ஜூலை 26, 2024 • Makkal Adhikaram
முதல்வர் ஸ்டாலின் வியாபார ஊடகங்களிலும், சுயநல ஊடகங்களிலும் பேசிவிட்டு போவதில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. ஒரு முதல்வர் என்றால் மக்களை எந்த நேரத்திலும் அவர்களுடைய குறைகள் என்ன என்று கேட்க வேண்டும்? இவரை எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களே, எங்கள் குறைகளை சொல்ல முடியவில்லை. செய்திகளை போட்டு கூட சொல்லிப் பார்க்கிறோம். அப்போது கூட அந்த செய்தியாவது அவருக்கு போய் சேருகிறதா? என்பதும் தெரியவில்லை.
மேலும், பத்திரிக்கை துறையை மதித்த தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்கள் எம் ஜி ஆர்,கருணாநிதி, ஜெயலலிதா இவர்கள் மூவரைத் தவிர, வேறு எந்த முதலமைச்சரும் தமிழ்நாட்டில் இல்லை. ஏனென்றால், இதற்கு ஒரு உண்மையான விளக்கங்களை கூட என்னால் தர முடியும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம், திருவள்ளூர் மாவட்டத்தில் வீரமுழக்கம் என்ற ஒரு சிறிய பத்திரிக்கை தான் ,அந்த பத்திரிக்கையில் அதில் வெளிவந்த செய்தியை வைத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிறிய பத்திரிக்கை, பெரிய பத்திரிக்கை என்றெல்லாம் பார்க்கவில்லை. உண்மை எந்த பத்திரிக்கையில் இருந்தது? என்பதை மட்டும் பார்த்தார்கள்.உடனே அமைச்சர் ரமணாவை பதவியை விட்டு தூக்கினார்கள். அவர்களுடைய தைரியம், நிர்வாக திறமை, அதில் பாதியாவது ஸ்டாலினுக்கு வருமா? என்பது தெரியவில்லை .
பதவி ,அதிகாரம் என்பது அது ஒரு அதிர்ஷ்ட யோகம் .அந்த யோகம் இருக்கும் வரை, எல்லோருக்கும் இருக்கும். ஆனால் போன பிறகு, இப்போது ஜெயலலிதா எம்ஜிஆர் கருணாநிதி போன்ற முதலமைச்சர்களை நினைக்கின்றார் போல் ஸ்டாலினை நினைக்க முடியுமா ?என்பது தெரியவில்லை .மேலும்,
யோகி ஆதித்யநாத் இந்தியாவுக்கே ஒரு முன் உதாரணமான முதலமைச்சராக அவரைப் பார்க்கிறேன். அவரிடம் முதல்வர் என்ற எந்த ஒரு பந்தாவோ, அதிகாரமோ ,ஆணவமோ, தெரியவில்லை . சாமானிய மக்களை போல் மக்களோடு மக்களாக நின்று மக்களின் குறைகளை கேட்கும் முதல்வர் தமிழ்நாட்டுக்கு எப்போது ஒருவர் வரப்போகிறார்? என்பதுதான் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.அந்த வகையில், உத்தரப்பிரதேச மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
மேலும்,இப்படியெல்லாம் நாட்டில் முதலமைச்சர்கள் இருக்கிறார்களா ?என்பது நம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது . இந்த நல்ல விஷயங்களை எந்த பெரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ, இன்னும் படித்தவர்கள் கூட அப்படித்தான் இருக்கிறார்கள். இந்த உண்மையை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க மாட்டார்கள்.தவிர,
மக்களுக்கு அரசியல் புரிதல் இல்லை .தேர்தல் வந்தால் ,ஆடு, மாடுகளை போல் ஆயிரம், ஐநூறுக்கு கையேந்தி நிற்கின்றது. ஊரில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருப்பவர்களை எல்லாம் வெள்ளை ஆடைகளை உடுத்தி ,அரசியல் கட்சி என்றும், அவர்களில் குடிகாரர்களையும், 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்களையும், அரசியல் கட்சிக் கூட்டத்தில் கூட்டத்தைக் காட்டி ,அந்தக் கூட்டத்தை வியாபார ஊடகங்களில் காட்டி, இதுதான் அரசியல் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இது வேஷம் போடும் அரசியல் .சொல்லப்போனால் போலி அரசியல்.
மக்களுக்கு அரசியல் என்றால் என்ன ?என்று தெரியாமல் அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே அழித்துக் கொள்கிறார்கள் .அதனால் ,தமிழ்நாட்டில் போலித்தனமான வாழ்க்கை, போலித்தனமான பத்திரிகைகள், போலித்தனமான சினிமா கலாச்சாரம், போலி அரசியல் கலாச்சாரம், இவையெல்லாம் மக்களை ஒட்டுமொத்தமாக தமிழகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும் .அரசியல் என்பது மக்களுக்கானது என்று மக்கள் நினைக்க வேண்டும். அது கட்சிக்காரர்களுக்கு சொந்தம் என்று மக்கள் காசு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, ஜாதியை வைத்து, இங்கே ஜாதியை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான ஜாதி பற்றாளர்கள் அவர்கள் போலி வேஷம் போடுவதில்லை. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை. இங்கே ஜாதி என்பது ஏழைக்கும், பணக்காரனுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வாக தான் இருக்கிறதே ஒழிய வேறு எதுவும் இல்லை. அதனால், மக்கள் தொடர்ந்து உண்மை தெரியாமல், போலிகளை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். குடிகாரனுக்கு எதுவும் தெரியாது. அவனுக்கு தேவை ஐந்து மணி ஆனால் டாஸ்மாக் பாட்டில் , அவ்வளவு தான். அவன் வாழ்க்கை. ஆனால், மற்றவர் எல்லாம் அப்படி இருக்க முடியாது.
எனவே, இளைஞர்கள் ஆவது சிந்தியுங்கள். அரசியலைப் பற்றி புரிதல் இல்லை என்றால், உங்கள் எதிர்காலம் நிச்சயம் கேள்விக்குறியாகும். சினிமா மற்றும் சீரியலை பார்த்துவிட்டோ அல்லது புத்தகத்தில் படித்ததை வைத்தோ அரசியலை புரிந்து கொள்ள முடியாது மேலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ,அப்பா, அம்மா உழைப்பில் வாழ்ந்து கொண்டோ, இதையெல்லாம் ரசித்துக் கொண்டிருக்கலாம் .ஆனால், உங்களுடைய எதிர்காலம் உங்களுடைய உழைப்பில் இருக்கிறது .மேலும்,
நாட்டில் ஏமாற்றுபவர்கள் அதிகமாகி விட்டார்கள். எதற்கெல்லாம் மக்களை ஏமாற்றலாம்? என்று கூட சிந்திக்க முடியாமல் ஏமாற்றுவது தொடர்கிறது.உழைப்பு என்பது கேவலமாகி, ஏமாற்றுவது ,சட்டத்தை ஏமாற்றுவது, சமூகத்தை ஏமாற்றுவது, எல்லாம் இப்போது அது திறமையாகி விட்டது.யாரை நம்பி வாழ்வது என்ற கேள்வி? கூட சில நேரங்களில் இருக்கிறது என்று என்னிடமே பல தெரிவிக்கிறார்கள் .
அதனால், அரசியல் ஏமாற்றமாக மக்களுக்கு இருந்தால், அது எல்லாவற்றிலும் சங்கிலி தொடர் போல தொடர்கிறது. மக்கள் உண்மையை நோக்கி பயணித்தால் மட்டுமே, போலிகள் இடமிருந்து ஏமாறாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் . ஆட்சி நிர்வாகம் இந்த மக்களுக்காக இருக்கிறதா? என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது? மேலும்,ஆட்சியாளர்களின் பொய்களையும் ,அரசியல் கட்சியினர் பொய்களையும், நம்பி வாழப் பழகிக் கொண்ட மக்களுக்கு இதன் அர்த்தம் புரியாது.
மேலும், வாட்ஸ் அப்பில் சமூக ஊடகங்களில் வருகின்ற சின்ன, சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக்கிக் கொண்டு, அதைப்பற்றி தேவையற்ற கருத்துக்களை பரப்பிக் கொண்டு ,வாழ்கின்ற கூட்டத்திற்கு இதன் அர்த்தம் புரியாது.இப்படிப்பட்ட மக்களுக்கு தெய்வம் புரிய வைத்தால் மட்டும் தான் இந்த உண்மை புரியும் அதுவரை நீங்கள் புரிந்து கொள்வது கஷ்டம் தான்
மேலும் ,இப்படிப்பட்ட காலகட்டத்தில் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு அரசியல் தலைவர் மற்றும் ஒரு மாநில முதல்வர் அரசியலில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதற்கு மேலாக யோகி ஆதித்யநாத் மக்கள் சேவைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் ,உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள் .