உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினால்! தமிழகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படாது என மத்திய செய்தி துறை அமைச்சர் எல். முருகன் -இவர் செய்தி துறையில் செய்த மாற்றம் என்ன ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram

எல்.முருகன் போன ஐந்தாண்டும் மத்திய செய்தித்துறை அமைச்சர். இப்போதும் அதே செய்தித் துறை அமைச்சர் . இவர் செய்தித் துறையில் செய்த மாற்றம் என்ன? ஏதாவது ஒன்று எல் . முருகன் சொல்ல முடியுமா? எல். முருகனுக்கு எத்தனையோ முறை இமெயில் மூலம் செய்தி துறை பற்றிய அவலங்கள் அனுப்பப்பட்டுள்ளது. அந்த செய்தி துறையில் என்ன மாற்றம் கொண்டு வர வேண்டும்? அதுவாவது சொன்ன விஷயங்கள் முருகனுக்கு தெரியுமா? 

ஏதோ இந்த மந்திரி பதவிக்கெல்லாம் அர்த்தம் தெரியாமல் பிஜேபியில் மந்திரிகள் ஆக்குகிறார்கள் .அதை நினைத்து வெட்கப்பட வேண்டி இருக்கிறது. ஒரு மந்திரி என்றால் எதற்கு? இவர்கள் சொத்து சம்பாதித்துக் கொள்ளவா? பத்திரிக்கை துறையில் பல ஆண்டுகளாக இருக்கின்ற இந்த பிரச்சனை என்று தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேல் எழுதி வரும் ஒரே பத்திரிகை மக்கள் அதிகாரம். இதைப்பற்றி பத்திரிக்கை துறையில் பணியாற்றக்கூடிய ஐஏஎஸ் அதிகாரிகள் நன்கு புரிந்து இருக்கிறார்கள். உண்மை என்று ஏற்றுக் கொள்கிறார்கள். இதே மத்தியில் கூட சில அதிகாரிகளிடம் பேசி இருக்கிறேன். அவர்களும் இதை மாற்றம் செய்வது நல்லது தான் என்று தெரிவிக்கிறார்கள். 

ஆனால், இவர் வந்து இதுவரைக்கும் என்ன மாற்றம் செய்து துறையில் செய்திருக்கிறார்? அதை உதயநிதி ஸ்டாலின் செய்யாமல் இருக்கப் போகிறார்? தமிழ்நாட்டில் மோடி ஒரு மந்திரி பதவியை முருகனுக்கு கொடுத்து, வீணடித்து விட்டார். பதவி என்பது தகுதியின் அடிப்படையில் கொடுக்க வேண்டும். இது இட ஒதுக்கீடு போல் மந்திரி பதவி கொடுப்பது மக்களை முட்டாளாக்கும் வேலை. இதற்கு முன்னால் அவரவர் சமூகப் பணி என்னென்ன செய்திருக்கிறார்கள்? இவர் ஜாதிக்கு செய்துக் கொள்வது எல்லாம் சமூகப் பணி அல்ல.

 மேலும், முருகன் ஆரம்ப காலகட்டத்தில் அவருடைய வாழ்க்கையைப் பற்றி தெரிந்தவர்கள் .தெரிவித்து இருக்கிறார்கள் .இப்போது இவருடைய சொத்து மதிப்பு சுமார் நூற்றுக்கணக்கான கோடி இருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள். இது அந்த சமுதாயத்தில் இருப்பவர்களே தெரிவிக்கும் தகவல். மோடி ஏமாந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர் மீது மதிப்பு மரியாதை வைத்துள்ள எத்தனையோ கோடி மக்களில் நானும் ஒருவன். பிஜேபி இவர்களால் தமிழ்நாட்டில் வளர்க்க முடியாது .மக்களை சந்திக்கவும், பிரச்சனைகளை கேட்கவும் இவர்கள் யாரும் முன் வரவில்லை . மேலும்,

 நான் ஒரு பத்திரிகையாளன். எங்களுக்கு இந்த நிலைமை என்றால், மக்களுக்கு என்ன நிலைமை? என்னவென்று மக்கள் தான் சிந்திப்பார்கள். இதை பிரதமர் மோடியும் சிந்திக்கட்டும் .ஏனென்றால், இவரை மத்திய செய்தி துறை அமைச்சராக நியமித்து, இதுவரை செய்து துறையில் செய்த மாற்றம் என்ன? அதைப் பற்றியாவது முழுமையாக தெரியுமா? என்பது தெரியவில்லை. எனவே, பிரதமர் மோடிக்கு இந்த செய்தியை உளவுத்துறை அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் .மேலும், 

 தமிழ்நாட்டில் முருகன் போன்ற ஆட்களுக்கு மந்திரி பதவி கொடுத்தது வீணான ஒன்று. இவர் போய் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கினால், தமிழ்நாட்டில் குறிப்பிடுத்தக்க மாற்றம் ஏற்படாது என்று தெரிவிக்கிறார். இவருக்கு கொடுத்த மந்திரி பதவியில், இவர் என்ன குறிப்பிடத்தக்க மாற்றம் செய்துள்ளார்? என்பதை தெரிவித்து விட்டு, பிறகு உதயநிதி ஸ்டாலினை பற்றி சொல்லட்டும், ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள் எங்களைப் போன்ற சமூகநலன் பத்திரிகையாளர்கள்.மேலும் இந்த பிரச்சனைகள் சம்பந்தமாக லீகல் நோட்டீஸ் மத்திய செய்தி துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *