
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருவர் மட்டுமே சினிமாவில் போட்டியிருந்தது. எம்ஜிஆருக்கும் ரசிகர்கள், சிவாஜிக்கும் ரசிகர்கள் ,இரண்டு பேருக்குமே படித்தவர்களும் இருந்தார்கள் ,படிக்காதவர்களும் இருந்தார்கள்.
இரண்டு பேருடைய அழகு இது வரை அதற்கு இணையான நடிகர்கள் இல்லை. எம்ஜிஆரின் முகம் நேரில் பார்த்தவர்கள் சொல்வார்கள் ,பலா பழம் சுலை எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது என்று சொல்லி கேள்விப்பட்டேன். அப்போதெல்லாம் இப்படி முண்டியடித்து சினிமா நடிகர்களை பார்க்க ஓட மாட்டார்கள். நண்பர் ஒருவர் (அதிகாரி) நேற்று என்னிடம் தொலைபேசியில் பேசுகிறார். மன்னார்குடியில் எம் ஜி ஆர் வருவதாக அறிவிப்பு 1980 களில் அவருடைய ரசிகர்கள் தெரு, தெருவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

எம்ஜிஆர் இத்தனை மணிக்கு வருகிறார் என்று சொன்னவுடன் கூட்டம் கூடியது. ஆனால், சொன்ன நேரத்துக்கு எம்ஜிஆர் வரவில்லை. இதே போல் வருகிறார் வருகிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சொன்ன நேரத்துக்கு எம்ஜிஆர் வராததால் கூட்டம் கலைந்து விட்டது. பிறகு இருக்கின்ற குறைவான கூட்டத்தில் எம்ஜிஆர் பேசிவிட்டு போயிருக்கிறார். இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால்? அந்த காலத்திலும் சினிமா மோகம் இருந்திருக்கிறது.

ஆனால் ,மக்கள் சோறு ,தண்ணி இல்லாமல் ,காத்துக் கிடக்கவில்லை கைக் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்து, அவரைப் பார்க்க யாரும் நிற்கவில்லை. ஆனால், இப்போது கை குழந்தைகளை கூட தூக்கிக்கொண்டு, கர்ப்பிணி பெண்களை அழைத்துக் கொண்டு, வயதானவர்கள் முதல் வந்திருக்கிறார்கள் . மேலும்,

எம்ஜிஆரின் அழகில் விஜய் பத்தில் ஒரு பங்கு கூட இருக்க மாட்டார். அந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கும் போல தோன்றும் என்று என்னுடைய சீனியர் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் எம்ஜிஆர் பத்திரிக்கையில் வேலை பார்த்த போது என்னிடம் தெரிவித்திருக்கிறார்.
இப்படிப்பட்டவர்களே கூட்டத்திற்கு நேரத்திற்கு வரவில்லை என்றால் ,மக்கள் வீட்டுக்கு சென்று விட்டார்கள். ஆனால், விஜய் 12 மணிக்கு வருகிறேன் என்று சொல்லி,மாலை ஆறு மணிக்கு வந்திருக்கிறார்.

இந்த மக்கள் சோறு ,தண்ணி இல்லாமல் ,படித்தவர்களும், படிக்காதவர்களும் காத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறது. என்றால் ,இவர்களுடைய மனநிலை என்ன? அந்த காலத்து சினிமா !இந்த காலத்து சினிமாவோடு ஒப்பிடும்போது, அதில் ஒரு சதவீதம் கூட தேறாது.
அதனுடைய கலை ,பண்பாடு, கலாச்சாரம், பாட்டு, இசை , காலத்தால் அழியாத கலை அம்சம் பெற்றுள்ளது.அது எல்லாவற்றிலும் முதன்மை பெற்று இருந்தது .எல்லா தரப்பு மக்களும் ,சினிமாவை நேசித்தார்கள், பார்த்தார்கள். அது கலையாகவே இருந்தது.
ஆனால், இந்த காலத்து சினிமா அதனுடன் ஒப்பிடவே முடியாது. இருப்பினும், இந்த சினிமா மோகம், இந்த மக்களிடம் ,அவர்களுடைய உயிரை கேவலமாக மதித்து, வாழ தெரியாமல், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் அர்த்தம். மேலும்,

கூட்டத்தில் 50 பேர் அளவுக்கு இறக்கும் மனநிலைக்கு சினிமா பைத்தியமாக ,இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்பதுதான் இந்தக் கூட்ட நெரிசலில் காத்துக் கொண்டிருந்தது எடுத்துக்காட்டுகிறது.
தவிர, இந்த இளைஞர்கள், இவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை சினிமாவில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையை சினிமாவில் தேடுபவர்கள், வாழ்க்கையை தொலைத்து விட்டு கனவும் , கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். மேலும் ,இதில்

படித்த இளைஞர்களும் ,இருக்கலாம் படிக்காதவர்களும் இருக்கலாம், இவர்களெல்லாம் இவர்களுடைய வாழ்க்கையை ,எதிர்கால கனவுகளை, தங்களுடைய உழைப்பில் முன்னேற நினைக்காமல் ,விஜய்க்கு ரசிகர் மன்றம் அமைத்து, கொடி பிடித்து, கோஷம் போட்டு, அதில் வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இது இவர்களுடைய மிக மோசமான ,முட்டாள்தனமான, மனநிலைக்கு வந்து விட்டார்கள். அதாவது, இவர்கள் சோம்பேறி ஆகி விட்டார்கள். உழைப்பைப் பார்த்து பயப்படும் கோழைகள் ஆகி விட்டார்கள் என்பதுதான் இதிலிருந்து தெரியவரும் உண்மை.
உழைப்பில்லாமல் அரசியலில் கொடி பிடித்து கோஷம் போட்டு, ஒரு கட்சிக்கு அடிமை வேலை செய்து கொண்டு, பிறகு பதவிக்கு வந்தவுடன் மக்களை ஏறி மிதித்துக் கொண்டிருப்பார்கள்.

அதே நிலையை தான் விஜய் ரசிகர்கள் ,விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டால், நாமம் இதே போல் வந்துவிடலாம் என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில், மன நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்களா? அதனுடைய விளைவு இன்று சுமார் 50 பேர் இறந்திருக்கிறார்கள்.
இதிலும், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் அரசியல் நடத்தி கொண்டிருக்கிறது. அது ஒவ்வொரு கோணத்தில், பயணித்துக் கொண்டிருக்கிறது. இது எதனால்? இந்த மக்களின் முட்டாள்தனத்தால், இன்று எவ்வளவு பெரிய சட்டப் பிரச்சனைகள் ஏற்பட்டு, மத்திய, மாநில அரசின் விசாரணைகள் போய்க்கொண்டிருக்கிறது? இது தேவை தானா?இது அத்தனைக்கும் மக்களின் முட்டாள்தனம். சினிமா மோகத்தின் முட்டாள் தனம். மேலும்,

இந்த செய்தி அவர்களுக்கு ஒரு கசப்பு தன்மையான மருந்தாக கூட இருக்கும். ஏனென்றால், இந்த தவறுகளை சுட்டிக்காட்டும் போது ,அவர மனசில் ஒரு வலி இருக்கலாம். இந்த வலி நீங்கள் அந்த நேரத்தில் உங்கள் உயிரை விடும் போது எவ்வளவு வலி? வேதனை? என்பதை பத்திரிக்கையில் இச் செய்தி படிக்கும் போது, உணர முடியாத ஒரு சம்பவம், நடந்த இடத்தில், உயிருக்காக எப்படி போராடி இருப்பார்கள்? மேலும் ,

அரசின் மருத்துவர் ரிப்போர்ட் ,மூச்சு திணறி, விலா எலும்புகள் உடைக்கப்பட்டு ,உயிரிழந்திருக்கிறார்கள் அந்த நேரத்தின் நிமிடங்கள் உங்களுடைய வலி தாங்க முடியாத வேதனையுடன் உயிர் பிரிந்து இருக்கிறது. அது எவ்வளவு கொடுமையானது?
மக்கள் சிந்தித்து இருந்தால் ,இந்தக் கூட்டத்தில் இருந்து நீங்கள் எப்போதோ ,வெளிவந்திருப்பீர்கள். சினிமாவும், நிஜ வாழ்க்கையும் ஒன்றல்ல ,இது வேறு, அது வேறு. அதனால்,

இனிமேலாவது எந்த நடிகர்களுக்கு ஆவது, நீங்கள் உயிரை விட்டால், உங்களை விட முட்டாள்கள் உலகத்தில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். தமிழ்நாடு மிகக் கேவலமாக இருக்கிறது என்று ,மற்ற மாநிலங்கள் இப்போதே பேச ஆரம்பித்து விட்டது.
நீங்கள் உழைக்காமல் ,அதற்காக அந்த மோகத்தில் நடிகர்களை பார்க்க குடும்பத்தோடு, வந்து இறப்பது தான் முட்டாள்தனம். இதிலிருந்து, தமிழ்நாட்டு மக்கள் உங்களை திருத்திக் கொண்டு வெளியில் வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.
உழைப்பை கேவலமாக்கி ,சினிமாவையும் ,செல்போனையும், பார்த்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், எதிர்காலம் உங்களுக்கு மிக மோசமானதாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் சரி.