெரிந்தது. அதேசமயம் ஓட்டுக்காக எப்படியும் பேசுபவர்கள் என்பது எங்களைப் போன்றவர்களுக்கு தான் தெரியும்.
எப்படியோ தகுதி இல்லாதவன் எல்லாம் மந்திரி ,தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய சாபக்கேடு ,இந்த அதிமுக ,திமுக என்ற அளவில் மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதில் சில பேர் என்னிடம் தெரிவித்தது நான் எப்போதும் அதிமுகவுக்கு ஓட்டு போட்டவன் ,இந்த முறை திமுகவின் தேர்தல் அறிக்கையை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை .
மேலும் ,இப்போது ஏண்டா போட்டேன் என்ற நிலைமைக்கு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்கிறார்கள். திமுக இனிமேல் எந்த தேர்தல் அறிக்கையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஏனென்றால், ஏற்கனவே 600 பக்க அறிக்கையில் ஒன்று விடாமல் இந்த மூன்று ஆண்டு காலத்தில் மொத்தம் அவர்களுக்கு வேண்டிய தொலைக்காட்சி ,பத்திரிகைகளில் செய்து நிறைவேற்றி விட்டார்கள் .மிச்சம் மீதி பாக்கி இருக்குமா? என்பது தெரியவில்லை.
மேலும் அரசியல் என்றால் ஓட்டுக்கு பணம் வாங்கி கையேந்தி நிற்பவர்களுக்கு உங்களுடைய அரசியல் தெரியாது. குடிகாரர்களுக்கு தெரியாது. எப்படியும் பேசும் பொறுக்கி கூட்டத்துக்கு தெரியாது. யாருக்கு தெரியும் ?என்றால் தகுதியானவர்களுக்கும், அரசியல் தெரிந்தவர்களுக்கும் , அரசியல் படித்தவர்களுக்கும் ,பண்பாளர்களுக்கும் திமுக அரசியல் தெரிந்து விட்டது .இனி இந்த ஊடக அரசியல் எல்லாம் வேலைக்கு ஆகாது .
மேலும் மக்கள் அதிகாரத்தில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தேன். ஒரு பக்கம் இந்தக் கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு இவர்கள் சாதகமானவர்களாக இருப்பதைப் போல் காட்டிக் கொள்கிறார்கள். அடுத்த பக்கத்தில் தமிழ்நாட்டில் ராமர் என்ற கடவுளை வைத்து பிஜேபி அரசியலில் வளர்ச்சி அடையக் கூடாது.இப்படிப்பட்ட கேவலமான அரசியலா ?தவிர, பிஜேபி இதை வைத்து அரசியல் செய்யவில்லை. செய்திருந்தால் தாராளமாக கேட்கலாம். அரசியல் செய்வது என்றால் ஆங்காங்கே ஒரு மேடைகளை அமைத்து, அதற்கு ராமர் சிலை வைத்து மேடை போட்டு அரசியல் பேசியிருந்தால், ஏற்றுக் கொள்ளலாம். அதுவும் இல்லை.
Court judgement.
இவர்கள் செய்தது முழுக்க முழுக்க ஆன்மீகம் .அங்கே அரசியல் இல்லை. ஒரு இடத்திலாவது அரசியல் செய்ததை திமுக நிரூபிக்க முடியுமா? இங்கே நம்முடைய கடவுள், நாம் கும்பிடுவதற்கு இவர்கள் யார் தடை விதிப்பது? என்ற கோணத்தில் மக்களின் கேள்வி? மாறி இருக்கிறது. திமுக செய்த வேலையும் மக்களுக்கு தெரிந்து விட்டது. அதாவது நிர்மலா சீதாராமன், அண்ணாமலை போன்றோர் இந்த கோயில்களில் அபிஷேகம், அன்னதானம் செய்வதற்கு இவர்களுக்கு அனுமதி கிடையாது என்று போலீஸ் மிகப் பெரிய கெடுபிடி செய்துள்ளது. இது ஒரு பக்கம், மற்றொரு பக்கத்தில் அறநிலையத்துறை மறுத்துள்ளது. ஆனால் பிஜேபி இதை உடனடியாக நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை கொண்டு சென்று, நீதிமன்றத்தில் கோயில்களில் அபிஷேகம் அன்னதானம் செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்பதை உத்தரவு வாங்கி விட்டார்கள் . மேலும், பெரும்பான்மையான இந்துக்கள் மாலை தங்கள் வீட்டுக்கு வெளியில் விளக்கேற்றி வழிபட்டனர் இதுவே ஸ்ரீ ராமனுக்காக தமிழகத்தில் எத்தனை கோடி மக்கள் வணங்கினார்கள்? என்பதை திமுக புரிந்து கொள்ளுமா?
இது இப்படி இருக்க, இதே பிரச்சனை திமுக ஒரு கிருத்துவ சர்ச்களிலோ அல்லது முஸ்லிம்கள் தர்காக்களிலோ இது போன்ற பிரச்சினையை எழுப்புவார்களா? இவர்கள் செய்திருக்கின்ற வேலை, இந்துக்களுக்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்துள்ளது. இதைக் கூட சொல்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி இப்படிப்பட்ட பிரச்சனையில் கண்டுகொள்ள மாட்டார். கண்டுக்காமல் விட்டிருந்தாலும், இதைப்பற்றி மக்கள் இந்த அளவுக்கு பேச மாட்டார்கள் .
ஆனால், இவர்கள் இந்த மக்களுக்கு கடவுளை கும்பிடுவதற்கு கூட தடை விதிக்கிறார்களே என்ற அரசியல் இது என்ன அரசியல்? இது என்ன ஆட்சி? நிர்வாகம் ?நாம் வாக்களித்து ஏமாந்து, நம் கடவுளை வணங்குவதற்கு கூட இவர்கள் தடை விதித்து ,நம்மளை அடிமையாக்குவார்களா? என்ற கேள்வி மக்கள் எழுப்பு தொடங்கி விட்டார்கள். திமுகவிற்கு தொடரும் அரசியல் சரிவு என்பதை புரிந்து கொண்டால் சரி