எல் முருகன் ராஜினாமா செய்தி வந்தபோதே, அது பறிப்பாக இருக்கும் என்று மக்கள் அதிகாரத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அது உண்மையே !

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

எல். முருகனுக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தயவால், பிஜேபியில் என்.சி.எஸ்.டி (NCST) தேசிய பட்டியல் இன ஆணையத்தின் வைஸ் சேர்மன் (vice chairman) ஆக முதலில் பொறுப்பு வகித்தார்.

அதிலேயே நன்றாக சம்பாதித்தார் என்ற தகவல் எங்களுக்கு வந்தது. அதன் பிறகு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சொன்னால் மோடி தட்ட முடியாது என்பதை உணர்ந்த முருகன் அவரை பிடித்துக் கொண்டார். இவருக்கு மாநில தலைவராக தமிழ்நாட்டில் நியமனம் செய்கிறார்கள்.

பிறகு இவர் தமிழ்நாட்டின் பிஜேபி மாநில தலைவராக பொறுப்பேற்று பணியாற்றுகிறார். அப்போதும், இவருடைய அரசியல் குறுகிய வட்டமாக தான் இருந்துள்ளது.

பெரும்பாலும் தமிழ்நாட்டின் பிஜேபி தலைமை வகிக்கக்கூடியவர்கள் குறுக்கே வட்டத்திலே செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான சமுதாயம் , மற்றும் பணம் பண்ணும் வேலை இதை மட்டுமே பார்த்துள்ளார்கள். கட்சி வேலை என்பது கடமைக்கு பார்த்துவிட்டு போனவர்கள் தான் அதிகம். மேலும்,

பிஜேபியின் கொள்கை, செயல்பாடு ,எதுவுமே நிறைவேற்றுவதில்லை. ஒரு பொது பிரச்சனையை கொண்டு சென்றால், அதற்கான தீர்வு ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இவரோ, இவருக்கு அடுத்து வந்தவர்களோ செயல்பட்டது இல்லை. எல்லாமே பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுள்ளார்கள்.

தற்போது முருகன் பல ஆயிரம் கோடிகள் இவரிடம் இருப்பதாக கட்சி வட்டாரம் பேசுகின்ற தகவல். எப்படியோ ஒன்றுமே இல்லாத, இருந்த முருகனை பிஜேபி இந்த அளவுக்கு இவரை உயர்த்தி இருப்பது, வாழ்நாள் முழுதும் நன்றி கடன் செலுத்துவாரா? நிச்சயம் இருக்க மாட்டார்.

ஏனென்றால், இவரைப் பற்றிய தகவல்கள் ஒரு சில தான் சமூக ஊடகங்களில் வருகிறது. உண்மை இன்னும் பல பேருக்கு தெரியாமல் தான் இருக்கிறது. இவர் வழக்கறிஞராக பணியாற்றிய போது, ஒரு சில அதிகாரிகள் எனக்கு நெருங்கிய நண்பர்கள், அவர்கள் சொல்லுவார்கள்.

ராஜேந்திரன் நீங்களாவது உட்கார்ந்த எங்களோடு சரிசமமா பேசுறீங்க, எல்.முருகன் உட்கார சொன்னால் கூட உட்கார மாட்டார். கையைக் கட்டிக் கொண்டே நின்று கொண்டிருப்பார். அவர்களுக்கு டீ ,வடை வாங்கி வந்து கொடுப்பார் என்று சொல்வார்கள்.

இது எப்போது என்னிடம் சொல்கிறார்கள்? என்றால், இவர் மந்திரியான பிறகு, இந்த விஷயத்தை என்னிடம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும்போது, ஒரு சில விஷயத்தை சொன்னார்கள். எல்லாவற்றையும் சொல்ல முடியாது.

இவர் கஷ்டப்பட்டு லா (LAW) முடிப்பதற்கு மூன்று வருடம் சென்னையில் ஒரு வீட்டில் தங்கி படித்துள்ளார். அந்த வீட்டிலே தான் சாப்பிட்டு உள்ளார். அவர்களும் ஒரு நடுத்தரமான குடும்பத்தை சார்ந்தவர்கள்.

இவர் மந்திரியான பிறகு, அந்தக் குடும்பத்தை பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லையாம் . அப்படிப்பட்ட ஒரு நபர் முருகன். இது தெரியாத பிரதமர் நரேந்திர மோடி ,இவருக்கு ஜாதியை பார்த்து மிகப்பெரிய பொறுப்புகளை கொடுத்து விட்டார்.

அதனால் ,பிஜேபிக்கு நஷ்டம் !முருகனுக்கு லாபம். இன்னும் சொல்லப்போனால், பிஜேபி கட்சியை தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும், தங்கள் சுயநலத்திற்கு தான் பயன்படுத்திக் கொண்டார்கள். பொதுநலத்திற்கு பிஜேபி அரசியல் கட்சியை பயன்படுத்தி இருந்தால் ,இந்நேரம் தமிழ்நாட்டில் அது ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கும்.

மேலும்,பொன் ராதாகிருஷ்ணனிலிருந்து தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன் மற்றும் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வரைக்கும், இங்கே பிஜேபி அரசியல் கட்சியை தங்களுடைய சுயநலத்திற்கு தான் பயன்படுத்திக் கொண்டார்கள்.

இதில் அண்ணாமலை கூடுமானவரைக்கும் அதிமுக, திமுகவுக்கு எதிரான ஒரு செயல்பாட்டை அரசியலில் எடுத்தார். இதில் பாதி பேர் அதிமுகவுக்கு ஆதரவாகவும் ,பாதிபேர் திமுகவுக்கு ஆதரவாகவும் ,பிஜேபியிலே இருந்திருக்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் அவர்களிடம் பணம் சம்பாதித்தார்கள். இறுதியாக அண்ணாமலை டிஎம்கே ஃபைல் (DMK FILES )என்று வெளியிடும்போது, அண்ணாமலையை டிஎம்கே (DMK)விலைக்கு வாங்கி விட்டார்கள் என்று தான் தகவல் வெளி வருகிறது. இது ரகசிய டீலிங் , பல அமைச்சர்களிடமிருந்து அண்ணாமலைக்கு பணம் போனதாகவே தகவல்.

மேலும்,ஒரு நேர்மையான அரசியல் கட்சி! ஊழலற்ற அரசியல் கட்சியை, தமிழ்நாட்டில் எப்படி மறைமுக ஊழல் கட்சிகளோடு கூட்டு சேர்ந்து பயணித்தார்கள்? என்பதுதான் உளவுத்துறை ரிப்போர்ட் பிரதமர் நரேந்திர மோடிக்கு போயிருக்கிறது என்ற தகவல்.

இப்போது ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டு பிஜேபியை கலைப்பதாக தகவல் வெளி வருகிறது. அது மிகவும் எதிர்கால பிஜேபியின் வளர்ச்சிக்கு நல்லது. புது இளைஞர்கள் ,கொள்கை பிடிப்பு உள்ளவர்கள் ,சமூக அக்கறை உள்ளவர்கள், அவர்களை வழி நடத்தக்கூடிய தலைவர்கள் தமிழ்நாட்டு பிஜேபிக்கு தேவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *