
டாஸ்மாக்கில் நடைபெற்றுள்ள ஊழல், குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க கூடாது என்று தடை கேட்டார்கள்.சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று சொல்லிவிட்டது.தடை கொடுக்கவில்லை.

ஆனால், உச்சநீதிமன்றம் நாட்டில் ஒரு ஊழலை விசாரிப்பதற்கு கூட, தடை செய்கிறது என்றால், உச்ச நீதிமன்றம் அரசியல் செய்கிறதா? இல்லை நீதியை காப்பாற்றுகிறதா? என்பதுதான் தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு செய்தி.
மேலும்,தமிழக மக்களுக்கு டாஸ்மாக் ஊழல் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது என்பது பாமர மக்களுக்கு கூட நன்றாக தெரிகிறது.அப்படி இருக்கும்போது, உச்ச நீதிமன்றத்தில் இந்த ஊழலை விசாரிக்க தடை கொடுத்துள்ளது இது நீதிமன்றமா? இல்லை அரசியல் மன்றமா? என்று தெரியவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு தவறானது என்று உச்ச நீதிமன்றத்தில் கொடுத்து விட்டார்களா? இல்லை,அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது. அதற்கு எந்த விதமான அதிகாரம் இல்லை எஙன்று சொல்கிறார்களா ? சரி அப்படியே இருந்தாலும்,ஊழல் நடந்துள்ளது என்பது அமலாக்கத்துறை கண்டுபிடித்த பிறகும், அதற்கு ஏன் தடை விதிக்கிறார்கள்.

குற்றவாளி எப்போதுமே தன் குற்றத்தை ஒப்புக்கொண்டது கிடையாது. திருடன் எப்போதுமே தன்னுடைய திருட்டை அவன் ஒப்புக்கொண்டது கிடையாது. அப்படி இருக்கும்போது, தமிழக அரசு பிஜேபி எங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பழி வாங்குகிறது.என்று சொன்னால், அதை உச்ச நீதிமன்றடம் எப்படி ஏற்றுக்கொள்ளலாம்?

கூலிக்கு மாரடைக்கிற சோசியல் மீடியா பேச்சாளர்கள், தொலைக்காட்சி,பத்திரிகைகள்
இவர்கள் வேண்டுமானால் எப்படியும் பேசிவிட்டு போகலாம். ஏனென்றால்,வாங்கிய கூலிக்கு கூவி விட்டு தான் போக வேண்டும்.வேறு வழி இல்லை. ஆனால், உச்ச நீதிமன்றம் எப்படி இதற்கு தடை உத்தரவு கொடுத்தது? இதுதான் பெரும்பாலான தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது. அப்படி என்றால் நாட்டில் ஊழலை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கிறார்களா? அல்லது அரசியல்வாதிகள் அரசியலமைப்பு சட்டத்தை தங்களுக்கு ஏற்றவாறு திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்களா?

இது 2ஜியை விட மிகப்பெரிய ஊழல், டாஸ்மாக் ஊழல் என்று அரசியல் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். இப்படி எல்லாம் நீதிமன்றங்களில் இருந்தால் சாமானிய மக்கள், நீதிமன்றங்களை நம்பி தான் இருக்கிறார்கள். ஆனால், நீதி சாமயன்ய மக்களுக்கு கிடைக்குமா? என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது?