
நாட்டில் பிரதமர் முதல் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் வரை ஊழல் செய்து சிறை செல்ல நேரிட்டால் அவர்களுடைய பதவி 30 நாளில் பதவி! தானாகவே காலி. இதற்கு மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது .

இந்த சட்டம் நாட்டில் முக்கிய சட்டமான 30 நாள் சிறையில் இருந்தால் ,அமைச்சர்களின் பதவி தானாகவே பறிபோகும். ஒருவேளை அவர் ஜாமினில் வெளி வந்தால், பதவியில் தொடரலாம்.
தற்போது மத்திய அரசு இந்த சட்டத்தை வந்துள்ளது .அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும்,எதிர் கட்சிகளின் எதிர்ப்பு எங்களை பழிவாங்கும் அரசியல் சட்டம் என்று அவர்கள் கருத்து.

ஆனால், ஆளும் கட்சியின் கருத்து என்னவென்றால், தற்போது பல அமைச்சர்கள் சிறைக்கு சென்றிருக்கிறார்கள். பதவியும் விலகவில்லை .சிறையில் இருப்பவர்கள் அமைச்சராக தொடர்ந்து இருக்கிறார்கள் .அப்படி இருந்து கொண்டு அமைச்சர் பதவியில் பணியாற்றலாமா? இது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றுதான்.
மேலும்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி சிறையில் இருந்து கொண்டு நான் சிறையிலே பணியாற்றுகிறேன் என்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் எங்களை பழிவாங்கி விடுவீர்கள் என்று எதிர்க்கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டு தவறானது.
தவிர, ஊழல் செய்யாதவர்கள் எப்படி அவர்களை குற்றவாளியாக தண்டிக்க முடியும்?தவறு செய்யாமல் எப்படி பழி வாங்க முடியும்? எதிர்க்கட்சிகள் ஊழல் செய்வதை ஒத்துக் கொள்கிறார்களா? இதற்கு இவ்வளவு பெரிய போராட்டமா?