எத்தனையோ தியாகிகள் நாட்டின் விடுதலைக்காக ஜெயிலுக்கு போனதை பெருமையாக பேசுவதில்லை.ஆனால்,அரசியல் கட்சிகளில் தற்போதுள்ள தலைவர்களும்,அவர்களது கட்சியினரும் ஜெயிலுக்கு போய் வந்ததை கார்ப்பரேட் ஊடக மைக்குகளில் பெருமையாக பேசிக் கொள்வது ஏன்?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டின் விடுதலைக்காக செக்கிழுத்த சிதம்பரனார் 40 ஆண்டுகள் சிறையில் பட்ட கொடுமை வேறு யாரும் அனுபவித்திருக்க முடியாது. அப்படிப்பட்டவர் சிறையிலிருந்து வெளிவரும் போது அவரை வரவேற்க இரண்டு பேர்கள்தான் அப்போதே வந்திருக்கிறார்கள். அவர் சிலையிலிருந்து வெளிவரும் போது அவருக்கு சால்வை போர்த்தி வரவேற்கவும்,பட்டாசு வெடித்து வரவேற்கவும் ஆட்கள் இல்லை.

ஆனால், இப்போதுள்ள ஊழல் அரசியல்வாதிகள் ஜெயிலுக்குப் போய் வெளியில் வரும்போது ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் என்ற சொல்லிக் கொள்பவர்கள் சால்வை போர்த்து பட்டாசு வெடித்து செந்தில் பாலாஜிக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.

மேலும், இவர்கள் ஜெயிலுக்கு போய் வந்ததை அரசியல் தெரியாத மக்களிடம் மிசாவில் கைது செய்யப்பட்டோம் என்று சேகர் பாபு பெருமையாக பேசிக் கொள்கிறார். இவர் கைதாக வில்லையாம் ஆனால் இவர் தலைவர் ஸ்டாலின் கைதாகி இருக்கிறார் என்கிறார். இது எல்லாம் அரசியல் தெரியாத மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் அரசியல் அறிந்தவர்கள் சிரிக்கிறார்கள். இதையும் இந்த ஊடகங்கள் காட்டிக் கொண்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் முட்டாள்களாக இருந்தால் தான் இவர்கள் அவர்களை வைத்து சலுகை,விளம்பரங்களை வாங்கி பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பார்கள்.


இதைவிட ஒரு கொடுமை பாட்டாளி மக்கள் கட்சிகளிலும் நாங்கள் ஜெயிலுக்கு போய் வந்தோம் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவிலும் நாங்கள் ஜெயிலுக்கு போய் வந்தோம் என்பதை பெருமையாக பேசிக் கொள்கிறார்கள். இவர்கள் ஜெயிலுக்கு போய் வந்ததில் என்ன பெருமை இருக்கிறது? இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக ஜெயிலுக்கு போய் வந்தார்களா? அல்லது ஊழலை எதிர்த்து போராடி அதை தடுப்பதற்காக ஜெயிலுக்கு போனார்களா? எதற்கு போனார்கள் ?என்பதற்கு அர்த்தம் தெரியாமல் இருக்கின்ற அரசியல் கூட்டத்திற்கு இனியாவது இந்த உண்மையை தெரிந்து கொண்டு மக்களை முட்டாள் ஆக்காமல் இருப்பார்களா?

கட்சிக்கு அர்த்தம் தெரியாமல் அரசியலுக்கு அர்த்தம் தெரியாமல் பட்டாசு வெடித்து, டான்ஸ் ஆடிக் கொண்டு இருந்தால்,,அதை அரசியல் தெரியாத முட்டாள்களிடம் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் காட்டிக் கொண்டே இருப்பார்கள்.

நீ ஜெயிலுக்கு போனால் என்ன?போகாவிட்டால் என்ன? அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரிந்து, இந்த சமூகத்திற்கு என்ன நன்மை செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து பேசி செயல்பட்டாலே போதும்.

அதை விட்டு விட்டு அரசியலில் கொள்ளை அடித்து விட்டு, ஊழல் செய்துவிட்டு, ரவுடி தனம் செய்துவிட்டு, கொலை செய்துவிட்டு, மோசடி செய்து விட்டு, ஜெயிலுக்கு போய் வந்ததெல்லாம் பெருமையா? இதுதான் உங்கள் ஜெயிலின் பெருமையா? யாரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?

இது எல்லாம் அரசியல் தெரியாத மக்களிடம் பேசுவதால் அவர்களுக்கு புரியாது. புரிந்தவர்களிடம் நீங்கள் பேச முடியாது.மேலும் ,வடிவேல் காமெடி போல, இவர்கள் நானும் ரவுடி, நானும் ஜெயிலுக்கு போய் வந்தேன் என்பார்கள். அதுபோல இவர்கள் ஜெயிலுக்கு போனது, வந்தது ,எதற்கும் அர்த்தம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *