இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் நாட்டிற்குள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய தேசவிரோத சக்திகளை களையெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

மே 11, 2025 • Makkal Adhikaram

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் தீவிரவாத சக்திகளுக்கு ஆதரவாக பேசிய அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசத்தின் பற்றாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அது அரசியல் கட்சி தலைவர்களாக இருக்கட்டும் முஸ்லிம் மத அமைப்புகளாக இருக்கட்டும் சாமானிய மக்களாக இருக்கட்டும், ஊடகங்களாக இருக்கட்டும் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் தான் நாட்டில் இந்தியாவின் ஒற்றுமை நிலை நிறுத்த முடியும் இல்லையென்றால் இந்த தேச விரோத சக்திகள் ஜாதியும், மதத்தையும், கொண்டு நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து கொண்டு இருப்பார்கள்.

மேலும், இவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் அல்லது அந்த நாட்டு தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டவர்களுக்கும் அல்லது இங்குள்ள முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்று ஆய்வு செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

ஏனென்றால், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் தர வேஷ்டி கட்டிக்கொண்டு மைக்கை பிடித்து பேசிக் கொண்டிருக்கிறான். அப்படிதான் ஒரு கிராமத்திலே தற்போது பார்த்தேன் திமுகவின் நான்காண்டு சாதனை என்று போஸ்டர் அடித்து மேடை போட்டு வைத்திருந்தது அங்கு ஒரு பத்து பேர் கட்சிக்காரர்கள் மழை வந்ததால் டீக்கடையில் ஒதுங்கி இருந்தார்கள் அப்போது என்னுடைய மக்கள் அதிகாரம் பத்திரிக்கையை கொடுத்து அவர்களிடம் பேசினேன். 

அவர்களுக்கு என்னதான் அரசியல் தெரிகிறது என்று அவர்களிடம் பேசியபோது அவர்கள் சொன்னது ஊரில் எவனாவது எங்களிடம் சண்டைக்கு வந்தால் நாங்கள் தலைவரிடம் போய் முறையிடுவோம். அதாவது அங்கு இருக்கக்கூடிய ஒன்றியம் அல்லது கிளைத் தலைவர்களிடம் முறையிடுவோம். அவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றால், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், அங்கே ஒரு பஞ்சாயத்து நடத்தி, இவர்களுக்கு ஆதரவாக அனுப்பி விடுவார்கள். இது எந்த ஆளுங்கட்சி வந்தாலும் இப்படித்தான் இருக்கும். 

இது ஒரு புறம் இருக்க, இவர்களுக்கு எல்லாம் எந்தவித தேசப்பற்றும், ஏன் ஒரு சமுதாய பற்று கூட கிடையாது. இவர்கள் எல்லாம் சமூகப் பணியாற்ற கட்சி கொடியை பிடித்துக் கொண்டு , கரை வேஷ்டி கட்டிக்கொண்டு வந்து விடுகிறார்கள். அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாது.அந்த கட்சிக் கூட்டத்திற்கு போனால், ஆயிரம், 500 மது பாட்டல், பிரியாணி கிடைக்கும் என்று போகின்றவர்கள் ஒரு பக்கம், இதைவிட கொடுமை கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், மோசடி பேர்வழிகள் இவர்கள் அத்தனை பேரும் கட்சி என்று நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 அதனால், படித்த இளைஞர்கள், அரசியல் தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் இந்த உண்மைகளை எல்லாம் படித்து தெரிந்து கொள்வது, இவர்களிடம் ஏமாறாமல் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ள கடமை என்பதை உணர்ந்து கொள்வோம். 

இவர்கள்தான் இப்படி என்றால், திருமாவளவன், சீமான், வைகோ, வேல்முருகன், ராகுல் காந்தி ,மம்தா பானர்ஜி,இவர்களெல்லாம் நேரடியாக பேசினால், ஸ்டாலின் மறைமுகமாக பேசுவார். ஓட்டுக்காக தேச விரோத சக்திகளுடன் மறைமுகமாக கைகோர்த்து கொள்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு ஆதரவாக இவர்கள் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் கட்சிக்கு தகுதியற்றவனை எல்லாம் தொண்டன் என்கிறார்கள். 

இந்த தொண்டன் நகரங்களிலும், கிராமங்களிலும் செய்கின்ற சேவை என்ன? இதுவாவது இந்த கட்சித் தலைவர்களுக்கு தெரியுமா? இவர்களை எல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கின்ற ஊடகங்களுக்கு தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான கோடி சலுகை, விளம்பரங்கள் மக்களுடைய வரிப்பணத்தில் மக்களை முட்டாளாக்கி, இவர்கள் பத்திரிக்கை வியாபாரம் நடத்திக் கொண்டிருப்பார்கள் .

அது மட்டுமல்ல, ஆளும் கட்சி சொல்லுகின்ற பொய்யை உண்மை என்று மக்களிடம் சொல்வது, மக்களை ஏமாற்றும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு தான் இந்த சலுகை, விளம்பரங்கள். அது மட்டுமல்ல, இவர்களுடைய அரசியல் கட்சியை மக்களிடம் நேர்மையானவர்களாக காட்டிக்கொள்வதற்கும் இந்த சலுகை, விளம்பரங்கள். எனவே,

இதற்கு நீதித்துறை தான் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தேச நலன் கருதி,சமூக நலன் கருதி, ஊழலுக்கு எதிராக போராடுகின்ற பத்திரிகைகளை விட, இவர்களுக்கு மக்களுடைய வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 அது மட்டுமல்ல,அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகளுக்கும், இந்த பஸ் பாஸ் சலுகை, விளம்பரங்கள் மத்திய மாநில அரசின் செய்தி துறை, சர்குலேஷன் என்ற ஒரு தவறான சட்டத்தை பயன்படுத்தி, பத்திரிகை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இது நாட்டு மக்களுக்கும் நாட்டின் நீதிபதிகளுக்கும் நீதித்துறை சார்ந்த வழக்கறிஞர்களுக்கும் தற்போது இந்த உண்மை புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மேலும், மக்கள் அதிகாரத்தில் பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு இந்த செய்தியை கொடுத்தும், அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. மேலும், சட்டத்தை நாடுவதை தவிர, எங்களைப் போன்ற சமூக நலன், தேச நலன் பத்திரிகைகளுக்கு வேறு வழி இல்லை. சுயநல அரசியல்வாதிகளிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. பத்திரிகைக்கே இந்த நிலைமை என்றால், நாட்டு மக்கள் நிலைமை என்ன? என்பதை நீங்களே சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படிப்பட்ட அரசியல்! தமிழ்நாட்டில் இருந்தால், நாட்டு மக்களுக்கு எப்படி உண்மை தெரியும்? உண்மையை சொல்லக்கூடிய பத்திரிகைகளுக்கு எல்லாம் சலுகை, விளம்பரங்கள் இல்லை. பொய்யை சொல்லக்கூடியவர்களுக்கு சலுகை, விளம்பரங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுங்கள் என்று செய்தித்துறை மறைமுகமான அரசியல் சட்டங்களை பயன்படுத்தி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

அதுவும் 50 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சட்டங்கள். இப்படி இருந்தால், பத்திரிக்கை சுதந்திரம் நாட்டில் இருக்காது. இவர்களுடைய சுதந்திரம் பறிக்கப்படும் போது தான், பத்திரிக்கை சுதந்திரத்தை பற்றி பேசுவார்கள். இவர்கள் பாதிக்கப்படும்போதுதான் நீதிமன்றத்தை நாடுவார்கள். சட்டத்தை இவர்களுக்கு தேவையென்றால் வைத்துக் கொள்வார்கள். தேவையில்லை என்றால், அதை தூக்கி பாக்கெட்டிலே போட்டுக் கொண்டு, ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.ஒன்றே, ஒன்று தெரியும் .எப்படியும் பேசத் தெரியும். அதுதான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கைவந்த கலை. இந்த கலை எல்லாம் எனக்கு தெரியும். ஆனால், மக்களுக்கு தெரியாது அல்லவா? இதுதான் தமிழ்நாட்டு அரசியல்.

இவர்களெல்லாம் இந்த நாட்டுக்கு பிரதம மந்திரியாக வந்தால் என்ன நிலைமை? இந்த மக்களை அண்ணிய தேசத்துக்கு விற்று விடுவார்கள். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. அரசியல் தெரியாத மக்கள் அதைப்பற்றி கண்டும் காணாமல் இருக்கிறார்கள். அரசியல் தெரிந்தவர்கள் சமூக ஊடகங்களிலும், மற்ற பொது இடங்களிலும் பேசி, காரி துப்புகிறார்கள். அவ்வளவு வேதனையாக உள்ளது.மேலும், 

மோடியும், பிஜேபியும் குறை சொல்லிக் கொண்டு இவர்கள் எல்லாம் இந்த தேசத்தின் தியாகிகள் போல் காட்டிக் கொண்டு, பேசிக்கொண்டு, அரசியல் தெரியாத முட்டாள்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பத்திரிகை என்றால் பொய்யை சொல்லி, மக்களிடம் வியாபாரம் செய்வது தான் பத்திரிகை.

இதே போல் தான் அடையாள அட்டை வைத்துக்கொண்டு, அது பத்திரிக்கை அடையாள அட்டையாக இருக்கட்டும், அரசு அடையாள அட்டையாக கூட இருக்கட்டும், இவர்களும் அதாவது ஒரு செய்தியை ஒழுங்காக எழுத தெரிந்தாலும் அல்லது கொடுக்கத் தெரியாவிட்டாலும், அவர்கள் எல்லாம் செய்தியாளர்கள். அந்த அடையாள அட்டையை, காட்டிக் கொண்டிருப்பார்கள். எப்படி ஒரு கூட்டம்,  அரசியலென்றால் என்ன? என்று கூட தெரியாத, ஒரு கூட்டம்! தன்னை அரசியல்வாதி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதோ, அதேபோல்தான் இவர்களும் பத்திரிக்கை என்றால் என்ன? என்று தெரியாமல் ,அடையாள அட்டையை காண்பித்துக் கொண்டு, தன்னை மிகப்பெரிய பத்திரிக்கை செய்தியாளராக காட்டிக் கொண்டிருப்பார்கள்.

 இவர்களுக்கு எல்லாம் நாட்டில் கடுமையான பத்திரிக்கை சட்டங்களை கொண்டு வந்து, இந்த பத்திரிகைகளையும், செய்தியாளர்களையும், வரைமுறைப்படுத்த வேண்டும்.மேலும், 

 பத்திரிக்கை என்றால் எப்படி இருக்க வேண்டும்? எது பத்திரிக்கை? ஜஸ்ட் ஒரு இன்ஃபர்மேஷன் கொடுக்கக்கூடிய செய்தி எல்லாம், நாட்டுக்கு முக்கியமான மிகப்பெரிய செய்தியாக பெரிய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பல சிறிய பத்திரிகைகளும் இன்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .அதாவது ஒரு இடத்தில் சம்பவம் நடக்கிறது .அந்த சம்பவத்தை பற்றி அங்கே, அது நடந்தது, இது நடந்தது,போனது, வந்தது அவ்வளவுதான் இருக்கும்.

 அது Just information அது ஒரு தகவல் தான் .ஆனால், செய்தி அதுவல்ல.இதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் நான் தினகரன் ரிப்போர்ட்டர் தினத்தந்தி ரிப்போர்ட்டர் மாலைமுரசு ரிப்போர்ட்டர் மாலைமலர் ரிப்போர்ட்டர் தினமலர் ரிப்போர்ட்டர் என்று இந்த லேபிளை காண்பித்துக் கொள்வது பத்திரிக்கை தெரியாத மக்களிடம் தான்.தெரிந்தவர்களிடம் பேச முடியாது. 

உண்மையான விளக்கத்துடன் கூடிய தகவல்தான் செய்திகள் அவர்கள் தான் செய்தியாளர்கள் .இதில் அரசியல் கட்சிக்காக சில ஊடகங்களை வைத்துக்கொண்டு, தொலைக்காட்சிகளை வைத்துக்கொண்டு நானும் செய்தியாளர் என்கிறார்கள். அதேபோல் தான் கட்சி என்ற ஒரு அடையாள அட்டை வைத்துக் கொண்டு, உடம்பு கனமாக காட்டிக்கொண்டு, மீசையை காட்டிக் கொண்டு, ஒரு தாதாவாக இருப்பவர்கள் எப்படி அரசியல்வாதி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ, அதே போல் தான், இவர்களும் பத்திரிகை என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .

மேலும், உண்மையாக மக்களுக்கு உழைக்கக்கூடிய அரசியல்வாதிக்கு இது எல்லாம் தேவையில்லை.தற்போது மக்கள் எதிர்பார்ப்பது நேர்மையான அரசியல்வாதிகள், மக்களுக்காக உழைக்கக்கூடிய அரசியல்வாதிகள், உண்மையை எழுதக்கூடிய பத்திரிகைகள் .இதுதான் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.

எனவே, அரசியல் கட்சி தலைவன் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு தேசப்பற்று இல்லாமல் இருந்தால், நாட்டுக்கு ஆபத்து. அதே போல், தேசநலன், சமூக நலன், இன்றி இருக்கக்கூடிய பத்திரிகை, தொலைக்காட்சிகள் மற்றும் செய்தியாளர்கள், சமூக ஊடகங்கள் ,நாட்டுக்கு ஆபத்து. அதனால், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க இந்த தேசத்தின் பாதுகாப்புக்கு ,தேசிய பாதுகாப்பு சட்டம் மிக, மிக அவசியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *