அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் நிதியில் ஒரு அரசியல் கட்சி தேர்தல் செலவுக்கு எத்தனை கோடிகள் வாங்கலாம் என்ற ஒரு வரையறை இருக்க வேண்டாமா ?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அரசியல் கட்சிகள் தேர்தல் நிதியை எலக்ட்ரோ பாண்ட் அதாவது தேர்தல் பத்திரம் மூலம் வாங்கலாம் என்று பிஜேபி நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தது அதுவும் தவறு என்றால் வேறு எந்த வகையில் அவர்கள் வாங்கலாம்? அல்லது வாங்காமல் இருக்கலாம் என்பதை ஊடகப் பேச்சாளர்கள் தெரிவிக்கலாமே !

 பிஜேபி சொன்னது தேர்தல் பத்திரத்தின் மூலம் நிதி வாங்கினால் இன்று அது வெளிப்படையாக தெரிகிறது .அது இல்லாமல் தேர்தல் நிதி என்று ஆங்காங்கே அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் கம்பெனி நிர்வாகத்திடம் வாங்கிக் கொண்டால் அது எந்த கணக்கில் வரும் ?அதற்கு பதில் சொல்ல முடியுமா ?மேலும், இப்போது உச்ச நீதிமன்றம் இதை வெளியில் கொண்டு வரவில்லை என்றால்! மக்களுக்கு எந்த உண்மையையும் தெரியாது. உச்சநீதிமன்றம் தான் இதில் முக்கிய பங்கு வைத்து வருகிறது .

எந்த அரசியல் கட்சியானாலும், தேர்தல் நிதி யார் கொடுத்தாலும் ,அதனுடைய வெளிப்படுத்தத்தன்மை இருக்க வேண்டும். அதில் பிஜேபி சொன்ன சில கருத்துக்கள் முரண்பாடாக தான் உள்ளது .அதாவது தேர்தல் நிதி வாங்கிய அரசியல் கட்சிகள் RTI ல் கேட்டால், தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.யார் கொடுத்தார்? என்ற விவரம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு ஒரு எல்லையும் இல்லை .எத்தனை கோடி வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் .இது எல்லாம் தவறான கொள்கை முடிவு தான் .அதில் மாற்றுக் கருத்து இல்லை .

ஆனால், எந்த அரசியல் கட்சிக்கும் இதைப் பற்றி பேச தகுதி இல்லை .எல்லா அரசியல் கட்சியும் 100% உண்மையானவர்கள் என்று யாருக்கும் சர்டிபிகேட் கொடுக்க முடியாது. அவருக்கு இவர் பரவாயில்லை .இவருக்கு அவர் பரவாயில்லை. இப்படித்தான் சொல்லிக்கொள்ள வேண்டும் . ராஜாக்கள் ஆட்சி செய்த காலங்களில் திருடர்கள் எப்படி இருந்தார்கள்? எப்படி திருடுவார்கள் என்றால் !வீட்டுக்குள் கண்ணமிட்டு திருடக்கூடிய திருடர்கள் மூன்றில் ஒரு பங்கு திருடி கொள்வார்கள்.

 இரண்டு பங்கு அந்த வீட்டுக்காரனுக்கு இருக்க வேண்டும் என்று வைத்துவிட்டு வருவார்கள். அப்படிதான் பிஜேபி அதாவது மனசாட்சி உள்ள ஒரு கொள்கை. ஆனால், மொத்தமாக திருடிக் கொண்டு, வீட்டுக்காரனை அடுத்த நாள் சோத்துக்கே வழியில்லாமல் விட்டுப் போவது தான் திமுக மற்றும் அதிமுக .இது ஒரு கசப்பான உண்மை தான்.இதிலே அனுபவ அரசியலும், யதார்த்த உண்மை மக்களுக்கு தெரிவிக்கின்ற அரசியல் இது.

அதனால், மக்கள் வாக்களிக்கும் போது பணத்திற்காக வாக்களித்தால், எந்த உண்மையும் சிந்திப்பதில்லை. சிந்தித்தால் மட்டும் தான் அரசியல் நம் வாழ்க்கையில் எவ்வாறு கலந்துள்ளது ?என்பது புரிந்து கொள்ள முடியும். அதனால் ,மக்கள் இதை எல்லாம் புரியாமல் வாழ்வது, அவர்களின் முன்னேற்றம், சமூக முன்னேற்றம் ,ஏழை ,நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி.

 அதனால், மக்கள் தேர்வு செய்யும் போது வேட்பாளர்களின் தகுதி என்ன? என்பதை சிந்தித்து வாக்களித்தால் தான், அவர்களுக்கு நன்மை போய் சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *