அரசியலில் போலி அரசியல் கலாச்சாரத்தையும், ஊழல் கலாச்சாரத்தையும், உருவாக்கும் கார்ப்பரேட் மீடியா, அரசியல் – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் பத்திரிக்கை துறை மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்ப்பதற்கும், ஆட்சி நிர்வாகத்தின் வெளிப்படுத்தன்மையை வெளிப்படுத்துவதற்கும் தான் அதன் முக்கிய நோக்கம்.

ஆனால், அந்த நோக்கத்திற்கு எதிரான முறையில் இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் செய்து கொண்டு ,தங்களை நான்காவது தூணாக மக்களிடம் ஒரு ஏமாற்று அரசியலை செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், மக்கள் ஒரு நம்பிக்கையின் பேரில்தான் பத்திரிக்கை துறையின் செய்திகள் கொடுப்பதாக இருந்து வருகிறார்கள். இங்கே போலியான அரசியல் செய்வதற்கு இவர்கள் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். அதாவது பெரியார், அண்ணா உழைத்த உழைப்பில் தான் திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் அடித்தளம்.

இங்கே இவர்களுடைய செயல்பாடுகளையும், கொள்கைகளையும் விட்டுவிட்டு சிலைக்கு மாலை போட்டு, படத்திற்கு மாலை போட்டு, தங்களை பகுத்தறிவுவாதிகளாக, கொள்கைவாதிகளாக காட்டிக் கொண்டு, அரசியலில் கொள்ளையடிப்பதும், ஊழல் செய்வதும், ரவுடிசம் செய்வதும் எந்த அம்பேத்கர் சொல்லி விட்டு போயிருக்கிறார் ?அண்ணாவும், பெரியாரும் இதை தான் செய்ய சொல்லிவிட்டு போயிருக்கிறார்களா ? ஒரு காளும் இந்த மூன்று ஆத்மாக்களும் இப்படிப்பட்டவர்களை மன்னிக்காது.

ஏனென்றால் அவர்கள் இந்த அடித்தட்ட மக்களுக்கு போட்ட பேசிக் (Basic politics ) அரசியல் . இது தற்போது அடித்தட்டு மக்களுக்கும் போகவில்லை. நடுத்தர மக்களுக்கும் போகவில்லை. இதைப் பற்றி எந்த ஒரு கார்ப்பரேட் மீடியாவும், இவர்கள் செய்கின்ற தவறுகளை சுட்டி காட்டவில்லை. மாறாக ஒருவரைப் பற்றி ஒருவர் பேசிக் கொள்வதை செய்திகளாக போட்டுக் கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .இது பத்திரிகையின் செய்திகள் அல்ல.

செய்திகள் என்பது எதற்காக ஏன்? என்ற கேள்வி அதில் இருக்க வேண்டும். ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றி சொல்கிறார் என்றால், அந்த விஷயத்தில் மக்களுக்கு அதனால் என்ன பயன்? என்பது இருக்க வேண்டும். இங்கே அதுவல்ல பிஜேபியில் அண்ணாமலை இதை சொல்கிறார். அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? எடப்பாடி பேசினார். அதற்கென்ன உங்கள் பதில்? உங்களை திமுகவில் சேகர்பாபு இப்படி பேசினார். அதற்கு என்ன பதில் என்று சீமானை கேட்க வேண்டியது? திருமாவளவன் கூட்டணியில் எடப்பாடிக்கு போவாரா? ஸ்டாலின் கிட்ட இருப்பாரா? அவர் எங்க போன மக்களுக்கு என்ன? செய்யப் போகிறார்? இல்லை என்ன செய்து விட்டுப் விட்டார்?

மது ஒழிப்பு என்று பேசிவிட்டு போவதில் மதுவை ஒழித்து விட்டார்களா?இல்லை திருமாவளவன் மாநாடு நடத்தி மதுவை ஒழித்து விடுவாரா? இல்லை. நீங்கள் பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் போட்டதனால் மதுவை ஒழித்து விட்டீர்களா? இல்லை அன்புமணி நாங்கள் மது ஒழிப்பு கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று சொல்வதனால் ,இவர்கள் நாட்டில் மதுவை ஒழித்து விட்டார்களா?இவர்கள் பேசுவது, இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் அதை வியாபாரம் செய்வது, இதனால், அப்பாவி மக்கள் அரசியல் தெரியாமல் ஏமாறுவது, தமிழ்நாட்டில் ஒரு போலியான அரசியல் கலாச்சாரத்தையும், போலியான பத்திரிகை பிம்பத்தையும், நாட்டில் உருவாக்கி வைத்துள்ளது .

இந்த போலியான அரசியல் கலாச்சாரத்தையும், போலியான ஊடக பிம்பத்தையும் எதிர்த்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் தொடர்ந்து பிரச்சனையை மத்திய, மாநில அரசின் செய்தித்துறை அதிகாரிகளுக்கு புரியும் வகையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இதை சுட்டிக்காட்டி மக்களிடம் உண்மையை விளக்குகிறது. மேலும், இன்று பணம் சம்பாதித்து கோடிகளில் புரண்டு, கொண்டு மக்களை மதிக்காமல் இருப்பதற்கு தான் இந்த போலி அரசியல் கலாச்சாரம். இதுதான் ஊழல் அரசியல், அரசியலில் ஊழல் இருந்தால் அங்கே ரவுடிசம் இருக்கும், ரவுடிசம் இருந்தால் போலி அரசியல் இருக்கும். இதை எல்லாம் ஒழித்தால் தான் நாட்டில் மக்களுக்கான அரசியல் நிச்சயம் இருக்கும்.

அதனால் தான், உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ரவுடிகளை சுட சொன்னார்.இன்று தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறதோ, அத்தனை அரசியல் கட்சிகளிலும் எவ்வளவு அரசியல் ரவுடிகள் இருக்கிறார்கள்? இதனால் மக்களுக்கு என்ன பயன்? மக்கள் வளர்ச்சி அடையவில்லை. இவர்கள்தான் வளர்ச்சி அடைகிறார்கள். இது தமிழ்நாட்டில் உள்ள அதிமுக, அரசியல் கட்சியினருக்கும் திமுக குடும்ப அரசியலுக்கும் ஒத்துப் போகும்.அதேபோல் ஜாதி கட்சிகளான பாமக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக இவை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சாபக்கேடு .

அரசியல் கட்சி என்றாலே பொது சொத்துக்களை அதிகாரிகளோடு கூட்டி சேர்ந்து பங்கு போடுவதற்கும், நாட்டு மக்களை மிரட்டுவதற்கும், அடியால் வேலை பார்ப்பதற்கும் அரசியல் என்றால்! அதை எப்படி அரசியல் தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்? அரசியல் தெரியாத மக்கள் இதுதான் அரசியல் என்று தமிழ்நாட்டு கார்ப்பரேட் ஊடகங்கள் இதை நன்றாக மக்களிடம் அரசு திட்டங்களை சேர்த்துக் கொண்டிருக்கிறது. மக்கள் கவலை இல்லாமல் இந்த ஆட்சியை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பத்து கட்சிக்காரர்கள் பேட்டி கொடுப்பார்கள். இது எல்லாம் ஒரு போலியான அரசியல்.மேலும் ,

அரசியல் தெரியாத மக்கள் தமிழ்நாட்டில் 60% க்கு மேல் இருப்பதனால் நிலைமை இது. அரசியல் தெரிந்தவர்கள் இதை நினைத்து வெட்கப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள். மேலும், இன்று உத்தர பிரதேசம் தொழில் வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தகவல்.தவிர, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.ஒன்பது லட்சம் கோடி கடன், இது எப்படி தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த மாநிலமாக இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் சொல்கிறது? இது தவிர தமிழ்நாட்டை, போதை பொருள், சமூக கலாச்சார சீரழிவு,ஊழல் ரவுடிசம் இவை அனைத்தும் என்று தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளியுள்ளது .மேலும், ஒரு மனிதன் போதைக்கு அடிமையாகி விட்டால், அவன் உழைக்கும் திறனை இழந்து விடுகிறான். குடும்பத்தை இழந்து விடுகிறான். மனிதன் என்ற தகுதியும் இறுதியில் இழந்து விடுகிறான். இவ்வளவு பெரிய ஒரு கொடிய விஷம் தான் மது போதை, போதைப்பொருள் மனித குலத்திற்கு எதிரான ஒன்று.

இதை கொண்டு வந்து தமிழ்நாட்டில் விற்பனை செய்து கொண்டு, அது நல்லதா? கெட்டதா? என்பது பற்றி சிந்திக்கும் தகுதியற்றவர்கள் அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி போதைக்கு அடிமையானால் மக்கள் சிந்திக்க மாட்டார்கள் .நீங்கள் என்ன சொன்னாலும், நீங்கள் எதை காண்பித்தாலும், எதை பேசினாலும் அதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஏனென்றால், மனைவி, குழந்தைகள், குடும்பம் இதைப் பற்றி கவலைப்படாத ஒருவன்,

இந்த நாட்டைப் பற்றியும், சமூகத்தை பற்றியும் எப்படி கவலைப்படுவான் ?இது ஒரு தனி மனிதனுடைய முக்கிய வாழ்வியல் .ஒரு மனிதன் தன் குடும்பத்திற்கும், இந்த சமூகத்திற்கும் அவன் என்ன செய்தான்? என்பது தான் அவன் போகும்போது (இறக்கும் போது)அவனுடைய கணக்கு .ஆனால், இதை பற்றி அரசியல் கட்சியினரும் பேசுவதில்லை. ஆட்சியாளர்களும் பேசவில்லை, போதைப் பொருளும், மதுவும் வைத்து அரசாங்கம் நடத்துவது, அதைவிட வீணான அரசியல் நாட்டிற்கு வேறு எதுவும் இல்லை. நீங்கள் மக்களை போதைக்கு அடிமையாக்குவதை விட, விஷம் வைத்தே கொன்று விடலாம் .

ஏனென்றால் அவனும் சிறுக, சிறுக சாவ போவதில்லை. அவன் குடும்பமும் வருமானம் இல்லாமல், கஷ்டப்பட போவதில்லை. இது இரண்டுமே பாவத்தின் சம்பளமாக இந்த ஆட்சியாளர்களுக்கு போய் சேரட்டும். இவை எல்லாம் மக்களுக்கு சொல்லாமல் ஆட்சியாளர்கள் கொடுக்கின்ற பணத்திற்கும், மக்களின் உழைப்பில் கொடுக்கின்ற வரியை வைத்து நடத்துகின்ற பெரிய பத்திரிக்கை தொலைக்காட்சிகள் என்று சொல்லிக்கொண்டு வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கின்ற கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் பாவ கணக்கில் போய் சேரட்டும். நாட்டில் உண்மை எது? என்று படிக்கின்ற மக்கள் ஆர்வத்துடன் தான் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த உண்மை நன்கு புரியும்.

அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கும், ரவுடிசம் செய்வதற்கும் அங்கு வேலையே இல்லை. இல்லாத ஒரு வேலை தான் இந்த போலி அரசியல்! இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு தான் 50 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சர்குலேஷன் விதி தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதையும் மிக முக்கியமாக பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா கவனிக்க வேண்டும். இதை மத்திய, மாநில அரசின் செய்தி துறை கவனிக்க வேண்டும். இதற்கெல்லாம் ஒரு படி மேலே இருக்கின்ற நீதித்துறை இந்த உண்மையை கவனிக்க வேண்டும்.

இன்று வழக்குகள் பல லட்சக்கணக்கில் இந்தியாவில் நீதிமன்றங்களில், காவல்துறையில் பதிவு செய்வது எதன் அடிப்படையில்? அதனுடைய மூல காரணம்? இதை எல்லாம் ஆய்வு செய்தால் உண்மை காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் நன்கு புரியும். அதனால், பத்திரிக்கை துறை சீர் செய்வது நாட்டு மக்களின் நலனுக்கும், போலி அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கும், அரசியலில் ரவுடிசத்தை ஒழிப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும் முக்கிய காரணமாக இருந்து வரும் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து கோடிக்கணக்கில் மத்திய மாநில அரசுகள் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இது சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு மட்டுமே, இந்த சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். இதற்கு சான்று. 50 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக அரசியல் கட்சியினர் சொத்து மதிப்பு ஆய்வு செய்தால், இந்த போலி அரசியல் கலாச்சாரம், ஊழல் அரசியல் கலாச்சாரம் நன்கு தெரிந்து கொள்ளலாம்.

இது தவிர, ஜாதி கட்சிகள் ஆனா விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி இவர்களுடைய சொத்து மதிப்பையும் கணக்கீடு செய்யுங்கள். இவர்களெல்லாம் உண்மையாகவே இவர்களுடைய உழைப்பை மக்களுக்கு கொடுத்து இருந்தால், இந்த நாட்டில் ஒன்பது லட்சம் கோடி கடன் வந்திருக்காது . இன்று படித்த இளைஞர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் அவர்களுடைய வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றம் அடைந்திருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் வாயிலாக இணையதளத்தின் வாயிலாக சமூக ஆர்வலர்கள் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கும், தமிழக மக்களுக்கும், தெரிவிக்கும் உண்மைகள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *